வியாழன், 30 அக்டோபர், 2014

கலைஞரின் சாதனைகள்

கலைஞர் அவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்?
தெரியாத இளைய தலைமுறைகளுக்கு இதோ..
*******************************************************************************
1) இந்தியாவிலேயே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்.
2) குடியிருப்பு சட்டம் அதாவது வாடகை நிர்ணயம் போன்றவைகளை கொண்டுவந்தவர் கலைஞர்.
3) இலவச கான்கிரீட் வீடுகளை ஒதுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தவர் கலைஞர்.
4) கையில் இழுக்கும் ரிக் ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக் ஷா தந்தவர் கலைஞர்.
5) பிச்சைகாரர்களுக்கு மறு வாழ்வுமையம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
6) முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
7) குடிநீர் வடிகால் வாரியம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
8) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
9) 1500பேர் கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.
10) மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.
11.போக்குவரத்தை தேசியமயமாக்கிவர் கலைஞர்.
12.போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியவர் கலைஞர்.
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்து தந்தவர் கலைஞர்.
14.அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பை தந்தவர் கலைஞர்.
15.அரசியலமைப்பில் BC-31% , SC-18% ஆக உயர்த்தி தந்தவர் கலைஞர்.
16. P.U.C வரை இலவச கல்வி உருவாக்கி தந்தவர் கலைஞர்.
17. மே 1 சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தவர் கலைஞர்.
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவித்தவர் கலைஞர்.
19.முதல் விவசாயக் கல்லூரியை உருவாக்கி தந்தவர் கலைஞர்.(கோவை)
20. அரசு ஊழியர்கள் குடும்ப நலதிட்டம் தந்தவர் கலைஞர்.
21. அரசு ஊழியர்களுக்கு மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தவர் கலைஞர்.
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தவர் கலைஞர்.
23. கோயில்களில் குழந்தைகளுக்கான கருணை இல்லம் தந்தவர் கலைஞர்.
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.
25. நில விற்பனை வரையரை சட்டத்தை அமைத்தவர் கலைஞர்.
26.இரண்டாம் அலகு நிலக்கரி மின் உற்பத்தி நெய்வேலிக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.
27.பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலையை தூத்துகுடிக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.
28. SIDCO உருவாக்கியது கலைஞர்.
29. SIPCOT உருவாக்கியது கலைஞர்.
30.உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தவர் கலைஞர்.
31.பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தவர் கலைஞர்.
32. மனு நீதி திட்டம் தந்தவர் கலைஞர்.
33. பூம்புகார் கப்பல் நிறுவனத்தை தந்தவர் கலைஞர்.
34. பசுமை புரட்சி திட்டத்தை தந்தவர் கலைஞர்.
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தவர் கலைஞர்.
36. மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர் சீர் மரபினரை சேர்த்தவர் கலைஞர்.
37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
40. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தவர் கலைஞர்.
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தவர் கலைஞர்.
42. தாழ்த்தப்பட்டோர்களுக்கு இலவச கல்வி தந்தவர் கலைஞர்.
43. இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தவர் கலைஞர்.
44. சொத்தில் பெண்ணுக்கும் சம உரிமை உள்ளது என சட்டமாக்கியது கலைஞர்.
45. அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தவர் கலைஞர்.
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.
49. நேரடி நெல் கொள்முதல் மையம் அமைத்து தந்தவர் கலைஞர்.
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தவர் கலைஞர்.
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகத்தை அமைத்தவர் கலைஞர்.
52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டத்தை தந்தவர் கலைஞர்.
53. பெண்கள் சுய உதவிகுழுக்களை அமைத்து தந்தவர் கலைஞர்.
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.
56. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.
57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர்.
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டு வந்தவர் கலைஞர்.
59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தவர் கலைஞர்.
61. மெட்ராஸ் சென்னையாக்கியது கலைஞர்.
62. முதல் முறையாக விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடமளிக்க வழிவகை செய்தது கலைஞர்.
63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்து தந்தவர் கலைஞர்.
64. முதல் முறையாக விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்.
65. கிராமங்களில் கான்கீரிட் சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.
66. 24 மணி நேரமும் மருத்துவ சேவை தந்தவர் கலைஞர்.
67. தொழில்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
68. சமத்துவபுரம் தந்தவர் கலைஞர்.
69. கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டு வந்தவர் கலைஞர்.
70. இந்தியாவிலேயே முதன் முறையாக டாக்டர் அம்பேத்கார் பெயரில் சட்ட கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.
71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியவர் கலைஞர்.
72. உலக தமிழர்களுக்கு உதவ தமிழ் மெய்நிகர் பல்கலைகழகத்தை தந்தவர் கலைஞர்.
73. உருது அக்காடமி தந்தவர் கலைஞர்.
74. சிறுபான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தியவர் கலைஞர்.
75. உழவர்சந்தை திட்டத்தை தந்தவர் கலைஞர்.
76. வருமுன் காப்போம் திட்டத்தை தந்தவர் கலைஞர்.
77. கால்நடை பாதுகாப்பு திட்டத்தை தந்தவர் கலைஞர்.
78. 133 அடி திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில் வைத்தவர் கலைஞர்.
79. டைடல் பார்க் சென்னையில் அமைத்தவர் கலைஞர்.
80. வீட்டுமனை வழங்கும் திட்டத்தை தந்தவர் கலைஞர்.
81. மாவட்ட,மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தவர் கலைஞர்.
82. ஆசியாவிலேயே மிக பெரிய பேருந்து நிலையம் சென்னை கோயம்பேடு நிலையம் அமைத்து தந்தவர் கலைஞர்.
83. விவசாய கூலி வேலை செய்வோர்களுக்கு நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
84. பொது கூலிவேலை செய்வோர் நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
85. அறிஞர்களுக்கும்,தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டிதந்தவர் கலைஞர்.
86. 20 அணைகள் கட்டி தந்தவர் கலைஞர்.
87. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்.
88. மதுரை நீதிமன்றம் கட்டி தந்தவர் கலைஞர்.
89. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்.
90.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தந்தவர் கலைஞர்.
91. நமக்கு நாமே திட்டத்தை தந்தவர் கலைஞர்.
92. நலிவுற்ற குடும்பநல திட்டத்தை தந்தவர் கலைஞர்.
93. 9 மாவட்டங்களில் புதிய மாவட்டாச்சியர் அலுவலகங்களை கட்டி தந்தவர் கலைஞர்.
94. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தவர் கலைஞர்.
95. 13000 மக்கள் நலப்பணியாளர்கள் நியமனம் செய்தவர் கலைஞர்.
96. முதல் முறையாக 10000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தவர் கலைஞர்.
97. சென்னையில் போக்குவறத்து நெரிசலை தவிர்க்க 9 மேம்பாலங்களை கட்டி தந்தவர் கலைஞர்.
98. ரூ.1500 கோடியில் 350 துணை மின்நிலையங்களை உருவாக்கியவர் கலைஞர்.
99. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.
100. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.
101. வேலூர்,தூத்துகுடி,கன்னியாகுமாரியில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைத்து தந்தவர் கலைஞர்.
102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய். திட்டத்தை தந்தவர் கலைஞர்.
103. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்ணை மற்றும் பல வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில் தந்தவர் கலைஞர்.
104: free professional education (engg,medical,law,...) For first generation graduates : Plan implemented by @kalaignar89 @pugalmani55
104. நியாயவிலைக்டையில் 10 சமையல் பொருட்க்களை ரூ.50 க்கு தந்தவர் கலைஞர்.
105. விவசாய கடன் 7000 கோடியை தள்ளுபடி செய்யவைத்தவர் கலைஞர்.
106. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றவர் கலைஞர்.
107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ.1050 ஆக உயர்த்தியவர் கலைஞர்.
108. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ.1100 ஆக உயர்த்தியவர் கலைஞர்.
109. 172 உழவர் சந்தைகளாக உயர்த்தியவர் கலைஞர்.
110. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ.2000 ஆக உயர்த்தியவர் கலைஞர்.
111. மாவட்டத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
112. ரூ.189 கோடி செலவில் காவிரி-குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
113. ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி-கருமேனியாரு-நம்பியாரு நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
114. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தவர் கலைஞர்.
115. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் கலைஞர்.
116. 10 ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயபாடமாக்கியது கலைஞர்.
117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் பணி செய்தவர் கலைஞர்.
118. அர்ச்சகர்கள்,பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியவர் கலைஞர்.
119. ரூ.2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தவர் கலைஞர்.
120. இதயநோய்,சர்க்கரைநோய்,புற்று நோய்க்கான நலமான தமிழகம் திட்டம் தந்தவர் கலைஞர்.
121. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை தந்தவர் கலைஞர்.
122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புதிய நிறுவனங்களை வர செய்து 41,090 கோடி முதலீடை கொண்டுவந்தவர் கலைஞர்.
123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தந்தவர் கலைஞர்.
124. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தவர் கலைஞர்.
125. புதிய டைடல் பார்க் திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வேலியில் உருவாக்கியவர் கலைஞர்.
126. அனைத்து கிராம முறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.
127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000 புதிய பேருந்துகளை தந்தவர் கலைஞர்.
128. அருந்ததியினர் இனத்திற்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
129. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்தை உருவாக்கியவர் கலைஞர்.
130. 420 பேரூராட்சிகள் உருவாக்கி அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.
131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர்.
132. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நிறுவியவர் கலைஞர்.
133. ஆசியாவையே திரும்பி பார்க்கவைத்த புதிய சட்டமன்றம் நிறுவியவர் கலைஞர்.
134. அடையார் சூழியல் ஆராய்ச்சி பூங்கா அமைத்தவர் கலைஞர்.
135. சென்னை செம்மொழி பூங்கா அமைத்து தந்தவர் கலைஞர்.
136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தவர் கலைஞர்.
137. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தவர் கலைஞர்.
138. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர்.
139. ராமநாதபுரம்-பரமக்குடி கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர்.
140. கலைஞர் வீடு திட்டம் தந்தவர் கலைஞர்.
141. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியவர் கலைஞர்.
142. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர்.
143. 119 புதிய நீதிமன்றங்களை உருவாக்கியவர் கலைஞர்.
144. மாலை நேரம் மற்றும் விடுமுறை தின நீதிமன்றங்களை உருவாக்கி தந்தவர் கலைஞர்.
145. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வேலியில் உருவாக்கி தந்தவர் கலைஞர்.
146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்து தந்தவர் கலைஞர்.
147. சமச்சீர் கல்வி தந்தவர் கலைஞர்.
148. இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம் தந்தவர் கலைஞர்.
149. முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.
150. இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்.
151. இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.
152. பேருந்து,பால்,மின்சார கட்டணங்களை உயர்த்தாதவர் கலைஞர்.‪#‎ஏன்‬ என்றால் அது ஏழை,நடுத்தரவர்க்கங்களின் அவசிய பயன்பாடு.
153. மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ கல்லூரி,பொறியியல் கல்லூரி துவக்கியவர் கலைஞர்.
இப்படி இன்னும் பல கலைஞர் வகுத்த மக்கள் நலத் திட்டங்கள் அதிகம் இருக்கிறது.

புதன், 29 அக்டோபர், 2014

தமிழ் உணர்வையும் தமிழின உணர்வையும்

ஒரு விளக்கம்
>>>>>>>>>>>>>>>>>
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எமக்கில்லை!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தலைப்பு<> காற்றடிக்கும் திசையில் பயனிக்கும்
புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கடந்த ஞயிறு அன்று மும்பையில் கல்கண்டு ஆசிரியர் திரு. லேனா.. தமிழ்வாணன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்ததாகவும்
அதில் மும்பையில் சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்ற ஒரே தமிழர் கேப்பன் தமிழ்செல்வன் அவர்களுக்கும் பாராட்டு நடந்ததாகவும் அதில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை?ஒரு தமிழனுக்கு பாராட்டு விழா நடைபெருகிறது அதில் கலந்து கொள்ளவில்லை என்று அந்த நண்பர் என்னை கேட்டிருந்தால் இந்த விளக்கத்திற்கு அவசியமில்லை அவர் ஒருபடி மேலே போய் உங்கள் கட்சி தலைமை சொன்னால்தான் கலந்துகொள்விர்களா? என்ன தமிழுணர்வு? என்று ஒருவித இகழ்ச்சியோடு
நண்பரென்ற முறையில் நக்கலாக இந்த கேள்வியை என்னிடம் வைத்தார்
இது போன்று நிறைய நண்பர்களுக்கு இந்த சந்தேகம் இருக்கும்
திட்டமிட்டு திராவிடமுன்னேற்ற கழகத்துக்கு பாரதிய ஜனதாவை பிடிக்காது ஆகவே பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் சட்டமன்ற உறுப்பினரை
பாராட்ட. வாழ்த்த செல்லவில்லை என்று ஒரு வதந்தியை கிளப்பி
அதன்முலம் தமிழ்செல்ல்வன் அவர்களிடத்தில் ஆதாயம் பெற நினைக்கின்றவர்களுக்குத்தான் இனிவரும் எனது பதில்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தந்தை பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன ராஜாவுக்கு தேசிய அளவில் பதவி கிடைத்தபோது துணிந்து தமிழனுக்கு பதவிகிடைத்திருக்கிறது நான் வாழ்த்துவேன் என்று வாழ்த்திய தலைவரின் தொண்டர்கள் நாங்கள் .
டாக்டர் தமிழிசை அவர்களுக்கு மாநில பொருப்பு கிடைத்தபோது மகிழ்ந்து வாழ்த்து சொன்ன தலைவனின் வழியில் வந்தவர்கள் நாங்கள்
அப்படிபட்ட நாங்கள் தமிழனுக்கு விழா எடுக்கும்போது கலந்துகொள்ளமாட்டோமா ? தமிழ்ச்செல்வன் அவர்கள் ஜெயித்தவுடன் நான் சென்று வாழ்த்தி மலர் செண்டு கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்தினேன் இலக்கிய அணிச்செயலாளர் தமிழ்நேசன் சென்று வாழ்த்தினார்கள் இளைஞர் அணி அமைப்பாளர் சேசுராஜ் வாழ்த்தினார்
அப்படியிருக்க !வாழ்த்தவில்லை என்று குறை கூறுவது முழுபூசனிக்காயை சோற்றில் மறைக்கும் செயலல்லவா?
இருந்தாலும் ஒரு பேச்சுக்கு
விழா நடத்திய அமைப்பு எங்களுக்கு அழைப்பு அனுப்பியதா?
எங்கள் மாவட்ட செயலாளருக்கு செய்தியாவது கொடுத்ததா?
ஒரு போன் செய்துதாவது அழைப்பு விடுத்ததா?
பிறகு எப்படி நாங்கள் வரவில்லை என்று குறைபட்டுகொள்ளலாம்
விழா நடத்திய விழாவின் அமைபாளர் இதை கண்டு கொள்ள வில்லை!
இவர்களுக்கு என்ன வந்தது !
ஆனால் புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்கள் குய்யோ முய்யோ என்று பிதற்றுகிறார்கள் அய்யையோ ஒரு தமிழனுக்கு பாராட்டு விழா நடக்குது இருபது லட்சம் தமிழர்கள் கொண்ட மும்பையில் இரண்டு மிகபெரிய பிரபலங்கள் வந்திருக்க குறைவான் எண்ணிக்கையில் வந்துள்ளார்கள்
தமிழன் என்ற உணர்வு செத்துவிட்டது என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்
இந்த புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு
எப்படி இந்த தமிழுணர்வு வந்தது தமிழன் ஜெயித்துவிட்டான் என்பதாலா? அப்படியானால் மாநகராச்சி தேர்தலில் 20 வருடங்களாக ஜெயித்து வரும் தமிழர் அண்ணாமலை அவர்களுக்கு திருமதி லலிதா அண்ணமலை அவர்களுக்கும் ஏன் பாராட்டு நடத்தவில்லை ?காங்கிரஸ் கட்சியில் ஜெயித்து வரும் வேலுச்சாமி நாயுடு அவர்களுக்கு இந்த புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்கள் விழா எடுக்காதது ஏன் ? பிவண்டி மாநகராட்சியில் ஜெயித்த தமிழர் நித்தியாணந் சங்கர் அவர்களை இந்த புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு தெரியுமா? அம்பர்நாத் மாநராட்சியில் ஜெயித்த தமிழர் திரு சித்தார்த்தன் தமிழன் இல்லையா?
காங்கிரஸ் கட்சியும்
பாரதிய ஜனதாகட்சியும்
சிவசேனா கட்சியும்
நேசனல் காங்கிரஸ் கட்சியும்
நவநிமான்சேனா கட்சியும்
தமிழர் பிரிவுகளுக்கு தலைவர்களை அறிவித்தபோது இந்த புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு விழா எடுத்தார்களா?
அப்போதெல்லாம் உங்கள் தமிழுணர்வு எங்கே போனது ?
திராவிட முன்னேற்ற கழகத்தவர்கள் வரவில்லை என்று வருத்தபடும் புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்களே மும்பையில் எத்தனை அமைப்பு இருக்கிறது ஏன் அவர்களை குறைசொல்ல வில்லை ?
எங்களை மட்டும் நாகூசாமல் குறை சொல்லுகிறீர்கள்
இத்தனைக்கும் மராட்டிய மாநில தமிழ்சங்கங்களின் கூட்டமைப்புக்கு கேப்டன் தமிழ்செல்வன் அவர்கள் தானே தலைவர் பிறகு ஏன் ஆள்கள் வரவில்லை
கூட்ட அமப்பாளர்களின் சரியான அனுகுமுறை இல்லாததே காரணம் என்பது இந்த புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை
புதிதாக தோன்றி உள்ள தமிழ் ஆர்வலர்களே!
நீங்கள் மேடைகளுக்காகவும்
சால்வைகளுக்காகவும்
வேண்டுமானால் காற்றடிக்கும் திசையில் பயனிக்கலாம்
கொஞ்ச காலம் ஈழ ஆதரவு என மேடை பிடித்தீர்கள்
இபோது ஈழம் உங்களுக்கு மறந்திருக்குமே?
இனி தமிழன் உணர்வு என்ற தலைப்பில்
மேடையில் இடம் பிடித்துகொள்ளுங்கள் எங்களுக்கு கவலையில்லை
நாங்கள் வரவில்லையே என்று வருத்தப்பட்டிர்களே
அதுதான் எங்கள் வெற்றி
! நாங்கள் காற்றடிக்கும் திசையில் பயனிப்பவர்கள் அல்ல, கொண்ட கொள்கைக்காக எதிர் திசையிலும் பயனிப்பவர்கள்
எங்களுக்கு கொள்கை உண்டு
யாரை எப்போது எங்கே பாராட்ட வேண்டும்
என்று எங்களுக்கு தெரியும்
திராவிட முன்னேற்ற கழகத்தின்
தமிழ் உணர்வையும்
தமிழின உணர்வையும்
சந்தேகிக்க மும்பையில் மட்டுமல்ல
உலகத்திலே யாருக்கும் தகுதி இல்லை
அல்ல அல்ல எவனுக்கும் தகுதி இல்லை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
க . ஆறுமுகப்பாண்டியன்
மும்பை புறநகர் திராவிட முன்னேற்றகழக
இலக்கிய அணித்தலைவர்

விட்டுக்கொடுங்கள்

குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பொிதாகாமல் இருக்க....

1 )நானே பொியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

2 ) அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டு இருப்பதை விடுங்கள்.

3 )எந்த விஷயத்தையும் பிரச்சனையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.

4 )சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.

5 )நீங்கள் சொன்னதே சரி செய்த சரி என்று வாதாடாதீர்கள்

6 ) உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

7 ) மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.

8 ) அளவுக்கு அதிகதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

9 ) எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்

10) கேள்விப்படும் எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.

11 )அற்ப விஷயங்களைப் பெரிதுப்படுத்தாதீர்கள்.

12 ) உங்கள் கருத்துக்களில் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

13 ) மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.

14 ) மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்

15 ) புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்

16 ) பேச்சலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்தைகளையும் தேவையில்லாதமிடுக்கையும் காட்டுவதைத்தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்

17 ) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்

வியாழன், 2 அக்டோபர், 2014

சீமானை தெரிந்து கொள்ளுங்கள்

சர்ச்சைக்குரிய லைக்கா மொபைல் நிறுவனம்,  ஈழவிடுதலைப் போராட்டம்,  தமிழகத்து நவீன அரசியல் பிரம்மாக்கள் ,  இப்படி ஒரு சுற்றுவட்டத்தில் தமிழக அரசியல் அரங்கு இப்போதைக்கு சிக்கியிருக்கிறது. 
அதையொட்டிய வாதப்பிரதிவாதங்களும் நியாயப்படுத்தல்களும்  மேடையேற்றப்பட்டு சிலநாட்களாக சூடுபிடித்த சொற்பொழிவுகளாக அனல்பறக்க விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நிழலில் நின்று கழுத்து நரம்பு வெடிக்குமளவுக்கு முழங்கித்தள்ளிய சீமானும், அவருடைய நாம்தமிழர் கட்சியும் என்பதே மிக மிக வருத்தத்திற்குரியதாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து தமிழகத்து அரசியல்வாதிகளால் நிர்வாணமாக்கப்பட்ட ஈழ தேசிய அரசியல்,   நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்பட்ட சீமானால் மீண்டும் ஒரு தாக்குதலை சந்தித்திருக்கிறது. சீமான் தெரிந்து இந்த குளப்பத்துக்குள் கலந்துவிட்டாரா அல்லது அவசரமான முடிவெடுப்பினால் சிக்கலில் சிக்கிவிட்டாரா, அல்லது அதையும் தாண்டி முகத்துக்கு அஞ்சி சில விடயங்களை நியாயப்படுத்தவேண்டிய இக்கட்டில் சிக்கியிருக்கிறாரா என்பது நிச்சியம் காலப்போக்கில் புரியப்படும் என்பது வரலாற்றில் நாம் கண்கூடாக கண்ட உண்மை.

உலகத்தமிழர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்ற ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து களம் இறங்கிய சீமான் 2009,ல் இருந்து 2011,வரை தனது அரசியல் அந்தஸ்த்துக்காக அதிகம் சிரமப்படாத காலமாக இருந்தது. 

ஐந்து சிறைவாசம், அறுநூறுக்கு மேற்பட்ட மக்களை கூட்டாமல் மக்கள் இணைந்துகொண்ட மேடைகள்,  சலிப்படையவைக்கக்கூடிய காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளின் வஞ்சகத்தனமான அரசியலால் வெறுப்படைந்த மாற்றுக்கருத்துக்கொண்ட பொதுமக்களின் இணைவு ஆகியவற்றுடன்  ஈழத்தின் இனப்படுகொலை அனுதாபமும்  சீமானுக்கு சாதகமாகி மிக குறுகிய காலத்தில் அவரை ஒரு தனித்தன்மை கொண்ட உறுதிமிக்க அரசியல்வாதியாக உலக தமிழினத்தின் முன் வளர்த்துவிட்டிருந்தது.

1940 களில் தினத்தந்தி பத்திரிகை ஸ்தாபகரான சி பா ஆதித்தனாரால் தொடங்கப்பட்டு முடங்கிக்கிடந்த "நாம்தமிழர்" என்ற இயக்கத்தை சரியான சந்தர்ப்பத்தில் சீமான் கையிலெடுத்து அதில் புலித்தோல் ஒன்றையும் விரித்து சம்மணமிட்டு இதமாக உட்கார்ந்துகொண்டார். உட்கார்ந்தது மட்டுமல்லாமல் புரட்சிகரமான சில வேலைத்திட்டங்களையும் பரப்புரைகளையும் அவர் மேற்கொண்டார்.

2009,ல் முள்ளிவாய்க்கால் உச்ச இன அழிப்பின்போது  சோனியாவின் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து அன்றைய தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி ஆடிய சதிராட்டம் மக்களை வெறுப்பின் உச்சத்துக்கு கோண்டுசென்று  உணர்வாளர்கள் தெருத்தெருவாக தீக்குளித்து உயிரை மாய்த்து தமது எதிர்ப்பை பதிவுசெய்யுமளவுக்கு கீழ்த்தரமாக மாற்றம்பெற்றிருந்தது.அப்போது பற்றிப்பிடிக்க அலைபாய்ந்த ஈழ ஆதரவுக் கைகளுக்கு படர் கொம்பாக சீமானின் அரசியற் பிரவேசம் வரப்பிரசாதமாக அமையப்பெற்றிருந்தது.

35/40 வருட ஈழப்போராட்டம் 2009,ல் முள்ளிவாய்க்காலில் பின்னடைவை சந்தித்து போராட்டம் நிறுத்தப்பட்டபோது.  தமிழகத்திலிருந்து பல்வேறு அமைப்புக்களுடன் சீமானும் ஈழ ஆதரவுக்காக குரல் கொடுக்கத்தொடங்கியிருந்தார்.  ஈழத்தில் போராட்டத்தலைமையின் வெற்றிடம் உணர்வுமயமாக பேசத்தெரிந்த சீமானுக்கு சாதகமாக அமைந்தது.

இனப்படுகொலையின்போது சர்வதேசத்தை தலையிடாமல் தந்திரமாக சதிசெய்து தடுத்த இந்தியாவின் சதி,  ராஜபக்‌ஷவுக்கு முண்டு கொடுத்து அரசியல் செய்த இந்திய தமிழக அரசியற் கட்சிகள் மீதிருந்த வெறுப்பு,  கொள்கையில் விடுதலைப்புலிகள் தலைவரின் சார்புத்தன்மை புலிக்கொடியின் கவர்ச்சி சீமானின் உணர்வுமயமான பேச்சு இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து விடுதலைப்புலிகளின் மாற்றாக தமிழகத்து கிராமிய இளைஞர்கள் மத்தியில் நாம்தமிழர் இயக்கம் ஒரு பலமான சக்தியாக தலையெடுத்தது.
விடுதலைப்புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் நடத்தை,   மற்றும் தேசியத்தலைவரின் உறுதியான கொள்கையை பின்பற்றுவதாக சீமான் முழங்கிய வீச்சு தேசியத்தலைவரின் உருவப்பதாதைகளை பொலீசாருக்கும் பயப்படாமல்  நாம்தமிழர்கட்சியின் மேடைகளில் அலங்கரித்தபோது  தமிழகம் எங்கும் சீமானுக்கு மிகப்பெரிய வரவேற்பும் ஒரு ஈழவிடுதலை போராளிக்கான அங்கீகாரமும் கிடைத்து.  மிகப்பெரிய மரியாதையையும் நாம்தமிழர் கட்சி பெற்றுக்கொண்டது.

நாளடைவில் நாம்தமிழர் இயக்கம் அரசியற்கட்சியாக மாற்றப்பட்டு வாக்கு அரசியல்,  முதலமைச்சர் நாற்காலி என்ற எதிர்பார்ப்புக்கள் என்று எப்போ பேசத் தொடங்கியதோ அன்றே தமிழ்நாட்டின் பாரம்பரிய அரசியற் கட்சிகளின் கொள்கையை சீமானும் நாம்தமிழர் இயக்கமும் பின்பற்றத்தொடங்கிவிட்டனர் என்ற ஐயம் கலந்த சோர்வுடன் ஒரு தொய்வும் பின்தொடர்ந்து வந்தது.

கட்சிக்குள் இடம்பெற்ற பதவியை பிடிப்பதற்கான கொள்கை மாற்றத்தால் சிலவிடயங்களில் சமரசம் செய்யவேண்டிய கட்டாயங்களும் விட்டுக்கொடுப்புக்களும் வெளியில் இருப்பவர்கள் அவதானிக்கமாட்டார்கள் என்று சீமான் நினைத்தாலும் பார்வையாளர்கள் மத்தியில் நாம்தமிழர் கட்சியின்  நடவடிக்கைகள் சமிபகாலமாக தொடர்ந்து உணரப்பட்டே வந்தன.

தமிழக அரசியலில் ஒரு வித்தியாசமான போக்கை பின்பற்றிவந்த சீமான் தேசியத்தலைவரின் உறுதியான கொள்கையை விட்டு நழுவி மெல்ல மெல்ல திராவிடகட்சிகளின் கொள்கையை பின்பற்றத்தொடங்கினார். அப்போகூட சீமானை ஒரு சராசரி அரசியல்வாதியாக உருவகப்படுத்த அதிகமான ஊடகங்கள் விரும்பவில்லை.

2010, ம் ஆண்டு ஈழ ஆதரவு இயக்கமாக தொடங்கப்பட்ட நாம்தமிழர் இயக்கம் 2014 ஒகஸ்டில் நான்கு ஆண்டுகளை பூர்த்திசெய்து ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்துக்குரிய கட்சியாக கேள்விக்குறிக்குள்ளாகியிருக்கிறது.

ஆனாலும் தமிழ்நாட்டில் அக்கட்சி உடனடியாக காணாமல்போய்விடும் என்று எவரும் சொல்லிவிட முடியாது ஏனெனில் ஈழ ஆதரவுப்போக்கை ஆரம்பத்தில் கடைப்பிடித்து அரசியல் செய்துவந்த கருணாநிதியின் திமுக, ராமதாஸின் பாமக, திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இன்று சீமான் நியாயப்படுத்தும் அதேபோன்ற நியாயப்படுத்தல்களையே கொள்கையாக்கி அரசியல் செய்து வருகின்றன எனவே சீமானின் நாம்தமிழர் கட்சியும் இவர்களுடன் கூட்டுச்சேர்ந்து சராசரி அரசியலில் ஈடுபட்டு கரையேறக்கூடும்.    ஆனால் முன்னர் உள்ளதுபோன்று மக்களின் உணர்வுமயமான ஆதரவும் மதிப்பு மரியாதையும் தொடர்ந்து சீமானுக்கு இருக்கும் என்பது சந்தேகமே.

இப்போ நாம்தமிழர் கட்சி தொன்மையான திராவிடக் கட்சிகள்போன்று தமிழ்நாட்டுக்கான அரசியற் கட்சிகளின் பண்பாட்டு குணாம்ஷங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி அரசியல் செய்யத்தொடங்கியிருக்கிறது. காலப்போக்கில் கருணாநிதி ஜெயலலிதா திருமா ராமதாஸ் ஆகியோரது வரிசையில் சீமானும் இணைந்து கொள்ளுவார் என்பதில் எவரும் ஐயப்படத்தேவையில்லை.

ஆனாலும் சீமான் தான் கொண்ட ஆரம்ப  கொள்கையில் இருந்து மாறிவிடவில்லை என்று காட்டிக்கொள்ளுவதற்காக மிகப்பிரயத்தனப்படுவதாகவே தெரிகிறது, இருந்தும் சீமானின் நியாயப்படுத்தல்களில்  ஒன்றிரண்டு ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. அந்த ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை வைத்து அனைத்து தவறுகளையும் நியாயப்படுத்த முனைவது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

நேற்று மாலை RED PIX  தமிழ் நியூஸ் ஊடகத்தின்மூலம் தன்னிலை விளக்கம் ஒன்றை நேர்காணல்போல தயாரித்து சீமான் வெளியிட்டுள்ளார். அந்த நேர்காணலில் சீமான் தன்னை நியாயப்படுத்துவதை விடவும் பாரிவேந்தர் என்கிற பச்சைமுத்துவையும்,   லைக்காவின் உரிமையாளர்களில் ஒருவரான சுபாஸ்கரனையும்,  ராஜபக்‌ஷவையும் நியாயப்படுத்துவதிலேயே அதிக அக்கறை செலுத்தினார்.

லைக்கா மொபைல் சுபாஸ்கரனுக்கு சினிமா எடுத்துத்தான் வாழவேண்டுமென்ற அளவுக்கு அவர் இல்லை என்று மிகப்பெரிய நற்சன்றையும் நேர்காணலின்போது சுபாஸ்கரனுக்கு சீமான் வழங்கியிருந்தார்.

பாரிவேந்தர் பச்சைமுத்து ஒன்றிரண்டு வறிய மாணவர்களுக்கு இலவசகல்வி அளிப்பது உண்மைதான்,  மறுப்பதற்கில்லை  அதற்காக நாற்பதுவருடகால போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் விதமாக வரலாற்றை திரித்து ஆவணப்படுத்தி விடுதலைப்போராட்டத்தையும் தேசியத்தலைவரின் கொள்கையையும் எழுந்தமானத்தில் சித்தரித்து சேறடிக்கும் "புலிப்பார்வை"  என்ற திரைப்படத்தை  எவராலும் அனுமதிக்க முடியாது. அப்படித்தான் இல்லாமல் அந்த திரைப்படம் தடுக்க முடியாமல் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி  ஆட்சியாளர்களின் உதவியுடன் வெளியிடப்பட்டாலும் அந்த திரைப்படத்துக்கான முழு எதிப்பை / புறக்கணிப்பை பதிவுசெய்யவேண்டிய வரலாற்று கடமை அனைவருக்கும் உண்டு. 

அந்த யதார்த்தத்தை உணர்ந்துகொண்டதால்த்தான் இன்றைக்கு ஐம்பதுக்கு மேற்ப்பட்ட தமிழக பொது அமைப்புக்கள் புலிப்பாரவைக்கு எதிராக போராட களத்தில் இறங்கியிருக்கின்றன.

ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து விடுதலையையை எதிர்நோக்கி போராடும் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவன்  எதிரே காணப்படும் தடையை அல்லது துரோக செயற்பாட்டை நேரடியாக (இப்படியான ஒரு)  களத்தில் சந்திக்கும்போது கொள்கையை விட்டு விலகாமல் முகங்கொடுத்து எதிர்த்து நிற்பதுதான்   உலகத்தில் தோன்றிய விடுதலை போராட்ட மரபாளிகளின் அடிப்படை தத்துவமாக இருந்து வருகிறது.  இங்கு மக்கள் உணர்வுகளை புறந்தள்ளி தலைவனும் துரோகிகளும் குளிர்சாதன அறைகளில் ஒன்றுகூடி முகத்துக்கஞ்சி திருத்தங்கள் சமரசம் விட்டுக்கொடுப்பு போன்ற பொறிகளில் சிக்கிவிட்டால் போராட்டமே அழிந்துபோகும் சூழல் உருவாகிவிடும்,

தலைவனின் உறுதியும் நேர்மையும் மட்டுமே இப்படிப்பட்ட போராடங்களில் தொண்டர்களினதும் மக்களினதும் மூலதனமாக கணிக்கப்படுவதுண்டு. தலைவனின் உறுதியற்ற தன்மை தொண்டர்களையும் வெகுஜனத்தையும் இழக்கவேண்டிய மிகப்பெரிய இக்கட்டில் கொண்டுசென்று சேர்க்கும் என்பதை அனுபவசாலிகள் தவிர சீமான் போன்ற சாதாரனமானவர்களால் உணரமுடியாது.

தலைவர் பிரபாகரன் அவர்கள் சீமானிடம் போராட்டம் பற்றிய திரைப்படங்களை எடுத்து விடுதலையை வென்றுதரும்படி கேட்டதாக சீமான் ஒரு நியாயப்படுத்தல் மேடையில் பேசியிருந்தார்,  அதற்கு சரியான படங்களை பச்சமுத்துவை வைத்து புலிப்பார்வையும்,  லைக்காவின் முதலீட்டில் விஜயை வைத்து கத்தியும் எடுக்கப்பட்டிருக்கிறது.

தலைவர் பிரபாகரன் சினிமாமூலம் விடுதலையை வென்றுவிடலாம் என்று நம்பியிருந்தால் துப்பாக்கி தூக்கி போராடிய நாற்பது வருடங்களில் துப்பாக்கிகளை தூக்கி வீசிவிட்டு ஒரு 400 சினிமாப்படங்களை எடுத்து விடுதலையை வென்றிருக்கலாம் துரதிர்ஷ்டமாக அது அடக்காமல் போய்விட்டது.

லைக்கா பற்றிய பின்னணி பற்றி எவரும் முன்கூட்டி தெரிவிக்காததால் 80 சதவீதம் எடுக்கப்பட்ட கத்தி திரைப்படம் தம்பி விஜய்க்காகவும் தம்பி முருகதாஸுக்காகவும்  லைக்காவின் சொத்தான கத்தி திரைப்படத்தை தடைசெய்ய முடியாது என்றும் , எந்த கலந்துரையாடல் மற்றும் சம்பந்தப்பட்ட சமூகத்தின் விருப்பு வெறுப்பு அவர்களது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை அறியாமல் பணமும் அடியாட்களும் அரசியல்ச்செல்வாக்கும் இருக்கின்றதென்ற மமதையில் பாலச்சந்திரனை பயங்கரவாதியாக சித்தரித்து எடுக்கப்பட்ட  புலிப்பார்வை திரைப்படம் பச்சைமுத்து என்ற ஒரு தனிமனிதருக்காக  திருத்தம் செய்து வெளியிடப்படும் என்று சீமான் தனது நேர்காணலில் சர்வ சாதாரணமாக சொல்லி முடித்துவிட்டார்.

ஒருநாள் தமிழீழப்பயணத்தை பாதுகாப்புடன் மேற்கொண்டு தேசியத்தலைவருடன் ஒரு படம் எடுத்து விடுதலைப்புலிகளின் ஒருசில பாசறைகளை பார்த்து திரும்பிய சீமான் விடுதலைப்போராட்டத்தைப்பற்றி  தம்பி பாலச்சந்திரன் பற்றி இவ்வளவு சூழுரைக்கிறார் என்றால் அந்த மண்ணில் பிறந்து ஒவ்வொரு அடி மண்ணையும் காலால் அளந்து நடந்து, ஒவ்வொரு போராளியுடனும் ஒவ்வொரு பொழுதை கழித்து,   பல இலட்சம் குண்டுகளை எதிர்கொண்டு,  குடிநீரின்றி உணவின்றி ஆயிரம் இடப்பெயர்வுகளை சந்தித்து,  பதுங்கு குழியில் பகலிரவாய் கிடந்து,  இராணுவ சிறையில் சித்திரவதைப் பட்டு கை கால் இழந்து முள்ளிவாய்க்காலை முற்றாக தரிசித்து,  தாய் தந்தை உடன்பிறப்புக்கள் மனைவி கணவன் பிள்ளைகள் என்று எல்லாவற்றையும் இழந்து உயிர் ஒன்றுதான் மிச்சம் என்று நிர்க்கதியாக நிற்கும் ஒருவரின் குமுறல் எப்படியிருக்கும் என்பதை சீமான் மானசீகமாக புரிந்துகொள்ளவேண்டும் என்றே இந்தப் பதிவு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றது,

இன்னுமொரு விடயத்தை இங்கு வெளிப்படுத்தவேண்டிய சமூகப்பொறுப்பு இருப்பதால் அவைகளும் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

கேபி எனப்படும் பத்மநாதன் என்பவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த ஒருவர் என்பது அனைவரும் அறிவர் அவர் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் மிக நெருக்கமான நண்பராகவும் இருந்தவர். இன்று ஶ்ரீலங்கா அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு ராஜபக்‌ஷவின் சகோதரர் கோத்தபாயவின் ஒற்றராக செயற்பட்டு வருகிறார்.

பத்மநாதன் தலைவர் பிரபாகரனின் நண்பராக இருந்தவர் என்பதால் அவரது  இன்றைய செயற்பாடுகளை மக்கள் வரவேற்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை ,  லைக்காவுக்கும் பத்மநாதனுக்கும் தொடர்பு உண்டு.  அதேபோல எவராக இருந்தாலும் அது சீமானாக இருந்தாலும் கொள்கைரீதியாக அவர்கள் புறக்கணிக்கப்படுவர் என்பதே யதார்த்தம்.

சர்வதேச அரசியல் இலாபத்திற்காக இன்று கேபி கிளிநொச்சியில் அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள ஒரு அறக்கட்டளையின் தலைவராக சிறீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷ்வினால் நியமிக்கப்பட்டு செயற்பட்டு வருகிறார்.

கேபியை எந்த பத்திரிகையோ ஊடகமோ நேரடியாக அணுகி பேட்டி எடுத்துவிட முடியாது.  ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் மத்திய அமைச்சராக பதவி வகிக்கும் டக்ளஸ் தேவானந்தா இலங்கையில் "தினமுரசு" என்கின்ற பத்திரிகையை நடத்திவருகிறார் அப்பத்திரிகை அமெரிக்கா கனடா, ஐரோப்பிய நாடுகள் அனைத்துக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது, அப்பேற்பட்ட அமைச்சரின் பத்திரிகை கேபியை நேர்காணல் ஒன்று நடத்த விரும்பியபோது கோத்தபாயவிடம் அனுமதி பெற்று அவர் தொலைபேசிமூலம் அனுமதி அளித்ததன் பின்னரே நேர்காணலுக்கு சமூகமளிக்கமுடியும் என்று கேபி தரப்பால் சொல்லப்பட்டிருக்கிறது'

அதே கேபியை தமிழகத்திலுள்ள பாரிவேந்தர் பச்சைமுத்துவின் "புதியதலைமுறை" தொலைக்காட்சி சென்ற ஆண்டு நேரில்ச்சென்று சர்வ சாதாரணமாக நேர்காணல் ஒன்றை நடத்தி ஒளிபரப்பியது.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு பாலச்சந்திரனுக்கு இரங்கல் கவிதை எழுதி சினிமாபடம் எடுக்கும் கொள்கை கொண்ட பச்சைமுத்துவின் தொலைக்காட்சி கிளிநொச்சிக்கு சென்று நேர்காணல் நடத்த ஶ்ரீலங்கா இராணுவப்புலனாய்வாளர்கள் சாதாரணமாக விட்டு விடுவார்களா? என்பதையும் சீமான் விளங்கப்படுத்தவேண்டும்.

அதுமட்டுமன்றி பச்சமுத்துவின் எம் ஆர் எம் பல்கலைக்கழகம் ஶ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடன் இலங்கையில் மிகப்பெரிய கலைக்கல்லூரியை நடத்தி வருகிறது.  இறுதியாக கிடைத்த செய்திகளின்படி டக்ளஸ்தேவானந்தாவின் ஆதரவுடன் எம் ஆர் எம் கல்விக்குழுமம் யாழ்ப்பாணத்தில் ஒரு கல்லூரியையும் கேபி எனப்படும் பத்மநாதனின் ஆதரவுடன் கிளிநொச்சியில் ஒரு கல்லூரியையும் விரைவில் நிறுவ இருப்பதாக நம்பகமான செய்திலள் தெரிவிக்கின்றன.

பாரிவேந்தர் எனப்படும் பச்சைமுத்து விடுதலைபோராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டாம். அவர் தமிழர்களின் ஆதரவாளரா அல்லது ராஜபக்‌ஷ்வின் நண்பரா என்பதையும் சீமான் அறிந்துகொண்டால் அடுத்த மேடையில் பேசுவதற்கு கருப்பொருளாக இருக்கும்.

 
நன்றி ................ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.