உடன்பிறப்பே,
முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்ளும்
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டு
மக்களுக்கு என்னென்ன சாதனைகளைச் செய்திருக்கிறோம் என்று ஒரு பட்டியலை
ஊருக்கு ஊர் தொடர்ந்து சொல்லி வருவதைத் தொடர்ந்து, 2006ஆம் ஆண்டு முதல்
2011ஆம் ஆண்டுவரை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்க
ளுக்காகச் செய்த சாதனைகளில் ஒருசில வற்றைப்பட்டியலிட வேண்டிய கடமைக்கு
ஆளாக்கப் பட்டுள்ளேன்.
இது சாதனைகளின் சுருக்கமே தவிர, முழுப் பட்டியல் அல்ல.
- 22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி;
- விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வட்டி 2005-2006இல் 9 சதவீதம்; 2006-2007 கழக அரசில் 7 சதவீதம்; 2007-2008இல் 5 சதவீதம்; 2008-2009இல் 4 சதவீதம்; 2009-2010இல் பயிர்க்கடன் வட்டி ரத்து; 2006க்குப் பின் இதுவரை 36 இலட்சத்து 71 ஆயிரத்து 372 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 838 கோடியே 6 இலட்சம் ரூபாய் பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
- 2005-2006இல் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை ரூபாய் 600; 2010-2011இல் சாதா ரக நெல் விலை 1050 ரூபாய்; சன்ன ரக நெல் விலை 1100 ரூபாய்; ர் மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள்; மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு;
- கரும்பு விவசாயிகளுக்கு 2005-2006இல் டன் ஒன்றுக்கு வழங்கப்பட்ட விலை ரூ.1014; தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது.
- ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனத்தின் மூலம் 31.3.2006 வரை பெற்ற கடன் தொகை வட்டியுட்பட 5 கோடியே 25 இலட்சம் தள்ளுபடி; ர் நில அடமானத்தின்மீது தொழில்புரிய வழங்கப் பட்ட பண்ணைசாராக் கடன்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு; வாங்கிய கடன் அசல் தொகையைச் செலுத் தினால் கடன் ரத்து;
- மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்;
- 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்;
- கழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உணவு தானிய உற்பத்தி 2005 - 2006இல் 61.17 இலட்சம் டன்; 2008-2009இல் 71.01 இலட்சம் டன்; 2009-2010இல் 84.29 இலட்சம் டன் என உயர்வு. ர் விவசாயிகளைச் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து சுழல்நிதி வழங்கும் திட்டத் தின்கீழ் 27 ஆயிரத்து 294 குழுக்கள் அமைக்கப்பட்டு, 27 கோடியே 29 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சுழல்நிதியாக வழங்கப் பட்டு, 32 ஆயிரத்து 940 குழுக்களுக்கு 402 கோடியே 56 இலட்சம் ரூபாய் பயிர்க் கடனாகவும் அளிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில், மின்சாரம் விரயமாவதைத் தடுத்திட, குறுசிறு விவசாயிகளுக்கு பழைய மின் மோட்டார்களுக்குப் பதிலாக இலவசமாக புதிய மின்மோட்டார்களும்; பெரும் விவசாயிகளுக்கு பம்ப்செட்டு களில் உள்ள பழைய மின் மோட்டார்களுக்குப் பதிலாக 50 சதவீத மானியத்தில் புதிய மின்மோட்டார்களும் 5 ஆண்டு களில் மாற்றி அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது
- 1 இலட்சத்து 5 ஆயிரத்து 494 கைத்தறி நெசவாளர் களுக்கும், 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்களுக்கும், சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2 இலட்சத்து 39 ஆயிரத்து 511 விவசாயி களுக்கும் இலவச மின்சாரம்; மேலும், 2 இலட்சம் பம்ப் செட்டுகளுக்கும் இலவச மின்சார இணைப்பு படிப்படியாக வழங்கிட ஆணையிடப்பட்டு வழங்கப்படுகிறது.
- விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 35 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங் களில் 2 கோடியே 13 இலட்சத்து 55 ஆயிரத்து 884 உறுப்பினர்கள் சேர்ப்பு; 21 இலட்சத்து 41 ஆயிரத்து 692 அமைப்புசாராத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 1011 கோடியே 62 இலட்சத்து 81 ஆயிரத்து 687 ரூபாய் உதவித் தொகை;
- தென்னை விவசாயிகளின் நலன்களை மேம்படுத்திட திரு. ச. ராஜ்குமார் மன்றாடியார் தலைமையில் 27.8.2010 அன்று தென்னை விவசாயிகள் நல வாரியம் அமைப்பு;
- 3742 கோடியே 42 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய்ச் செலவில் ஒரு கோடியே 72 இலட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை ஒரு கோடியே 62 இலட்சத்து 59 ஆயிரத்து 526 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
- 661 கோடி ரூபாய்ச் செலவில் 29 இலட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட் டுள்ளன; 1 இலட்சத்து 79 ஆயிரத்து 2 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயி கள் குடும்பங்களுக்கு 2 இலட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் இலவச நிலம்;
- 8 இலட்சத்து 30 ஆயிரத்து 495 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்; காமராஜர் பிறந்த நாளில் கல்வி வளர்ச்சி நாள் என பள்ளிகளில், கல்வி விழா;
- 2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 இலட்சம் குழந்தைகள், மாணவ மாணவி யருக்கு சத்துணவுடன் வாரம் 5 நாட்களும் முட்டைகள்;சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழங்கள்;
- படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகளுக்கேற்ற தொழிற் பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரி கள் மூலம் பெற, ஒரு கோடி ரூபாய் செலவில் திறந்த நிலைப் பல்கலைக் கழகம் மூலம் தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை;
- ஆண்டுதோறும் 24 இலட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 4 இலட்சத்து 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்;
- ஏழை மகளிர்க்கு பட்டப்படிப்பு வரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, முதுகலைப் பட்டப் படிப்பு வரை நீட்டிப்பு.
- தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.
- பட்டதாரிகள் இல்லாக் குடும்பங்களிலிருந்து ஒற்றைச் சாளர முறையில் தொழிற் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர் களுக்குக் கல்விக் கட்டணம் 20 ஆயிரம் ரூபாய் ரத்து செய்யப்பட்டு முதலாண்டில் 67 ஆயிரத்து 405 மாணவ மாணவியரும் இரண்டாம் ஆண்டு நேரடிச் சேர்க்கை யில் 10 ஆயிரத்து 750 மாணவ மாணவியரும் பயன்; பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் வெகுவாகக் குறைக்கப்பட்டு அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து பயில்கின்றனர்.
- சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் 5 புதிய அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்கள்;
- 2006க்குப்பின், ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுக்கோட்டை, தேனி, திருவண்ணா மலை, விழுப்புரம், பென்னாகரம், திருப்பத்தூர் (வேலூர்), வேதாரண்யம் ஆகிய 14 இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்; ர் மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி கோட்பாட்டின் படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்;
- அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லா திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, இராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள். ர் பத்தாம் வகுப்புவரை பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமெனச் சட்டம்;
- நூறாண்டுக் கனவை நனவாக்கிச் செம் மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைப்பு. ர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உவக்க கோவை மாநகரில் 2010 ஜூன் திங்களில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.
- தஞ்சையில் 2010 செப்டம்பரில் மாமன்னர் இராஜராஜனின் தஞ்சைப் பெரிய கோயில் 1000 ஆம் ஆண்டு நிறைவு விழா. ர் அருந்தமிழ்ச் சான்றோர் 113 பேரின் நூல்கள் நாட்டுடைமை; 7 கோடியே 61 இலட்சம் ரூபாய் பரிவுத் தொகை;
- நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி மாதம் 500 ரூபாய் என்பது 1.9.2006 முதல் 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 2006க்குப்பின் புதிதாக 2500 நலிந்த கலைஞர்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்க அனுமதிக்கப் பட்டு இதுவரை 9 ஆயிரத்து 563 கலைஞர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற் றுள்ளனர். இவர்களில், தற்போது 5 ஆயிரத்து 41 கலைஞர்கள் நிதியுதவி பெறுகின்றனர்.
- தமிழறிஞர்கள் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 999 தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் 15 ரூபாய் மருத்துவப் படியும், 528 தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு மாதம் 1500 ரூபாய் குடும்ப ஓய்வூதியமும் 15 ரூபாய் மருத்துவப் படியும் வழங்கப்படுகிறது.
- எல்லைக் காவலர்கள் 339 பேருக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் 15 ரூபாய் மருத்துவப்படியும், 166 எல்லைக் காவலர்களின் மரபுரிமையர்களுக்கு மாதம் 2000 ரூபாய் குடும்ப ஓய்வூதியமும் 15 ரூபாய் மருத்துவப்படியும் வழங்கப்படுகிறது.
- 4724 திருக்கோவில்களில் 523 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள் நடத்தப் பட்டுள்ளன;
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் உட்பட அனைத்துத் திருமண உதவித் திட்டங் களின் நிதியுதவி 10 ஆயிரம் ரூபாய் என்பது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு; 4 இலட்சத்து 67 ஆயிரத்து 419 ஏழைப் பெண்களுக்கு 882 கோடியே 6 இலட்சம் ரூபாய் நிதியுதவி;
- ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 25 இலட்சத்து 76 ஆயிரத்து 612 ஏழை மகளிர்க்கு மொத்தம் 1389 கோடியே 42 இலட்சம் ரூபாய் நிதியுதவி; ர் 50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் 12 ஆயிரத்து 904 ஏழைப் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை;
- வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் செயல் படுத்தப்பட்டு 18 ஆயிரத்து 742 மருத் துவ முகாம்களில் ஒரு கோடியே 77 இலட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் ஏழை எளியோர் பயன்;
- தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங் களிலும்; புதிதாக உருவாக்கப்பட்ட 116 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா மூன்று செவிலியர்களைப் பணியமர்த்தி 24 மணிநேரமும் மருத்துவ சேவை அளிப்பதால், அங்கு 2005-2006இல் நடைபெற்ற மகப்பேறுகளின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 532 என்பது, 2009-2010இல் 2 இலட்சத்து 98 ஆயிரத்து 853 ஆக, மூன்று மடங்கு உயர்ந்து கிராமப்புற மகளிர் மகிழ்ச்சி;
- சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாய்; கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு 1 இலட்சம் ரூபாய் என அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது. 21.11.2007இல் தொடங்கப்பட்ட இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம், 3.6.2008இல் தொடங்கப் பட்ட பள்ளிச் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின்கீழ் 3264 சிறார்க்கு 17 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் புகழ்வாய்ந்த 28 தனியார் மருத்துவமனைகளின் மூலம் இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, குழந்தைச் செல்வங்களின் அரிய உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
- கிராமப்புற ஏழைகளுக்கும் உடனடி மருத்துவ வசதி கிடைக்கச் செய்திட இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்துடன் இணைந்து 15.9.2008இல் தொடங்கப்பட்ட 445 ஊர்திகளுடன் கூடிய அதிநவீன அவசர கால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம் தமிழகம் முழுவதும் நடை முறை; 8 இலட்சத்து 8 ஆயிரத்து 907 பேர் பயன்; ர் அரசு ஊழியர்களுக்கு நான்காண்டுகளில் 2 இலட்ச ரூபாய் வரை மருத்துவ உதவி வழங்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்;
ர் இதய நோய், நீரிழிவு நோய், புற்று நோய்
போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உடற்பரிசோதனை செய்யும், நலமான
தமிழகம் திட்டம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி
உயிரிழந்தவர்களின் உடல்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல இலவச அமரர் ஊர்தி
சேவைத் திட்டம்.
ர் ஏறத்தாழ 2 இலட்சத்து 35 ஆயிரத்து 464
பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 62 ஆயிரத்து 349 கோடி ரூபாய் முதலீட்டிலான
27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; 24 அரசாணைகள் மூலம் 51 புதிய தொழிற்
சாலைகள் அமைக்க மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரை 12 தொழிற்
சாலைகள் திறப்பு;
ர் 4 இலட்சத்து ஓராயிரத்து 704 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 284 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது;
ர் ஏறத்தாழ 5 இலட்சத்து 9 ஆயிரத்து 336
இளைஞர்களுக்கு அரசு அலுவலகங் களில் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்
டுள்ளன; ர் புதுப்பிக்கத் தவறிய 2 இலட்சத்து 70 ஆயிரம் இளை ஞர்கள் 2001
முதல் பதிவு மூப்புடன் மீண்டும் புதுப்பித்துப் பயன்; ர் ஆதரவற்ற முதியோர்,
விதவைகள், மாற்றுத் திறனாளி களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைமாதம் 200
ரூபாய் என்பது 1.9.2006 இல் 400 ரூபாய் எனவும், 24.11.2010 முதல் 500
ரூபாய் என மேலும் உயர்த்தப்பட்டு, மொத்தம் 23 இலட்சத்து 71 ஆயிரத்து 370
பேர் மாதம் 500 ரூபாய் வீதம் உதவித்தொகை பெறுகின்றனர். இந்த உதவித் தொகை
மாதம் 750 ரூபாயாக உயர்த்தப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்
பட்டுள்ளது.
ர் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்
திறனாளி களுக்குப் பராமரிப்பு உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500
ரூபாய் என உயர்த் தப்பட்டு, 2006 முதல் ஆண்டுதோறும் 10 ஆயிரம் கடும்
மாற்றுத் திறனாளிகள் பயன்;
ர் 1989இல் தருமபுரி மாவட்டத்தில் கழக
அரசு தொடங்கிய மகளிர் திட்டத்தின்மூலம் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மகளிர்
சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை 5,54,538. இக்குழுக்களுக்கு
வழங்கப்பட்டுள்ள மொத்த கடன் 9 ஆயிரத்து 32 கோடி ரூபாய்.
ர் 2,549 கோடி ரூபாய்ச் செலவில் 12
ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகளில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித்
திட்டத்தின் கீழ் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள்;
ர் அதேபோல, அனைத்துப் பேரூராட்சி அண்ணா
மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் 280 கோடி ரூபாய்ச் செலவில் 561
பேரூராட்சிகளில் கட்டமைப்புப் பணிகள்; நிதிநிலையில் நலிந்த 30
நகராட்சிகளிலும் தலா 75 இலட்சம் ரூபாய்ச் செலவில் அடிப் படைக் கட்டமைப்பு
மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன; ர் மாநகராட்சி, நகராட்சிகளின்
நிதிநிலை மேம்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்திட அவை அரசுக்குச் செலுத்த
வேண்டிய 793 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி;
ர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிப்
பகிர்வு 2006-2007இல் 8 விழுக்காடு; அதாவது 2112 கோடி ரூபாய்; 2007-2008இல்
9 விழுக்காடு; அதாவது 2734 கோடி ரூபாய்; 2008-2009இல் 9 விழுக்காடு;
அதாவது 2959 கோடி ரூபாய்; 2009-2010இல் 9.5 விழுக்காடு; அதாவது 3316 கோடி
ரூபாய்; 2010-2011இல் 10 விழுக்காடு என மேலும் உயர்த்தி, 4030 கோடி ரூபாய்
வழங்கப்பட்டுள்ளது.
ர் 12 ஆயிரத்து 94 கோடி ரூபாய்ச் செலவில்
57 ஆயிரத்து 787 கிலோ மீட்டர் நீளச் சாலை களில் மேம்பாட்டுப் பணிகளும்
பராமரிப்புப் பணிகளும் நிறைவேற்றப்பட்டன;
ர் 4 ஆயிரத்து 945 கிலோ மீட்டர் நீளமுள்ள
ஒரு வழித் தடச் சாலைகள் இடைவெளித் தடங் களாகவும்; 2611 கிலோ மீட்டர் ஒரு
வழித் தடச் சாலைகள் இருவழித் தடங்களாகவும்; 168 கிலோ மீட்டர் நீள இருவழித்
தடச் சாலைகள் பல வழித் தடங்களாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
ர் மாநில நெடுஞ்சாலைகளில் அகலப்படுத்த
இயலாத 32 கிலோ மீட்டர் தவிர ஒரு வழித் தடச்சாலைகளே இல்லை என்ற நிலை
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர 11 ஆயிரத்து 219 கிலோமீட்டர் நீளச் சாலைகள்
மேம்படுத் தப்பட்டுள்ளன.
ர் தமிழகத்தில் உள்ள சாலைகளில் 1046
பாலங்கள் மற்றும் 3800 மிகச் சிறுபாலங்கள் 881 கோடி ரூபாய்ச் செலவில்
கட்டப் பட்டுள்ளன; ர் தமிழகத்தில் உள்ள 4,676 கி.மீ. தேசிய நெடுஞ்
சாலைகளில் 3,226 கி.மீ நீளச் சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு உள்ளன;
ர் தலவரி, தலமேல்வரி, தண்ணீர்த் தீர்வை
அனைத்தும் ரத்து; நிலவரி, ஏக்கர் ஒன்றுக்குப் புன்செய் நிலங்களுக்கு 15
ரூபாய் என்பது 2 ரூபாய் என்றும், நன்செய் நிலங்களுக்கு 50 ரூபாய் என்பது 5
ரூபாய் என்றும் பெயர் அளவிற்கு மட்டுமே வசூலிக்க அரசு ஆணை; ர் ஈரோடு,
திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை
உயர்த்தப்பட்டுள்ளன.
ர் அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்கள் உதயம்;
- தருமபுரி மாவட்டத்தில் அரூர்-புதிய கோட்டம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் புதிய கோட்டம்; திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டை புதிய கோட்டம் என மூன்று புதிய கோட்டங்கள்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு; திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர்; திருவள்ளூர் மாவட்டம் மாதவரம்; கரூர் மாவட்டம் தரகம்பட்டியைத் தலைமை இடமாகக் கொண்டு கடவூர்; கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி; வேலூர் மாவட்டம் ஆம்பூர்; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்; காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர், சோழிங்கநல்லூர் என 9 புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- கட்டணம் உயர்த்தப் படாமல் 12 ஆயிரத்து 137 புதிய பேருந்துகளுடன் மேலும் 3000 புதிய பேருந்துகள்; ர் இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு;
- அருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு; சமத்துவ சமுதாயம் காணும்நோக்கில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
- சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்திலான 179 கோடி ரூபாய்ச் செலவில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் 15.9.2010இல் திறப்பு; ர் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைத் திட 910 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு; புதிய சட்டமன்ற - தலைமைச் செயலக வளாகம் திறந்து சாதனை; ர் 100 கோடி ரூபாய்ச் செலவில் அடையாறு தொல்காப்பியப் பூங்கா;
- சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோடி ரூபாய்ச் செலவில் உலகத்தரத்திலான செம்மொழிப் பூங்கா 24.11.2010இல் திறப்பு;
- சென்னை மாநகர் குடிநீர்ப் பற்றாக்குறையை முற்றிலும் தீர்த்திட, வட சென்னை மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு, 31.7.2010இல் திறப்பு;
- மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்; உருவாகி வருகிறது.
- ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதி உதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்ட அமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன;
- 1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;
- 630 கோடி ரூபாய்ச் செலவில், இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றம்;
- சென்னைத் துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை 1,655 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பறக்கும் சாலைத் திட்டம்; பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு வேகமாக உருவாகி வருகிறது.
- மத சுதந்திரம் பேண - கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து;
- மூன்றாவது காவல் ஆணையம் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு, அது வழங்கிய 444 பரிந்துரைகளில் இதுவரை 278 பரிந் துரைகள் நடைமுறை;
- 2 இலட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம்; ஓய்வூதியம்; டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டு, 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவில் 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
- இதன்காரணமாக, 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையாக அனுமதிக் கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
- ஏறத்தாழ 2 இலட்சம் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பயன்பெறும்வகையில் 200 கோடி ரூபாய் கூடுதல் செலவில் ஒரு நபர் குழு பரிந்துரை 1.8.2010 முதல் நடைமுறை;
- ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி 163 கோடி ரூபாய்ச் செலவில் கூடுதல் சலுகைகள்; 2.73 இலட்சம் ஆசிரியர்கள் பயன்.
- அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப் படும் ஊர்திப்படி 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக 1.10.2010 முதல் உயர்த்தி வழங்கிட ஆணை;
- 21 இலட்சம் குடிசை வீடுகளை 6 ஆண்டு களில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்னும் புரட்சிகரமான திட்டம் இவ்வாண்டில் நடைமுறை. நடப்பாண்டில் ஒரு வீட்டிற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம் 2,250 கோடி ரூபாய்ச் செலவில் 3 இலட்சம் வீடுகளைக் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டு, 15.8.2010 முதல் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்குரிய பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
- இத்திட்டத்தின்கீழ் முதல் வீடு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் 9.10.2010 அன்று பயனாளிக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இது வரை 77 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு; 60 ஆயிரத்து 486 வீடு களுக்குப் பயனாளிகள் குடிபுகுந்துள்ளனர்.
- மேலும் 12 இலட்சம் பயனாளிகளுக்கு தகுதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக மேலும் 3 இலட்சம்
குடிசைகள் இத்திட்டத்தின்கீழ் கான்கிரீட் வீடுகளாகக் கட்டப் படுவதற்கு
அனுமதிக்கப்பட்டு 2 இலட்சத்து 98 ஆயிரத்து 162 வீடுகள் கட்டு வதற்குப் பணி
ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. உடன்பிறப்பே, கழக ஆட்சியில் ஐந்தாண்டு களில்
நிறை வேற்றப்பட்ட சாதனைகளின் தலைப்புகளை மட்டுமே இங்கே திரட்டித்
தந்துள்ளேன். இந்தச் சாதனைகள் அனைத்துமே அறி விப்புகளாக இல்லாமல்,
தமிழ்நாட்டு மக்களுக்கு செய்து தரப்பட்டவை என்பதை நீயும் அறிவாய்; அதனை
அவர்களும் அறிவார்கள். இந்தத் தேர்தல் நேரத்தில் கடந்த மூன்றாண்டுகளில்
அ.தி.மு.க. அரசு என்னென்ன சாதனைகளைச் செய்தது என்பதை முதலமைச்சரே ஊருக்கு
ஊர் எடுத்துச் சொல்லி வருகின்ற நேரத்தில், இந்தப் பட்டியலையும் நீயும்
துண்டு அறிக்கைகளாகத் தயாரித்து வாக்காளர் களிடம் கொண்டு போய்ச் சேர்த்திட
வேண்டிய கடமையையும் செய்வாய் என்ற நம்பிக்கையோடு இந்தப் பட்டியலை இங்கே
எழுதியுள்ளேன்.
அன்புள்ள,
மு.க.
(முரசொலி, 21.3.2014)
(முரசொலி, 21.3.2014)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக