புதன், 24 செப்டம்பர், 2014

கலைஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்


கலைஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் , அதில் அவர் மறைத்து வைத்தது எதுவுமே இல்லை….
இதோ அவரைப் பற்றி அவரே சொன்னதைக் கேளுங்கள் ….
கலைஞரிடம் ஐம்பது கேள்விகள் என்ற தலைப்பில் அவரது சட்டமன்ற பொன்விழாவின் போது ராணி வார இதழில் வெளியானது இந்தக் கேள்வி – பதில்..
1.கேள்வி : சட்டசபையில் முதல்நாள் அனுபவம் எப்படியிருந்தது?
கலைஞர் : பந்தயக் குதிரையைப் படைவீரர் அணிவகுப்பில் நிறுத்தி வைத்தது போல் இருந்தது.
2.கேள்வி : பேசிய முதல் பேச்சு?
கலைஞர் : நான் 1957இல் வெற்றிபெற்ற குளித்தலைத் தொகுதியில் உள்ள “நங்கவரம்” பண்ணை விவசாயிகளின் “கையேரு வாரம்-மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினைக்காகப் பேசியதே பேரவையில் எனது முதல் பேச்சு.
3.கேள்வி : அதிக நேரம் பேசிய நாள்?
கலைஞர் :அதிக நேரம் பேசிய நாட்கள் பல உண்டு. இருப்பினும் 1997ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு, நான் அளித்த பதிலுரைதான் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது.
4.கேள்வி : உங்களுக்கு பிடித்த சட்டமன்றப் பேச்சு?
கலைஞர் : அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சியில்: எதிர்கட்சித் தலைவராக நானிருந்த போது, “பூம்புகார்” நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட இருந்த “பல்கேரியா பால்டிகா” என்ற கப்பல் பேர ஊழல் குறித்து இருபது ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துவைத்துக் குற்றம் சாட்டிப்பேசியதால், அந்த இரு கப்பல்களுமே வாங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்பது சட்டப் பேரவையின் பரபரப்பான வரலாறு.
5.கேள்வி : உங்களுக்குப் பிடித்த சட்டமன்றப் பேச்சாளர்?
கலைஞர் : எந்த மன்றமானாலும் சரி, அங்கே கொடிமரம் போல் உயர்ந்துநிற்கும் ஆற்றல்மிகு பேச்சாளர் அறிஞர் அண்ணாதான்.
6.கேள்வி : பிடித்த சபாநாயகர்?
கலைஞர் : ஆரம்ப காலத்தில் டாக்டர்.யு.கிருஷ்ணராவ்-இடைக்காலத்தில் செல்லப்பாண்டியன்-அடுத்து கே.ராஜாராம்-அண்மைக் காலத்தில் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்.
7.கேள்வி : உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பதில்?
கலைஞர் : 24.03.1960 அன்று சட்டப் பேரவையில், ஓவியர் வேணுகோபால்சர்மா அவர்களால் “தபால் தலைகளுக்கு என்று வரையப்பட்ட திருவள்ளுவர் ஓவியத்தைச் சட்டமன்றத்தில் வைக்கும் உத்தேசம் அரசாங்கத்திற்கு உண்டா?” என்று நான் கேட்டதற்கு பெரியவர் மாண்புமிகு பக்தவத்சலனார் அவர்கள் எழுந்து, “சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்கள் அம்மாதிரி ஒரு படத்தை இங்கு சமர்ப்பிக்க முன்வந்தால், கனம் சபாநாயகர் அவர்கள் அதைப்பற்றி யோசிப்பார்கள்” என்று கூறிய பதில் தான் எனக்குக் கிடைத்த மறக்க முடியாத பதில் என்று சொல்வேன். ஏனென்றால் அந்தப் பதிலின் காரணமாகத்தான் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் 22.3.1964 அன்று அன்றையக் குடியரசுத் தலைவர் மேதகு ஜாகீர் உசேன் அவர்களால் திருவள்ளுவரின் திருவுருவப்படம் திறந்து வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகத்தான் தி.மு.கழக ஆட்சியில் பேருந்துகள், அரசு விருந்தினர் மாளிகைகளில் திருவள்ளுவர் படங்கள் என்று தொடங்கி, வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் வானுயர் வள்ளுவர் சிலை என ஆயிற்று!
8. கேள்வி : நீங்கள் சொன்ன மறக்க முடியாத பதில்?
கலைஞர் : திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்ற கொலைக்காக அமைக்கப்பட்ட பால் கமிஷன் அறிக்கை மீது விசாரணை நடத்தாதது குறித்தும், திருச்செந்தூர் கோவிலில் வைரவேல் களவாடப்பட்டதைக் கண்டித்தும் நான் எதிர்கட்சித்தலைவராக இருந்த போது திருச்செந்தூர் நடைபயணம் சென்றேன். அதைப்பற்றி அவையிலே ஆளுங்கட்சி உறுப்பினர், “கருணாநிதி திருச்செந்தூர் போனார், முருகனே அவரைப் பார்க்கப்பிடிக்காமல் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு வந்து விட்டார்!” என்றார் கிண்டலாக. உடனே நான் எழுந்து, “திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் காணாமல் போய்விட்ட விஷயம் இப்போது தான் தெரிகிறது!” என்று நான் கூறியதும் அவை சிரிப்பிலே ஆழ்ந்தது. நான் சொன்ன மறக்க முடியாத பதில்களில் இதுவும் ஒன்று.
9.கேள்வி : சட்டமன்றத்தில் சிறப்பான முதல்வர் யார்?
கலைஞர் : பெருந்தலைவர் காமராஜர், அவையிலே பேசாமலேயே அமர்ந்திருந்து, ஆனால் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்தியவர்.
10.கேள்வி:சட்டமன்றப் பேச்சுக்கும்- பொதுக்கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?
கலைஞர் : மனக்கணக்குக்கும்-வீட்டுக்கணக்குக்கும் உள்ள வித்தியாசம்.
11. கேள்வி : 1957இல் முதல்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது மனைவி, குழந்தைகளைச் சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்றதுண்டா?
கலைஞர் : அழைத்துச் சென்றதில்லை. அவர்களாகவே வந்து நான் உரையாற்றும் நாட்களில் சட்டமன்ற நிகழ்ச்சிகளைக் கண்டதுண்டு.
12. கேள்வி : சட்ட மன்றத்தில் உங்களுக்குக் கிடைத்த முதல் பாராட்டு யாரால்?
கலைஞர் : எனது முதல் கன்னிப் பேச்சில், எனது முதல் தொகுதியான குளித்தலையில் இருந்த, “கையேரு வாரம், மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினை குறித்து நான் வேகமாகப் பேசி அமர்ந்தவுடன், ஒரு துண்டுத் தாளில் பேரவைத் தலைவராக அப்போதிருந்த மேதகு யு.கிருஷ்ணாராவ் அவர்கள், “Very Good Speech” என்று எழுதிச் செயலாளர் மூலமாக என்னிடம் கொடுத்தனுப்பினார். சட்டமன்றத்தில் எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு அது தான்.
13. கேள்வி : மறக்கமுடியாத சம்பவம்?
கலைஞர் : தமிழகச் சட்டப் பேரவையில் “தமிழ்நாடு” பெயர் வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, பேரறிஞர் அண்ணா அவர்களே, “நான் மூன்று முறை தமிழ்நாடு என்று சொல்வேன், அனைவரும் வாழ்க! என்று சொல்ல வேண்டுமென்று கூறிவிட்டு அவ்வாறே முழக்கமிட்ட அந்தச் சம்பவம் என்னால் மறக்க முடியாத சம்பவமாகும்.
14. கேள்வி : வருத்தப்பட வைத்த சம்பவம்?
கலைஞர் : 1976ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டு, அதன் பின்னர் 13 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்து, மீண்டும் 1989இல் பதவிப் பொறுப்புக்கு வந்து முதல் நிதிநிலை அறிக்கையை நான் படிக்க முனைந்தபோது, ஏற்கனவே அவர்கள் வீட்டிலே நடத்திய ஒத்திகைப்படி என் கையிலே இருந்த நிதிநிலை அறிக்கையைப் பறிக்க முயற்சித்து, முகத்திலும் கட்சிக்காரர்களை விட்டுக் குத்துமாறு ஏவிவிட்டு, அதன் பின்னர், தன்னை ஆளுங்கட்சிக்காரர்கள் தாக்கிவிட்டதாகத் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, செய்தியாளர்கள் முன் வதந்திகளைப் பரப்பிய நிகழ்ச்சிதான் என்னை வருத்தமடையச் செய்த சம்பவமாகும்.
15. கேள்வி : மகிழ்ச்சிக்குரிய சம்பவம்?
கலைஞர் : நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். என்னை அவரது அறைக்குத் தனிமையிலே அழைத்துச் சென்று, சட்டமன்றத்திற்குள் திறக்கப்பட விருந்த பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்குக் கீழே என்ன வார்த்தைகளை எழுதலாம் என்பதைக் பற்றி என்னை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன், “உழைப்பே உயர்வு தரும்!” என்று எழுதிக் கொடுத்தேன். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அப்போது நடந்துகொண்ட முறையை நினைக்கும் போது மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்?
16.கேள்வி : கோபப்படவைத்த சம்பவம்?
கலைஞர்:எதிர்க்கட்சித் தலைவராக நான் இருந்தபோது, ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் என்னைப் பற்றி ஒரு குற்றச்சாட்டினைக் கூறினார். தேனியில் நான் இடைத் தேர்தலுக்காகச் சென்ற போது, முத்துத்தேவன்பட்டி என்ற ஊரில் தங்கியிருந்த இடத்தை என் மகன் மு.க.அழகிரி விலைக்கு வாங்கியதாகக் கூறி, அதனை மறுக்கத் தயாரா என்று சவால் விட்டார். நான் அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.
அமைச்சராக இருந்த துரைமுருகன் எழுந்து அதை மறுத்துக் கூறினார். எனினும் அந்த அமைச்சர் எழுந்து பிடிவாதமாக அந்தக் குற்றச்சாட்டை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அமைதியாக இருப்பதிலிருந்தே குற்றச்சாட்டு உண்மையாகிறது என்று கூறிய போது தான் நான் எழுந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். இல்லாவிட்டால் அவர் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதுமென்று கூறினேன்.
அதற்குப் பிறகும் மறுநாள் அவர் போலியாக ஒரு பத்திரமே தயாரித்து, அதிலே போலியாக மு.க. அழகிரியின் iகாயழுத்தையும் போட்டு, பேரவைத் தலைவரிடம் அதைக் கொண்டு வந்து நிரூபிக்க முயன்றபோது, நான் உண்மையில் கோபப்பட்டேன். பேரவைத் தலைவராக இருந்த திரு.கே.ராஜாராம் அவையிலேயே வந்து அந்த அமைச்சர் செய்தது பெருந்தவறு என்பதை அறிவித்தார். ஆனால், அதைப் பெரிதாக நான் எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து அந்தப் பிரச்சினையை நீட்டிக்காமல் பெருந்தன்மையாக மன்னித்துவிட்டேன்.
17.கேள்வி:என்னுடைய வளர்ச்சிக்குச் சட்ட மன்றத்தில் இந்த உறுப்பினர் உதவியாக இருந்தார் என்று யாரையாவது சொல்வீர்களா?
கலைஞர்:குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது.
18. கேள்வி:உங்களைத் தொடர்ந்து பாராட்டும் உறுப்பினர் யார்?
கலைஞர்:ஒருவரல்ல, பலர்.
19. கேள்வி:உங்களை கிண்டல் செய்யும் உறுப்பினர் யார்?
கலைஞர்:என்னை யாரும் கிண்டல் செய்தது கிடையாது, முடியாது.
20. கேள்வி:இப்படிப் பேசியிருக்க வேண்டாம் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
கலைஞர்:”சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்”என்ற குறள் வழி நடக்கின்ற எனக்கு இந்த நிலை ஏற்பட்டதில்லை.
21. கேள்வி: ‘இந்த நேரத்தில் சபையில் இல்லாமல் போய்விட்டோமே!’ என்று நினைத்த சம்பவம் உண்டா?
கலைஞர்:தி.மு.கழகம் ஆளுங்கட்சியாக இருக்கின்ற நேரத்தில் எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நான் இல்லாத நேரத்தில் ஏதாவது பிரச் சினைகள் ஏற்பட்டுவிட்டதாகப் பின்னர் அறியும்போது, அந்த நேரத்தில் சபையில் இல்லாமல் போய் விட்டோமே என்று நான் நினைத்த சம்பவங்கள் ஒன்றிரண்டு உண்டு.
22. கேள்வி: “இந்த நேரத்தில் இல்லாமல் இருந் திருக்கலாமே!” என்று நினைக்கும் சம்பவம்?
கலைஞர் : அளவுக்கு மீறி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்னைப் புகழ்ந்து பேசும்போது நானே ஒருமுறை சபாநாயகர் பழனிவேல்ராஜன் அவர்களிடம், “இந்தப் புகழுரைகளை நிறுத்தச் சொல்கிறீர்களா? அல்லது நான் வெளியே போகட்டுமா?” என்று கோரியதுதான் என் நினைவுக்கு வருகிறது.
23. கேள்வி: சட்டமன்றத்துக்கு உள்ளே போகும் போது என்ன நினைப்பீர்கள்?
கலைஞர் : கற்றுக்கொள்ளும் மாணவனாகவும், கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்று.
24. கேள்வி : முதன்முதலாகச் சென்றபோது உட்கார்ந்த இருக்கை எண் நினைவிருக்கிறதா?
கலைஞர் : 170.
25. கேள்வி : சட்டமன்றத்தில் இவர்கள் எப்படி?
கலைஞர் : 1. காமராஜர்-எளிமையானவர்.2.பக்தவச்சலம்-நிர்வாகத்தில் திறமையானவர்.3.அண்ணா-எதிர்க்கட்சியினரையும், உரையினால் ஈர்ப்பவர்.4.எம்.ஜி.ஆர்.-நாகரிகமாகப் பழகக் கூடியவர்.5.ஜெயலலிதா-பிடிவாத குணத்தினர்.
26. கேள்வி : திரு.கருத்திருமன் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது நீங்களும், அவரும் அடிக்கடி அவையிலே விவாதத்தில் ஈடுபடுவதுண்டு. அதில் நினைவில் உள்ள ஒன்றைக் கூறுங்களேன்?
கலைஞர் : ஒருமுறை திரு.கருத்திருமன் அவர்கள், “அடைந்தால் திராவிட நாடு, இல்லாவிட்டால் சுடுகாடு என்றீர்கள், இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான், “சுடுகாட்டில் இல்லை, உங்களோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்!” என்று கூறினேன். அவையினரோடு சேர்ந்து அவரும் சிரித்துக் கொண்டே அமர்ந்துவிட்டார்.
27. கேள்வி : இந்த அய்ம்பதாண்டுகளில் உங்களுக்குப் பிடித்தமான 5 சட்டமன்றப் பேச்சாளர்கள் யார்?
கலைஞர் : 1.பேராசிரியர் அன்பழகனார்2. கே.டி.கே.தங்கமணி3. குமரி அனந்தன்4. அப்துல் லத்தீப்5. திருமதி.பாப்பா உமாநாத்
28. கேள்வி : நீங்கள் திக்குமுக்காடிய சம்பவம் ஏதாவது உண்டா?
கலைஞர்: அப்படி எதுவும் இல்லை.
29. கேள்வி : எதிராளியைத் திணற வைத்த ஏதாவது ஒரு சம்பவம்?
கலைஞர் : சட்டமன்றத்தில் ஒரு முறை டாக்டர்.எச்.வி.ஹண்டே அவர்கள் தி.மு.கழக அரசைப் பற்றி விமர்சிக்கும் போது, “இது மூன்றாம் தர சர்க்கார்” என்றார். உடனே ஆளுங்கட்சியினர் வெகுண்டெழுந்தனர். நான் அனைவரையும் கையமர்த்திவிட்டு, “டாக்டர் ஹண்டே அவர்கள் இந்த அரசை மூன்றாந்தர அரசு என்றார். திருத்திக்கொள்ளவேண்டும். இது நாலாந்தர அரசு, பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று கூறப்படும் வர்ணங்களில் நான்காவதாகக் கூறப்படும் சூத்திரர்களின் அரசு!” என்று குறிப்பிட்டேன்.
30. கேள்வி : மறக்க முடியாத சட்டமன்றக் கலவரக் காட்சி?
கலைஞர் : எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, “ஜெயலலிதா” அணியினரும், “ஜானகி” அணியினரும் பேரவைக்குள் மோதிக்கொண்டு காவல் துறையினரும் உள்ளே புகுந்து மன்ற உறுப்பினர்கள் ஒலிபெருக்கியைப் பிடுங்கிக்கொண்டு சண்டையிட்ட காட்சி மறக்க முடியாத ஒன்றாகும்.
31. கேள்வி : சட்ட மன்றப் பேச்சில் எது இருக்கக்கூடாது?
கலைஞர் : மீண்டும் ஒரு நாள் இருவரும் சந்திக்க நேரிடும் போது பர°பரம் பேசிக்கொள்ள முடியாத அளவிற்கு விரோதம் காட்டிக்கொள்ளும் உணர்வு இருக்கக்கூடாது.
32. கேள்வி : விவாதம்-வாக்குவாதம்-விதண்டாவாதம் மூன்றும் எப்படி இருக்கவேண்டும்?
கலைஞர் : விவாதம்-உண்மையாக இருக்க வேண்டும்.வாக்குவாதம்-சூடு இருந்தாலும், சுவையாக இருக்க வேண்டும்.விதண்டாவாதம்-தவிர்க்கப்பட்டாக வேண்டும்.
33. கேள்வி:நீங்கள் கொண்டு வந்ததில் மகிழத்தக்க சட்டம்?
கலைஞர் : பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை-குடியிருப்புமனைச் சட்டம்-நில உச்ச வரம்புச் சட்டம்-அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆணை.
34. கேள்வி : சட்டமன்றப் பதவியை 1984, 1991 இரண்டு முறை ராஜினாமா செய்தது ஏன்?
கலைஞர் : 1984ஆம் ஆண்டு நான் இலங்கைத் தமிழர்களுக்காகச் சட்டமன்றப் பதவியை ராஜினாமா செய்தேன். 1991இல் நான் ஒருவன் மட்டுமே வெற்றிபெற்று மற்ற எல்லா இடங்களிலும் கழகம் தோற்றதால், அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அந்தப் பதவியை ராஜினாமா செய்தேன்.
35.கேள்வி:நினைவாற்றல், சொல்லாற்றல், வாதத்திறன்-ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு எது முக்கியம்?
கலைஞர் : நினைவாற்றலுடன் கூடிய வாதத்திறன்மிக்க சொல்லாற்றல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப் பினருக்கும் முக்கியம்.
36. கேள்வி : சட்டமன்றத்தை அரசியல் விவாத மேடையாக்கலாமா?
கலைஞர் : விவாத மேடையாக ஆக்கலாம்-விரோத மேடையாகத்தான் ஆக்கக்கூடாது.
37. கேள்வி : 2001-2006 சட்டமன்றப் பணிகளில் உங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ளாதது ஏன்?
கலைஞர் : யாரையும் மதிக்க விரும்பாத அன்றைய ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள்.
38. கேள்வி : நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று நினைத்ததே இல்லையா?
கலைஞர் : தொடக்கம் முதலே தமிழ், தமிழ்நாடு, தமிழ்மக்கள் என்ற அளவில் என்னை அய்க்கியப்படுத்திக்கொண்டு விட்டேன்.
39. கேள்வி : நீங்கள் கொண்டு வந்ததிலேயே விருப்பமான மக்கள் நலத்திட்டம்-முதன்மை இடத்தைப் பிடிப்பது எது?
கலைஞர் : சாதிமத பேதமின்றி ஏழைப்பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம். அதே நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சமத்துவபுரத் திட்டம்.
40. கேள்வி : சட்டமன்ற மரபு மீறப்பட்ட செயல் என்று எந்த நிகழ்வைச் சொல்வீர்கள்?
கலைஞர் : முரசொலிப் பத்திரிகை ஆசிரியரைச் சட்டமன்றத்திற்கு அழைத்துக் கூண்டிலே ஏற்றிக் கண்டனம் தெரிவித்த செயல்.
41. கேள்வி : சட்டமன்ற நிகழ்வுகளில் உங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் என்று எதைச் சொல்வீர்கள்?
கலைஞர் : சட்டமன்ற மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக நான் வரக்கூடாது என்று முயற்சிசெய்து, அது நடக்காத நேரத்தில், மேலவையையே தமிழ் நாட்டில் என் ஒருவனுக்காகக் கலைத்த செயல் எனக்கு துரோகம் செய்வதாக நினைத்துச் செய்யப்பட்ட காரியமாகும்.
42. கேள்வி : உங்களைக் கவர்ந்த பெண் சட்ட மன்ற உறுப்பினர் யார்?
கலைஞர் : திருமதி.ஜோதியம்மாள்.
43. காமெடியாகப் பேசும் சட்டமன்ற உறுப்பினர் யார்?
கலைஞர் : ஈரோடு சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த திரு.தெட்சணாமூர்த்திக் கவுண்டர்.
44. கேள்வி : கேள்வி கேட்பது எளிதா? பதில் சொல்வது எளிதா?
கலைஞர் : பதில் சொல்லமுடியாத கேள்வி கேட்பது எளிதல்ல.
45. பொன்னான நாள் என்று எதைச் சொல்வீர்கள்?
கலைஞர் : மண்டல் கமிஷன் பரிந்துரையையொட்டி, மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தீர்மானத்தை நான் முன்மொழிந்து பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட நாளைப் பொன்னான நாள் என்று கூறலாம்.
46. கேள்வி : தி.மு.க. ஆட்சி இரண்டு முறை (1976 மற்றும் 1991) டிஸ்மிஸ் ஆனபோது என்ன நினைத்தீர்கள்?
கலைஞர் : பதவியைத் தோளில் போட்டுக் கொள்ளும் துண்டு என்றும், மக்களுக்காக ஓடியாடி உழைப்பதே சிறந்த தொண்டு என்றும் எண்ணியிருப்பவனுக்கு ஆட்சிக்கலைப்பு என்பது ஒன்றும் பெரிதல்ல.
47. கேள்வி : உங்கள் பேச்சைக் கேட்க அஞ்சுகம் அம்மையார் சட்டமன்றம் வந்திருக்கிறாரா?
கலைஞர் : வந்ததில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் நான் சட்டமன்றத்திற்குச் சென்று வந்தவுடன், சட்ட மன்றத்தில் அன்று நடந்ததைப் பற்றி என்னைக் கேட்கத் தவறுவதில்லை.
48. கேள்வி : அஞ்சுகத் தாய் உங்கள் சட்டமன்றப் பேச்சை பத்திரிக்கையில் படித்துவிட்டுப் பாராட்டியது உண்டா?
கலைஞர் : அவர் உயிரோடு இருந்தவரை என்னுடைய பேச்சு ஒவ்வொன்றையும் பாராட்டியிருக்கிறார்.
49.கேள்வி : அண்ணா அவர்கள் பாராட்டிய சட்ட மன்றப் பேச்சு எது?
கலைஞர் : பெரும்பாலும் சட்டமன்றத்தில் நான் பேசிய அத்தனை பேச்சுகளையுமே அண்ணா அவர்கள் பாராட்டியிருக்கிறார்.
50. கேள்வி : உங்கள் அமைச்சரவையிலே உள்ளவர் களில் மனதிலே இடம் பெற்ற சிலரை வரிசைப் படுத்துங்களேன்?
கலைஞர் : மனதிலே இடம் பெற்ற பிறகு தானே, அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். மந்திரிசபையில் இடம் பெறாதவர்கள் என் மனதில் இடம் பெறாதவர்கள் அல்ல

உள்ளாட்சி இடைத்தேர்தலில் வென்றது ஜனநாயகமா?

உள்ளாட்சி இடைத்தேர்தலில் வென்றது ஜனநாயகமா? பணநாயகமா? பட்டாசும், இனிப்பும் ஒரு கேடா? கலைஞர் கண்டனம்!
 
தி.மு.க. தலைவர் கலைஞர் 23.09.2014 செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று, முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்து முடித்து, எதிர்பார்த்தபடி அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. ஆகா! அந்தத் தேர்தலில் தான் ஜனநாயகம் எந்த எந்த அளவுக்குக் கொடி கட்டிப் பட்டொளி வீசிப் பறந்தது தெரியுமா? அது பற்றி ஏடுகளில் எல்லாம் எப்படியெப்படி செய்திகள் வந்தன தெரியுமா? நானே அது பற்றி இரண்டு மூன்று முறை கருத்து தெரிவித்திருக்கிறேன். “துஷ்டரைக் கண்டால் தூர விலகு” என்பது பழமொழி. அதுபோல அ.தி.மு.க. ஆட்சியில் இடைத் தேர்தல் என்றால், தமிழகத்திலே உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் எல்லாம், “அதைப்பற்றி எங்களுக்கு என்ன?” என்பதைப் போல, சர்வாதிகாரச் சதிராட்டங்களும், அராஜகச் சேட்டைகளும் எங்கணும் அரங்கேறும் எனச் சரியாக யூகித்தே தேர்தலையே புறக்கணித்து விட்டார்கள். குறிப்பாக தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டன. காரணம் அவர்களுக்கெல்லாம் அ.தி.மு.க. வினர் இடைத் தேர்தல்களில் என்னென்ன திருகுதாளங்களில் ஈடுபடுவார்கள் என்பது முன்பே தெரிந்திருந்தது. முதலில் தேர்தல் தேதியே தேர்தல் ஆணையத்தால் முறையாக அறிவிக்கப்பட்டதா? 

செப்டம்பர் 18ஆம் தேதி உள்ளாட்சி மன்றங் களுக்கான இடைத் தேர்தல்கள் நடைபெறுமென்று ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே, அதே தேர்தல் ஆணையம் தேர்தல் பற்றிய தனது அறிவிப்பினைத் திரும்பப் பெற்றது! பிறகு 22 நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம், உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தலுக்கான அறிவிப்பினைச் செய்தது. 22 நாட்கள் கழித்து, தேர்தல் தேதியை அறிவித்த போது, ஏற்கனவே அறிவித்த தேதியையும் மாற்றி அல்லவா அறிவிக்க வேண்டும்! ஆனால் அப்படி அறிவிக்க வில்லை. மாறாக ஏற்கனவே அறிவித்த செப்டம்பர் 18ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என்றுதான் அறிவித்தார்கள்! எங்கேயாவது, எந்தத் தேர்த லிலாவது எடுத்த எடுப்பிலேயே இப்படிப்பட்ட கோமாளித்தனங்கள் நடைபெற்றிருக்கின்றனவா? ஏன் இவ்வாறு தேதியை மாற்றாமல் அதே தேதியை அறிவித்தார்கள் என்றால் அந்த நாள் தான் முதலமைச்சருக்கு “ராசியான” நாளாம்! 

இறுதியாக இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து பா.ஜ.க.வும், கம்யூனிஸ்ட் கட்சிகளுமே போட்டியிட முன் வந்து, வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தார்கள். ஆனால் அவர்களையாவது இந்தத் தேர்தலில் ஜனநாயக ரீதியாகப் போட்டியிட ஆளுங் கட்சியினர் அனுமதித்தார்களா? இதோ ஒன்றிரண்டு உதாரணங்கள்! 

மூன்று இடங்களில் மேயர் பதவிக்கான தேர்தல்! நெல்லை, தூத்துக்குடி, கோவை மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கான தேர்தல். இதில் ஒரு இடத்தில், அதாவது நெல்லையில் தேர்தலே நடைபெறாத அளவுக்கு செய்துவிட்டார்கள். எப்படித் தெரியுமா? ஆளுங்கட்சிக்கு எதிராக யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்தார்களோ, அவர்களில் பலருடைய வேட்பு மனுக்களை அது சரியில்லை, இது சரியில்லை என்று நொண்டிக் காரணம் கூறித் தள்ளுபடி செய்து விட்டார்கள். தள்ளுபடி செய்யப்பட முடியாதவர்களையெல்லாம் சரிக்கட்டி, செய்ய வேண்டியதைச் செய்து, சொல்ல வேண்டியதைச் சொல்லி, எதிர்த்த வேட்பு மனுக்களையெல்லாம் வாபஸ் பெறச் செய்துவிட்டார்கள். முக்கியமாக போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரின் வேட்பு மனுவினையும் கடைசி நாளன்று வாபஸ் பெறச் செய்ததோடு, அந்த வேட்பாளரையே அ.தி.மு.க.விலே சேர்த்து விட்டார்கள்! இப்படிப்பட்ட முழு நீள நகைச்சுவைக் கூத்து நெல்லையிலே மட்டுமா நடைபெற்றது? 

செங்கல்பட்டு நகராட்சியில் 1வது வார்டு மற்றும் 6வது வார்டுக்கு இடைத் தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களான தணிகைவேலு, பசியுல்லா ஆகியோர் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்று கூறி வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்து நகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலரு மான முத்து வெங்கடேஷ் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாகவும் அறிவித்து சான்றிதழ்களையும் தந்து விட்டார். இதனை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் அதிகாரிகளை இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி நடந்த விசாரணையில், நகராட்சி ஆணையர் சட்ட விரோதமாக வேட்பு மனுக்களைத் தள்ளுபடி செய்தது தெரிந்து, அது தொடர்பாக நீதிபதியிடம் அறிக்கை தரப்பட்டது. நீதிபதி அ.தி.மு.க. வேட்பாளர் களின் வெற்றி செல்லாது என்றும், மறு தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக வேறு வழியின்றி தேர்தல் ஆணையம், தற்போது நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேசை 21-9-2014 அன்று “சஸ்பென்ட்” செய்துள்ளது. இந்த “சஸ்பென்ட்” நடவடிக்கை வெறும் கண் துடைப்பா? நீதிமன்றத்தை ஏமாற்றுவதற்காக மேடை ஏற்றப்பட்ட நாடகமா? என்பதெல்லாம் பிறகு வெளியேவரும்! 

கோவையிலே என்ன நடைபெற்றது தெரியுமா? 

கோவையில் பா.ஜ.க. வேட்பாளர் நந்தகுமார்! நெல்லையில் நடந்ததைப் போல அவர் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வேட்பு மனுவினை வாபஸ் பெற மறுத்து விட்டார். என்ன நடைபெற்றது? அவர் மீதே தாக்குதல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு முதல் நாள் 17-9-2014 அன்று காலையில், கோவை மாநகராட்சியில் 65வது வார்டு சவுரிபாளையம் பகுதியில் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் தகவல் கேட்டு, பா.ஜ.க. வேட்பாளர் நந்தகுமார் தனது கட்சியினரோடு அங்கே சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற போடிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பழனிசாமி உட்பட சிலரை கையும் களவுமாகப் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக் கிறார்கள். அந்தத் தகவல் அறிந்ததும், அ.தி.மு.க.வினர் நூறுக்கும் மேற்பட்டோர் அங்கே திரண்டு வந்து பா.ஜ.க. வேட்பாளரைத் தாக்கியிருக்கிறார்கள். பா.ஜ.க.வினர் தங்கள் வேட்பாளரைச் சுற்றி நின்று பாதுகாத்ததோடு, காருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க.வினர் அந்தக் காரையும் முற்றுகையிட்டு, கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டிருக் கிறார்கள். நடைபெற்றதா இல்லையா? 

புதுக்கோட்டை நகர் மன்றத் தலைவர் பதவிக்கு பா.ஜ.க. சார்பிலும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் வேட்பு மனு தாக்கல் செய்யவே அனுமதிக்கவில்லை. அவர்கள் சாலை மறியல் போராட்டம் எல்லாம் நடத்தியும் பயனில்லை. எதிரிகளை வேட்பு மனு தாக்கல் செய்யவே விடாமல் தடுத்து விட்டு, அ.தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டார்கள். 

சென்னையிலே என்ன நிலை? சென்னை மாநகராட்சி வட்டம் 35இல் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் காலை 11 மணிக்கெல்லாம் அனைத்து வாக்குச் சாவடிகளையும் கைப்பற்றி விட்டார்கள். அங்கே ஆளுங்கட்சி வேட்பாளரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் போட்டியிட்டார். அந்தக் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டபோது, அவர்கள் தலையிட மறுத்து விட்டார்களாம். 

கடலூரில் நடைபெற்ற நகர்மன்றத் தேர்தலில், அ.தி.மு.க.வினர் தேர்தல் விதிமுறைகளை மீறி, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள வாக்குகளைப் போட்டனர் என்றும், எதிர்க்கட்சி முகவர்களை வெளியேற்றிக் கொலை மிரட்டல் விடுத்தனர் என்றும், எனவே கடலூர் நகர் மன்றத் தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டுமென்றும் மாநிலத் தேர்தல் ஆணையர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர் மன்றத் தலைவர் வேட்பாளர் மாதவன் மனுவே அளித்திருக்கிறார். 

இராமனாதபுரம் நகராட்சித் தலைவராக இருந்த சேகர் இறந்து விட்ட காரணத்தால் அங்கே இடைத் தேர்தல் நடைபெற்றது. ஆனால் நடைபெற்ற இடைத் தேர்தலில், இறந்து விட்ட அந்த நகர் மன்றத் தலைவரின் வாக்கையே பதிவு செய்திருக்கிறார்கள் என்றால் இதை விட மோசடி வேறு இருக்க முடியுமா? 

குறிப்பாக இந்த இடைத் தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்த 3,075 பேரில், 1,589 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன அல்லது வாபஸ் பெறச் செய்யப்பட்டிருக்கின்றன என்றால், எந்த அளவுக்குப் பெருவாரியாக முறைகேடுகள் நடைபெற் றுள்ளன என்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவையா என்ன? 

எதிர்க்கட்சிகளின் கைகளையும், கால்களையும் கட்டிப் போட்டு, வாய்ப் பூட்டும் போட்டுவிட்டு, தேர்தலை நடத்துவதாகக் கூறி அனைத்து மோசடி முறைகேடுகளிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக மார்தட்டிக் கொள்வதற்குப் பெயரா வெற்றி? இப்படிப்பட்ட இழிவான வெற்றியைப் பெற வேண்டுமா என்ன? அதனால் தான் நடுநிலை ஏடான “கல்கி”யே மனம் வெதும்பி தலையங்கம் எழுதியுள்ளது. 

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு :- 

“தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி இடைத் தேர்தல் எதிர்க் கட்சியினரிடமும் மக்கள் மனத்திலும் பெரும் அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட முறையே சரியில்லை என்று தமிழகத் தின் முக்கிய எதிர்க்கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகியவை புறக்கணித்து விட்டன. மக்களின் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் களத்தில் குதித்தன பா.ஜ.க.வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும். ஆனால் பல இடங்களிலிருந்து வரும் செய்திகள் அவ்வளவு உவப்பாக இல்லை. மத்திய அமைச்சரான பொன். ராதாகிருஷ்ணன், “பல உள்ளாட்சி அமைப்பு களில் பா.ஜ.க. வேட்பாளர்களைப் போட்டியிடவே அனுமதிக்காத வகையில் ஆளுங்கட்சி காவல் துறை மூலம் தடுத்து விடும் போக்கு நடை பெற்றுள்ளது. அதையும் மீறி தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் போலி காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்களை வாபஸ் பெற வைக்க அனைத்து முறைகளும் கையாளப்பட்டன” என்றவர் ஒரு படி மேலே போய், “பல பகுதிகளில் வாக்காளர் களுக்குப் பணப் பட்டுவாடா நடந்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளது, இடைத்தேர்தல் முறைகேடுகளுக் குச் சரியான உதாரணங்கள். எதிர்க்கட்சிகளைப் போட்டியிட விடாமல் தடுப்பதாகக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பல இடங்களில் போட்டியின்றித் தேர்வு என்று பெருமைப்பட்டுக் கொள்கிறது ஆளுங்கட்சி. மாற்றுக் கட்சியினர் முறையாகத் தேர்தலை எதிர்கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்திய பின்னர் பெறும் வெற்றிக்கு என்ன மரியாதை இருக்க முடியும்? இத்தகைய முறைகேடுகளுக்குக் காரணம், தோற்று விடுவோமோ என்ற அச்சம். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, நூறு சதவிகித வெற்றி ஆசை ஆளுங்கட்சியைப் பற்றிக் கொண் டிருக்கிறது. மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு, அவர்கள் சுயமாக வாழ்வதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தால், தோல்வி குறித்து அச்சம் ஏற்படத் தேவையே இல்லை. ஆனால் முறைகேடுகள் நடந்துள்ளன என்பது நிரூபணமாகும் போது, இதுவரை ஆளுங்கட்சி பெற்றுள்ள வெற்றி களும் சந்தேகத்துக்குரியனவாகவே ஆகிவிடு கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற 37 தொகுதிகள் வெற்றி மேல் கூட சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க முடியாது” 

“கல்கி” எழுதிய தலையங்கம் இது. ஏன், அ.தி.மு.க.வுடன் கடந்த ஆண்டு வரை தோழமை யோடு பழகிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான “தீக்கதிர்”, இன்று எழுதியுள்ள தலையங் கத்தில்கூட, “இடைத் தேர்தல் முடிவு ஜனநாயகத் திற்கு மிகப் பெரிய தோல்வியாக அமைந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வகையான ஜனநாயக நடைமுறைகளையும், தேர்தல் விதிமுறை களையும் அ.தி.மு.க.வினர் காலில் போட்டு மிதித்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே மாநிலத் தேர்தல் ஆணையத்தின் துணையோடு ஆளுங் கட்சியின் திருவிளையாடல்கள் துவங்கி விட்டன. சாம பேத, தான, தண்ட என்று சொல்லப்படும் அனைத்து வழிகளையும் ஆளுங்கட்சி பின்பற்றியது என்று சொன்னால் அது மிகையல்ல. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையில் ஜனநாயகத்தை ஆளுங்கட்சி இழிவுபடுத்தியுள்ளது. மொத்தத்தில் ஆளுங்கட்சியினர் ஜனநாயகத்தை தலைகுனிய வைத்து விட்டனர் என்பதுதான் உண்மை” என்றெல்லாம் எழுதியுள்ளது. இந்தத் தலையங்கங்களில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை என்பதை நிரூபிப்பதைப் போலத்தான் ஆளுங்கட்சியின் அத்துமீறிய நடைமுறைகள் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இருந்திருக்கின்றன. 

தேர்தல் நடைபெற்ற இடங்களில் அமைச்சர்கள் எல்லாம் எவ்வாறு முகாமிட்டிருந்தார்கள்? எந்த அளவுக்குப் பணப் பட்டுவாடா நடைபெற்றது? அடக்குமுறைகள் எப்படியெல்லாம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. ஏன் முதல் அமைச்சரே எதிரிகளையே கண்களுக்குத் தெரியவில்லை என்று கூறி விட்டு, விமானப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்றால், அவர் வருகைக் காக பெரும் பொருள் செலவில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் என்னென்ன? அவையெல்லாம் தேவைதானா? எங்கே தோற்றுவிட்டால், தங்களின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தால், அமைச்சர்கள் தாங்கள் குவித்து வைத்திருந்த நிதியிலிருந்து கணிசமாகச் செலவழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பதவி நீடித்தால் செலவழிப்பதை மீட்டுக் கொள்ளலாம் என்ற
தைரியம்தான்! இவ்வளவு பெரிய விலையையும் கொடுத்து, தற்போது பெற்றிருப்பதற்குப் பெயர் வெற்றியா? வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே சிரிக்க மாட்டார்களா? “வரலாற்று வெற்றியை வழங்கிய வாக்காளப் பெருமக்களுக்கு முதலமைச்சர் அம்மா நன்றியாம்; மகிழ்ச்சி வெள்ளமாம்; பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டமாம்”! ஆளும் அ.தி.மு.க.வும், மாநிலத் தேர்தல் ஆணை யரும் கூட்டணி அமைத்துக் கொண்டு, காவல் துறையின் துணையோடு பெற்ற வெற்றிக்கு பட்டாசும், இனிப்பும் ஒரு கேடா? மல்யுத்தப் போட்டியில் எதிரிகள் அனைவரையும் செயலிழக்கச் செய்து விட்டு, நடுவரையும் கைக்குள் போட்டுக் கொண்டு தற்போது  
ஆளுங்கட்சி அடைந்துள்ள வெற்றியில் ஏதாவது பொருளோ, பொருத்தமோ உண்டா? நிலைமைகள் தங்குதடையின்றி இப்படியே நீடிக்கு மானால் ஜனநாயகத்தை அருங்காட்சியகத்திலே தான் காண நேரிடும்! உள்ளாட்சி இடைத் தேர்தலில் வென்றது ஜனநாயகமா? பணநாயகமா? இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

கழகத்தின் சாதனைகள்





கழகத்தின் சாதனைகள்

1. மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை ரிக்ஷாக்களை ஒழித்துவிட்டு, அவற்றுக்கு மாற்றாக அந்தத் தொழிலாளிகளுக்கு இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கப்பட்ட திட்டம்.
2. பட்டிதொட்டி முதல் பட்டினக்கரை வரையில் பார்வை இழந்தோர்க்கு இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்.
3. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்.
4. விவசாயிகளுக்கு – நெசவாளர்களுக்கு – இலவச மின்சாரத் திட்டம்.
5. பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் – வேலையில் 30 சதவிகித ஒதுக்கீடு.
6. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்.
7. குடிசை மாற்று வாரியம்.
8. குடிநீர் வாரியம்.
9. ஆதி திராவிடர்க்கு இந்தியாவிலேயே முன் மாதிரியான இலவச வீடுகள் வழங்கும் திட்டம்.
10. மலம் சுமக்கும் துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கு மாற்றுத் திட்டம்.
11. பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு – அரசு போக்குவரத்துக் கழகங்கள் அமைப்பு; பேருந்துகள் கிராமங்களுக்கெல்லாம் செல்ல வழிவகை காணப் பட்டது.
12. உடல் ஊனமுற்றோருக்கு உதவி வழங்கும் பல்வேறு திட்டங்கள்.
13. விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கடன் ரத்து திட்டம் – வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக் குறைப்பு.
14. கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்றாக்கி, தற்போது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்த்
திட்டம்.
15. விலைவாசியைக் கட்டுப்படுத்திட குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் – 50 ரூபாய்க்கு 75 ரூபாய் பெறுமானமுள்ள மளிகைப் பொருள்கள்.
16. காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டம் – மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து.
17. சத்துணவில் வாரம் மூன்று முட்டைகள் – வாழைப்பழம் வழங்கும் திட்டம்.
18. புதிய புதிய பல்கலைக்கழகங்கள் – பொறியியல் கல்லூரிகள் – மருத்துவக்கல்லூரிகள் – கலை அறிவியல் கல்லூரிகள்.
19. பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பாஸ்.
20. ஏழை மகளிருக்கு முதுகலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.
21. சத்துணவு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம்.
22. பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் எனச் சட்டம்.
23. பரிதிமாற் கலைஞரின் கனவு நனவாகி தமிழ் செம்மொழி என அறிவிப்பு.
24. தைத் திங்கள் முதல் நாள் – தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம்.
25. மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை.
26. ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி.
27. கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி
28. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 25 நல வாரியங்கள்.
29. 50 வயதாகியும் திருமணம் ஆகாத ஏழை மகளிருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கும் திட்டம்.
30. மகளிர் சுய உதவிக் குழுக்கள் – சுழல் நிதி உதவிகள்.
31. அதைப் போலவே இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழுக்கள்.
32. தொலைக் காட்சிப் பெட்டிகள் இல்லா வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்.
33. எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்.
34. பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.
35. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.
36. நமக்கு நாமே திட்டம்.
37. ராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்.
38. திருச்சியில் உய்யகொண்டான் – சேலத்தில் திருமணிமுத்தாறு சீரமைப்புத் திட்டங்கள்.
39. மாநிலத்திற்குள் நதிகளை இணைக்கும் மாபெரும் திட்டம்.
40. நகராட்சிகள் அனைத்திலும் பாதாளச் சாக்கடைத் திட்டம்.
41. சென்னை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம்.
42. சென்னை மாநகரில் விளம்பரப் பலகைகளை அகற்றி சிங்காரச் சென்னையாக்கிய திட்டம்.
43. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
44. கட்டணத்தை உயர்த்தாமல் பத்தாயிரம் புதிய பேருந்துகள்.
45. புதிய சட்டமன்ற வளாகம் – தலைமைச் செயலகம்.
46. உலகத் தரத்தில் அரசு நவீன நூலகம்.
47. உழவர் சந்தைத் திட்டம்.
48. வேலை நியமனத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு அரசுத் துறைகளில் புதிதாக 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.
50. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய காவலர்கள் நியமனம்.
51. இந்தியாவிலேயே முன்னோடியாக மூன்று காவல் ஆணையங்கள் (போலீஸ் கமிஷன்கள்).
52. வருமுன் காப்போம் திட்டம்.
53. ஏழைச் சிறார் இதய நோய்த்தீர்க்கும் திட்டம்.
54. நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம்.;
55. புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்வோருக்கு வீட்டு மனைப்பட்டா.
56. இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு.
57. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் ரத்து.
58. மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு.
59. பழங்குடியினருக்கு புதிதாக ஒரு சதவிகித இட ஒதுக்கீடு.
60. அரசு அலுவலர்களுக்கு மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம்.
61. அரசு அலுவலர் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி.
62. விடுதலை வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் நினைவகங்கள் – குடும்பங்களுக்கு நிதி உதவிகள்.
63. சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரி முனையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை.
 

வியாழன், 18 செப்டம்பர், 2014

கலைஞர் கண்ட களங்கள்

கலைஞர் கண்ட நெருப்புக் களங்கள்



கலைஞர் கண்ட நெருப்புக் களங்கள் பலவுண்டு.மாணவராய்திகழ்ந்த நாட்களிலேயே இந்தி எதிர்ப்பு, தீக்களத்தில் குதித்தவர் கலைஞர்.தென்னவர் பண்பாட்டை, வீரமும் காதலும் மனித வாழ்வின்உயிர்மூச்சென விரும்பிய தமிழர் வரலாற்றை, வஞ்சமில்லா எழில்கூட்டும் தமிழரின் தாய் மொழியை அழிப்பதற்கு பல்லாண்டுகளாய்நடந்த அயலவரின் பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து நின்று போர்தொடுத்து தடுத்தனர் பேரறிவாளப் பெருமக்கள்.


 தமிழகம் மாச்சர்யங்களை மறந்து நின்ற போர்க்களம் அது.அப்போது மாணவராய் அந்த மாத்தமிழர் கலைஞர் அவர்கள் தமிழ்கொடிபிடித்து தருக்கர்களின் முடி நொறுக்க தன் தோழர்களோடு திருவாரூர்தெருக்களில் வலம் வந்தார் எனும் வரலாற்றுச் செய்தி வாளேந்திகளத்தில் நிற்கும் வீரனுக்குள்ள மன உறுதியைக் குறிப்பதாகும்.


தந்தையை பறிகொடுத்த நேரத்தில் மருத்துவர் மாநாட்டில்பேசிக் கொண்டிருந்தார் என்பதும், மனைவி உயிரோடு போராடிஉலகைப் பிரிந்த சமயத்தில் ஓரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்என்பதும் மனதைப் பொறுத்தவரையில் நெருப்புக் களங்கள் தானே!


மும்முனைப் போராட்டம் என்பது தமிழர் மான உணர்வில்கழகத்திற்கு உள்ள ஈடுபாட்டை காட்டிய மிக முக்கியமானபோராட்டம். முத்துக்குளிக்க மூச்சடக்குவது போன்று தோழர்கள்முனைப்புக் காட்டிய அந்தப் போராட்டத்தில் அதிகபட்ச தண்டனைபெற்றதே தலைவர் கலைஞர்தான். தண்டவாளத்தில் தலை வைத்துஉயிர் தரும் அளவுக்கு நெஞ்சுரம் காட்டிய நெருப்புக் களம் அது.


62ல் நடந்த விலைவாசி மறியல் போராட்டம் என்பது கழகம் மிகவேகங் காட்டிய போராட்டம். சில தோழர்கள் உயிர் குடிக்கின்ற அளவுக்குசிறையில் இடமில்லாமல் செய்த போராட்டம்.


65 மொழிப் போர்க்களம். தமிழக வரலாறு காணா தீக்களம்.பக்தவச்சலம் தம் ஈரமில்லா நெஞ்சை திறந்த காட்டினார். தமிழகஇளைஞர் பட்டாளம் வீரமிகு வரலாற்றை வரைந்து காட்டியது.அன்றைய முதல்வர் அதிகாரத்தின் கொடுமை அனைத்தையும்அவிழ்த்து விட்டார்.


 கொடுமைமிகு அதிகாரத்தின் துப்பாக்கி குண்டுகளை தன் மார்பில்தாங்கிய மாணவத் தங்கங்கள் தமிழரின் புதுக்கொடியை தன் குருதியில்நனைத்துப் பறக்க விட்டனர். இந்த போராட்டத்தின் காரணகர்த்தாதலைவர் கலைஞர் என்று கருதிய காங்கிரஸ் அரசு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைத்தது. சனநாயகநாட்டில் தனிமைச் சிறை என்பது மிகப்பெரிய கொடுமையாகும். இந்தநெருப்பாற்றிலும் நீந்திய கலைஞர் அவர்கள் தமிழர் நெஞ்சங்களில்நின்றார்.


என் தம்பி கருணாநிதி அடைந்து கிடக்கும்பாளையங்கோட்டை தனிமைச் சிறை எனக்கு யாத்திரைஸ்தலம் (அதாவது கோவில்) என்ற புகழ்க்கொடி வேந்தன்அண்ணாவின் பாகுமொழிப் பாராட்டையும் பெற்றார்.


69 அண்ணாவின் மறைவிற்குப் பின் கழகம் தலைமையேற்றுதலைவர் கலைஞர் நீந்திய நெருப்பாறுகள் நீண்ட வரலாறு படைத்தவை.இந்திய அரசியலில் புதுமை காண வேண்டும் என்று நினைத்தார் கலைஞர்அவர்கள். நாட்டின் வளர்ச்சிக்கு யாகங்கள் நடத்தி பஞ்சாங்கம்பார்த்துக் கிடந்த பழமைவாதிகள் நிறைந்த காங்கிரசில் ஒரு மின்னல்கீற்றாய் தோன்றியவர் நேரு பிரான் பெற்றெடுத்த நேர்த்திமிகுபெண்மணி இந்திரா காந்தி அவர்கள்.


நாட்டு மக்களை அடிமைகள் போல் நடத்திய மன்னர்களுக்குதந்த மானியத்தை நிறுத்தவும் வங்கிகளை நாட்டுடமையாக்கவும்இந்திராவுக்கு கலைஞர் தந்த ஆதரவு தான் இந்திய அரசியலில்அவருக்கு நிரந்தர இடத்தை வழங்கியது.


ஆனால் அந்த இந்திராகாந்தியால்கொண்டுவரப்பட்ட சனநாயகத்தை மடியவைக்கும் மிசாசட்டத்தை எதிர்த்துக் கலைஞர் கண்ட நெருப்புக் களம்இருக்கிறதே... அதை கவிஞர்கள் எழுதி கலைஞர்கள்நிகழ்ச்சியாக நடத்தப் தொடங்கினால் மனித உள்ளம்மலைத்துப் போகும் அளவுக்கு ஆயிரமாயிரம் செய்திகள்அதில் ஊற்றெடுக்கும்.



அதுமட்டுமின்றி நங்கவரம் விவசாயப் போராட்டம் பேருந்துஅதிபரை எதிர்த்துப் போராட்டம் என்று அவர் கண்ட களங்கள் ஏராளம்.அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் அநீதியை, அக்கிரமத்தை எதிர்த்துஅவர் நடத்துகின்ற நிகழ்ச்சியனைத்துமே நெருப்புக் களங்கள் தான்.அவரை அழித்து விட துடித்த மனிதர்கள்,கட்சிகள், பிற சக்திகள் அனைத்தையும் தனதுஉறுதிமிகு போர்க்குணத்தில் நீர்த்துப் போகசெய்து விட்டவர் கலைஞர் அவர்கள்.நெருப்பில் வீழ்ந்து புது வேகத்துடன் எழுந்துவரும் கிரேக்கப் புராணத்து பீனிக்ஸ்பறவையைப் போன்றவர் கலைஞர் என்பதற்குஇந்த உதாரணத்தைக் கூறலாம்.


எதிர்க்கட்சி வரிசையில் இருந்த நாட்களில் ஒரு நாள்சேலத்தில் பொதுக்கூட்டம். கூட்டத்திற்கு அரசு தடை போடுகிறது.நாளை தடையை மீறுவேன் என்கிறார் கலைஞர். நிரூபர்கள் ஏன்இப்படி? சில நாள் கழித்துப் பேச வேண்டியது தானே என்கிறார்கள்.அதற்கு கலைஞர், தடை போட்டு கடந்த நாட்களில் தான் மீறாமல்இருந்தது கிடையாது, என்று ஒரு போர் வீரனுக்குரிய உறுதியோடுகூறினார்.



அம்மாவீரர் கண்ட, காண இருக்கின்ற நெருப்புக் களங்கள் நம்நெஞ்சை உருக்கும். இந்த நிலம் சிறக்கும். வாழ்க கலைஞர்.