ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

வைக்கோ சுயரூபம்

இதெல்லாம் படிக்கனுங்க அண்ணாச்சி!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வைகோ வின் சுயரூபத்தை தோலுரிக்கும்
நண்பர் பாலா பரத் - ன் அருமையான பதிவு.
வேஷம் கலைக்கப்பட்டதால் ஆவேசமா..?
புரட்சிப்புயல் அய்யா வை.கோ அவர்களுக்கு வணக்கம்...
தங்களது மக்கள் நலக்கூட்டணி வலுவாக இருக்கிறது என்று கம்யூனிஸ்டு முத்தரசன் கூறியிருக்கிறார்...வாழ்த்துக்கள்...
கடந்த 2011ம் ஆண்டு அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவராக படித்துக் கொண்டிருக்கும் போது ஈழத்தமிழர்கள் பற்றி நான் எழுதிய தேசிய விலங்கு கவிதை தொகுப்புக்கு சிறப்பாக அணிந்துரை எழுதித் தந்தீர்கள்..பின்பு அந்த புத்தகத்தை தங்களது கையினால் தாயகத்தில் வைத்து அறிமுகப்படுத்துவது போன்ற புகைப்படம் எடுத்துக் கொண்டோம்...அப்போது கண் கலங்கியபடி என் கையை பற்றியபடி...
.ஈழம் பற்றி உணர்வுப்பூர்வமாக பகிர்ந்து கொண்டீர்கள்.தங்களது இன உணர்வும் ஈழ உணர்வும் என்னை அப்படியே மெய்சிலிர்க்க வைத்தது..
தற்போது கூட டாஸ்மாக்குக்கு எதிரான கடுமையான போராட்டங்களால் தமிழக அரசை கலகலக்க வைத்தீர்கள்..உங்கள் மீது துப்பாக்கிச்சூடு கூட நடத்தப்பட்டதாக புகார் கூறினீர்கள்..மாணவர்களை வெகுண்டு எழ சொன்னீர்கள்.டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குங்கள் என்று ஆவேசப்பட்டீர்கள்..நன்று..
ஆனால் தங்களது மகன் சிகரெட் கம்பெனி டீலர் நடத்துகிறாராமே என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டதற்கு பின்பு தங்களது டாஸ்மாக் போராட்டம் வெறும் புஸ் ஆனது தான் வேதனையிலும் வேதனை...
சரி விஷயத்திற்கு செல்வோம்... ஈழம் பற்றிய தங்களது நிலைப்பாட்டில் ஏதோ திமுக துரோகம் செய்ததாகவும்..திமுகவினர் ஈழ உணர்வு இல்லாதவர்கள் போன்றும் தாங்கள் தேர்தலுக்கு தேர்தல் கூறி வருகிறீர்கள்..அது உண்மையிலே தங்களது மனசாட்சிக்கு உறுத்தவில்லையா..நான் எனது தேசிய விலங்கு புத்தகத்தை கலைஞரிடம் கொடுப்பதற்காக அறிவாலயம் சென்றிருந்தேன்..முதலில் சண்முகநாதன் அவர்கள் என்னிடம் புத்தகத்தை பெற்றுக்கொண்டார்..தலைவரிடம் கொடுப்பதாக சொன்னார்..நானும் கிளம்பலாம் என்று முடிவெடுத்து ஆயத்தமாக அப்போது என்னை நோக்கி ஒருவர் ஒடி வந்தார்..
அவர் துறைமுகம் காஜா "தம்பி நீங்க தான் சட்டக்கல்லூரி மாணவரா..கவிஞரா..என்றபடி தம்பி தலைவர் உங்கள வரச்சொன்னாரு..என்று சொல்ல நான் கலைஞர் அவர்களின் பக்கத்தில் சென்றேன்..
கலைஞர் 'வாயா நீதான் இந்த புத்தகத்தை எழுதிய கவிஞரா..உணர்வுப்பூர்வமா இருந்துச்சியா..என்ன பண்ற..எந்த ஊரு என்று விசாரிக்க நான் சட்டக்கல்லூரி மாணவன்.. ஆண்டிமடம் எம் எல் ஏ சிவசங்கர் அறையில் தங்கி படிக்கிறேன் என்று சொல்ல நல்லா படிய்யா..நிறைய எழுது என்று சொன்னார்..ஈழ உணர்வு இல்லாமலா கலைஞர் அவர்கள் என்னை அழைத்து பேசினார்..
அவரது உணர்வு தான் ஈழப்போராளி தமிழ்செல்வன் இறந்த போது 'அப்படி சிரிப்பாயே தமிழ்செல்வா' என்று ஒரு இரங்கல் கவிதை எழுதியிருந்தார்..அப்போது கலைஞர் முதலமைச்சர்..
காங்கிரஸீடன் கூட்டணி வைத்திருந்தார்..ஆனாலும் அவரது ஈழ உணர்வு அவரை சும்மா இருக்க விடவில்லை..அந்த கவிதைக்காக கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
நீங்கள் விடுதலைப்புலிகளை பற்றி பேசியதற்காக பொடாவில் உங்களை கைது செய்த உங்களது அன்புசகோதரி ஜெயலலிதா..கலைஞரை கைது செய்ய சொல்லி காட்டமானஅறிக்கை வெளியிட்டார்..அதை நீங்கள் உங்கள் வசதிக்காக மறந்து விட்டீர்களா..வை.கோ அவர்களே..
நீங்கள் தற்போது கூட்டணி வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்கள் தனி ஈழத்திற்கு எதிரானவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதா..?
உங்களது முரண்பாடு என்பது சகிக்க முடியாமல் தான் உங்களது கட்சியிலிருந்த தலைவர்கள் காணாமல் போய் கொண்டிருக்கிறார்கள்..
திமுககாரன் ஏதோ ஈழ உணர்வு இல்லாதவன் போன்ற பரப்புரையை நிகழ்த்தும் வை.கோ அவர்களே உங்களுக்கு தெரியுமா..ஒரு நாள் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சிவசங்கரோடு காரில் பயணித்து கொண்டிருந்த போது அவருக்கு ஒரு தொலைபேசி வர..அதை பேசும் போது அவரது குரலில் சுரத்து குறைந்திருந்தது..பேசி முடித்து என்னிடம் திரும்பி 'பாலா பிரபாகரன கொன்னுட்டங்களாம்'என்று சொல்ல அவரது கண் கலங்கியிருந்தது..
பின்பு சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு சென்று என்டிடிவியில் பிரபாகரனின் உடலை பார்த்தவர் சோகத்தோடு வீடு திரும்பிய சிவசங்கர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்..உணர்வு இல்லாமலா உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும்..
இந்த சிவசங்கர் தான் செம்பருத்தி என்ற எட்டாம் வகுப்பு மாணவி தனது ஊருக்கு நூலகம் வேண்டும் என்று கேட்டதற்கு.. நூலகத்திற்கு கட்டிடம் கட்டி தந்து அந்த மாணவியின் கையாலே நூலகத்தை திறந்து வைக்கவும் செய்தவர்...இந்த நிகழ்வு ஊடகங்களில் வந்திருந்தது..இந்த சிவசங்கர் யார் தெரியுமா...?
நீங்கள் கழகத்தை விட்டு ஒடிப்போக முடிவெடுத்து...கூப்பிட்ட போது கழகம் எனது உயிர் என்று உங்களோடு வராது கலைஞரே தனது தலைவர் என்று இப்போதும் தள்ளாத வயதிலும் கழக கூட்டங்களில் பங்கேற்று வரும் எஸ்.சிவசுப்பிரமணியன் அவர்களின் மகன்...
சிவசங்கர் எஸ்.எஸ்
இவர் போன்ற ஆணிவேரை கொண்டு தான் கழகமானது ஆற்றலுடன் களமாடி வருகிறது..
கலிங்கப்பட்டியிலிருந்து நீங்கள் ரஷ்யா...கியூபா..என்று உலக அரசியல் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது யார் தலைவர் ‪#‎கலைஞர்‬..
இந்திய அரசியலிலே பாராளுமன்றத்தில் உங்களது முகத்தை அடையாளம் காட்டியது யார் தலைவர் கலைஞர் அவர்களும் திமு கழகமும் தான்..
‪#‎பேரறிஞர்அண்ணா‬ ஆரம்பித்து கலைஞர் கட்டிக்காத்த மாபெரும் கழகத்தை அழிப்பதற்காகத்தான் நீங்கள் கட்சி ஆரம்பித்தீர்களா..?
தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஊதாசினப்படுத்துவதற்கான காரணம் உங்களிடம் வெறும் பேச்சு மட்டுமே இருக்கிறது..நேற்று வந்த விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தயார் என்கின்றீர்களே உங்களது மநகூவில் நீங்கள் வெறும் செல்லாக்காசு என்பதை நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள் என்று தானே அர்த்தம்..
நீங்கள் தற்போது மகான் என்று சொல்கிறீர்களே எங்களது பக்கத்தூரு அங்கனூர் திருமாவளவன்
அவரை வன்னியர் மிகுந்த அரியலூர் பகுதியில் எம்பியாக்கி அழகு பார்த்தவர் எங்களது தலைவர் கலைஞர்..அவரது கட்சியின் உள்கட்டமைப்பையே வலுப்படுத்திக்கொண்டதே நாங்கள் அவரது கட்சிக்கு உள்ளாட்சி தேர்தலில் அளித்த இடங்களே...
தளபதி ஸ்டாலின்... நீங்கள் அதிமுக பினாமி என்று சொன்ன போது ஏன் ஆவேசப்படுகிறீர்கள்..?
பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம் என்ற பாணியிலான உங்களது தேர்தல் கால ஈழ வியாபாரத்தை...மேதகு பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் துப்பாக்கி தோட்டாக்களால் உங்களை துளைத்திருப்பார்..
தமிழக மக்களின் பிரச்சினையை பற்றி பேசுவதற்கு துப்பில்லாத வை.கோ அவர்களே.. ஒரு நாள் உங்கள் கழுத்தில் கிடக்கும் கறுப்புத்துண்டும் உங்களை வெறுக்கும்...உங்களது முரண்பாடு கண்டு உங்களது கழுத்தை நெரிக்கும்..நன்றி என்ற வார்த்தையை பழகிடாத தங்களுக்கு பெரும் நன்றி...
உங்களது மநகூக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...இந்திய அரசியலிலே 94 வயதில் போட்டியிடுகின்ற ஒரு முதுபெரும் தலைவரை முதுகில் குத்திய பெருமையை நீங்கள் அடைந்துள்ளீர்கள்..அவர் வெற்றி பெற உழைக்கும் பெரும் பேற்றினை நாங்கள் அடைந்துள்ளோம்...வணக்கம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நன்றி ..நண்பர் பாலா பரத்

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

அதிமுகவின் சாதனை (வேதனை)கள்...

அதிமுகவின் சாதனை (வேதனை)கள்...
*.வெற்றி பெற்ற முதல் நாள் உங்கள் அரசு என்ற வார்த்தை மறுநாள் நான், எனது அரசு என்றானதே ..
*.சமச்சீர்கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது.
*.பாட புத்தகங்களை அச்சடித்து 450 கோடியை வீணடித்தது.
*.அண்ணா நூலகத்தை நாசபடுத்தியது .
*.பஸ் கட்டணம் உயர்தியது.
*.பால் விலையை உயர்த்தியது.
*.மின்சார கட்டணத்தை உயர்த்தியது.
*.கடுமையான மின் தட்டுபாடை ஏற்படுத்தியது.
*.ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காது.
*.தொழில் வளர்ச்சியை முடக்கியது .
*.தொழில் நிறுவணங்கள் தமிழகத்தை விட்டே ஒடியது.
*.சட்டசபையை " பெஞ்ச் தட்டும் சபையாக " மாற்றியது.
*.கரும்பு விவசாயிகளை கதற விட்டது .
*.நெல் விவசாயிகளை நெம்பியெடுத்தது.
*.கிராம, தாலுகா அலுவலங்களில் இலவசமாக வழங்கபட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.
*.சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.
*.உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்து '
*.அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.
*.தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.
*.கொடநாட்டில் வாசம்.
*.பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.
*.கச்சதீவு மீட்பை கனவாக்கியது.
*.மாற்றுதிறனாளிகளுக்கு மரண பயம் காட்டியது.
*.இலக்கு வைத்து மது விற்றது.
*.தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.
*.ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.
*.நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.
*.மந்திரிகள் மண் சோறு தின்றது.
*.தாது மணலை கொள்ளையடித்தது
*.ஆவின் ஊழல் .
*.கமல்ஹாசனை கலங்கடித்தது.
*.விஜய்யை வியர்க்க வைத்தது .
*.சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.
*.கனிமவளத்தை களவாடியது.
*.அப்துல் கலாமை அவமதித்தது.
*.ஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியானது.
*.25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.
*.முட்டை, பருப்பு ஊழல்.
*.மின்சாரத்தில் கமிஷன், மணல் கொள்ளை.
*.லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது .
*.பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.
*.நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது .
*.ஜல்லிகட்டை ஜடமாக்கியது.
*.தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.
*.திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர் .
*.பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.
*.செவிலியரை சொல்லியடித்தது.
*.உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம் .
*.ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.
*.ஆர். கே. நகரில் இமாலய கள்ள ஓட்டு.
*.செம்பர பாக்கத்தம்மா என விருது வாங்கியது.
*.வெள்ள நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது.
*.கோவனை கைது செய்தது.
*.பேனர் கிழிப்பில் விஜயகாந்திடம் ஜகா வாங்கியது.
*.மிடாஸில் மிதக்கும் தமிழகம்.
*.ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.
*.விஷன் 2023 வெளியே வராமலே போனது .....
*.மன்னார்குடி வகையறாக்கள் வாங்கி குவிக்கும் தியேட்டர்கள்
என இந்த சாதனையை தான் ஜெயலலிதா முடித்துவிட்டதாக சட்டசபையில் பெருமை பீத்தியுள்ளார்...
அதிமுகவின் சாதனை (வேதனை)கள்...
*.வெற்றி பெற்ற முதல் நாள் உங்கள் அரசு என்ற வார்த்தை மறுநாள் நான், எனது அரசு என்றானதே ..
*.சமச்சீர்கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது.
*.பாட புத்தகங்களை அச்சடித்து 450 கோடியை வீணடித்தது.
*.அண்ணா நூலகத்தை நாசபடுத்தியது .
*.பஸ் கட்டணம் உயர்தியது.
*.பால் விலையை உயர்த்தியது.
*.மின்சார கட்டணத்தை உயர்த்தியது.
*.கடுமையான மின் தட்டுபாடை ஏற்படுத்தியது.
*.ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காது.
*.தொழில் வளர்ச்சியை முடக்கியது .
*.தொழில் நிறுவணங்கள் தமிழகத்தை விட்டே ஒடியது.
*.சட்டசபையை " பெஞ்ச் தட்டும் சபையாக " மாற்றியது.
*.கரும்பு விவசாயிகளை கதற விட்டது .
*.நெல் விவசாயிகளை நெம்பியெடுத்தது.
*.கிராம, தாலுகா அலுவலங்களில் இலவசமாக வழங்கபட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.
*.சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.
*.உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்து '
*.அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.
*.தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.
*.கொடநாட்டில் வாசம்.
*.பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.
*.கச்சதீவு மீட்பை கனவாக்கியது.
*.மாற்றுதிறனாளிகளுக்கு மரண பயம் காட்டியது.
*.இலக்கு வைத்து மது விற்றது.
*.தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.
*.ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.
*.நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.
*.மந்திரிகள் மண் சோறு தின்றது.
*.தாது மணலை கொள்ளையடித்தது
*.ஆவின் ஊழல் .
*.கமல்ஹாசனை கலங்கடித்தது.
*.விஜய்யை வியர்க்க வைத்தது .
*.சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.
*.கனிமவளத்தை களவாடியது.
*.அப்துல் கலாமை அவமதித்தது.
*.ஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியானது.
*.25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.
*.முட்டை, பருப்பு ஊழல்.
*.மின்சாரத்தில் கமிஷன், மணல் கொள்ளை.
*.லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது .
*.பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.
*.நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது .
*.ஜல்லிகட்டை ஜடமாக்கியது.
*.தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.
*.திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர் .
*.பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.
*.செவிலியரை சொல்லியடித்தது.
*.உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம் .
*.ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.
*.ஆர். கே. நகரில் இமாலய கள்ள ஓட்டு.
*.செம்பர பாக்கத்தம்மா என விருது வாங்கியது.
*.வெள்ள நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது.
*.கோவனை கைது செய்தது.
*.பேனர் கிழிப்பில் விஜயகாந்திடம் ஜகா வாங்கியது.
*.மிடாஸில் மிதக்கும் தமிழகம்.
*.ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.
*.விஷன் 2023 வெளியே வராமலே போனது .....
*.மன்னார்குடி வகையறாக்கள் வாங்கி குவிக்கும் தியேட்டர்கள்
என இந்த சாதனையை தான் ஜெயலலிதா முடித்துவிட்டதாக சட்டசபையில் பெருமை பீத்தியுள்ளார்...