செவ்வாய், 2 செப்டம்பர், 2014

ஒடுக்கப்பட்ட நாடர்கள் வரலாறு


ஒடுக்கப்பட்ட நாடர்கள்


கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரிதிருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது இந்து நாடாக இருந்தது. அந்த காலகட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். இந்த திருவிதாங்கூர் நாட்டால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்[பனையேறி நாடார்], பரவர், ஈழவர், முக்குவர்புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலக்கிழார் நாடார்களும் இப்பகுதியில் இருந்தனர். இவர்கள் உயர்சாதிகாரர்கள் போல் உயர்வான நிலைமையில் இருந்தனர். நாடான் பெண்கள் மேலாடை அணிந்து கொள்ள முழு உருமை இருந்தது.[1]. இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் நாடு ஒரு நடைமுறையை வகுத்திருந்தது. இதன்படி 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமதிப்புடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட சாணார்(நாடார்) சாதியைச்சேர்ந்த மக்கள் தங்கள் சாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு நாடார் கிருத்தவ பெண்களுக்கு தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.
திருவிதாங்கூர் என்ற இந்து மன்னர் நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவு வரை நிலைத்து இருந்த சமுதாய கோட்பாடுகளை இவர்கள் ஆய்ந்தறிந்தால் மட்டுமே இங்கே உயர் இந்துக்கள் என்று தாங்களாகவே வகுத்துக் கொண்ட நம்பூதிரிப் பிராமணர்களும், நாயர் தறவாட்டுக்காரர்களும், வெள்ளாளப் பண்ணைகளும் இழிவு அல்லது தாழ்ந்த இந்துக்களின் மேல் அடித்தேற்றியிருந்த சமூகச் சீர்கேடுகளை அறிந்து கொள்வதற்கு இயன்றிருக்கும். தீண்டாமை, காணாமை, நடவாமை போன்ற கோட்பாடுகள் ஆழமாக பதிந்திருந்த நாடு இந்தியாவில் திருவிதாங்கூர் மட்டும் தான் என்பதை இவர்கள் உணர வேண்டும். “சாணார்(நாடார்) அல்லது ஈழவ இனத்தைச் சார்ந்த ஒருவன் பிராமனிடமிருந்து 36 அடி தொலைவிற்கப்பாலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திற்கப்பாலுமே நிற்க முடியும். புலையர் இனத்தைச் சார்ந்த ஒருவனுக்கும், பார்ப்பனுக்குமிடையே இருக்க வேண்டிய குறைந்த அளவு தொலைவு 96 அடியாகும். புலையன் ஒருவன் நாயர் இனத்தைச் சேர்ந்தவனிடமிருந்து 60 அடி அகன்று நிற்க வேண்டும். நாயடி அல்லது புலையன் ஒருவனை ஒரு பார்ப்பனன் பார்க்க நேரிட்டால் அவன் தீட்டுப்பட்டவனாகக் கருதப்படுவான். இங்ஙனம் தீட்டுப்பட்டவன் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி நீராடி தன்னைச் துப்புறவுச் செய்துக்கொள்ள வேண்டும்”. [2] வருணாசிரமக் கொடுமைகள் நிறைந்திருந்த திருவிதாங்கூர் என்ற “தெய்வத்தின்றே” நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது மார்பகத்தை மறைத்து, மானமாக வாழ்ந்திருக்க முடியுமா? என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நிலை தென் தாலுகாக்களான அகத்தீசுவரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை போன்ற தாலுகாக்களில் நிலையில் இருந்தது என்பது உண்மை. 


மேலாடை அல்லது தோள் சீலை

திருவிதாங்கூரில் “மேலாடை”, அல்லது “Upper cloth” என்பதை மலையாளிகள் “மேல்முண்டு” என்றே அழைக்கின்றனர். நாயர் பெண்கள் இன்றும் இந்த மேல் முண்டை சில சமயச் சடங்குகள் மற்றும் திருமணச் சடங்குகளில் கடைபிடித்து வருகின்றனர். நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலக்கிழார் நாடார்களும் இப்பகுதியில் இருந்தனர். இவர்கள் உயர்சாதியார்களைப் போல் உயர்வான நிலைமையில் இருந்தனர். நாடான் பெண்கள் மேலாடை அணிந்து கொள்ள முழு உருமை இருந்தது.[4]. இவர்கள் சாதாரணமாக மூன்று முண்டுகளை பயன்படுத்துகின்றனர். ‘உடுமுண்டு’ அதாவது உடுத்திக் கொள்ளுகின்ற முண்டு (வேட்டி – ஒற்றை அல்லது இரட்டை), மார்பு துண்டு, அதாவது மார்பகங்களை மறைக்கின்ற கச்சை போன்ற வேட்டி, அதற்கும் மேலாக தோளோடு தோளில் இட்டு மறைக்கின்ற “மேல்முண்டு” அதாவது மேலடை போன்ற வேட்டித்துண்டுகளாகும். நம்பூரிப் பெண்கள் பொதுவாக மார்புமுண்டு அணியாமல், மேல்முண்டால் மார்பகங்களை இலைமறைவு காய்மறைவாக போர்த்திக் கொள்வர். இதை சித்தரிக்கின்ற வகையில் வரலாற்றாசியர் சங்கை எ.எசு.சாமுவேல் மேற்றீற் அவர்களின் தர்மபூமி (Land of charity) 1870-யில் பக்கம் 30-ல் படம் ஒன்று தந்துள்ளார். இதுதான் “தோள்சீலை”யே (மேல்முண்டு) தவிர ‘தோள் சேலை அல்ல’. பெண்களின் சேலை[புடவை] (Saree) முந்தாணை அல்ல தோள்சீலை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். திருவிதாங்கூர் நாட்டு அரசிகளே கூட இந்த மேல்முண்டை (தோள் சீலை) அணிவது இல்லை. இதை திருவிதாங்கூர் வரலாற்றை விரிவாக எழுதின நாகம் ஐயாவின் முதல் பாகத்தில் பக்கம் 520-ல் காணலாம். தவிரவும் இவருக்கு முன்பு (1878-ல்) திருவிதாங்கூர் வரலாற்றை அதன் தொன்மைக்காலம் தொட்டு எழுதிய திரு.பி.சங்குண்ணிமேனன் கூட அரசி கவுரிலெட்சுமிபாய் (பக்கம் – 362) மற்றும் அரசி பார்வதிபாய் (பக்கம் – 383) மற்றும் இளவரசு உருக்குமணிபாய் (பக்கம் – 389) போன்றோர்களின் ஆடை அலங்காரமும், கீழ்முண்டு, மார்பு முண்டு, மேல்முண்டு (Upper Cloth) என்றுதான் காணப்படுகின்றது. இந்த முறைதான் உயர் சாதி இந்துக்கள் அன்று அணிந்து வந்த ஆடை அலங்காரம். இந்த முறையில் இழிவு சாதி இந்துக்களும், மதம் மாறின கிறுத்ததியியர்களும், ஆடை அணிக்கூடாது என்பது மரபு ஆகும்.

போராட்டத்திற்கான காரணம்

ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பார்ப்பனர்களும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று. இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

உடை கட்டுபாடு

திருவிதாங்கூர் நாட்டால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப் பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப் பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிரானணர்கள் முன்பு அனைத்துச் சாதிப் பெண்களும் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. இந்த உடை கட்டுப்பாடுகள் மிக கடுமையாக கடைபிடிக்கப் பட்டன. உடை அணியும் விதத்தை வைத்தே மக்களை உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822ம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைப்பெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப் பேராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட போராட்டம் 1822 முதல் 1823 வரையும், இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரையும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைப்பெற்றது.

முத்துக்குட்டி சாமியார் பங்கு

முத்துக்குட்டி சாமியார் 1808-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதி (கொல்லமாண்டு மாசி மாதம் 20-ம் நாள்) பிறந்தார். இவரது தாய் தந்தையர் திருநெல்வேலி மாவட்டம், இடையன்குடியிலிருந்து பனைத்தொழில் செய்து பிழைப்புக்காக திருவிதாங்கூர் வந்தனர். வாலிப பருவத்தில் இவர் பனைத்தொழிலையே செய்தார். எனவே எஸ். இராமச்சந்திரன் சித்தாந்தத்தின்படி இவர் நாடான் அல்லது சத்திரியன் ஆக முடியாது் இவர் சாணான் ஆகவே முடியும். இவர் நோய்வாய்ப்பட்டு, திருச்செந்தூர் முருகன் சன்னிதானத்திற்கு தரிசனத்துக்காகத் தூக்கிச் சென்ற வேளையில், 1833 ஆம் ஆண்டு, தனது 25-ம் வயதில் விஞ்சைப் பெற்று ஊர் திரும்பினார். அதனைத் தொடர்ந்து சுவாமிகள் தவ வாழ்க்கை மேற்கொண்டு 1834 ஆம் ஆண்டில் தனது சமயத் தொண்டைத் தொடங்கினார். இதற்கும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1838 முதற்கொண்டு அருளாசிகள் வழங்கத் தொடங்கி புகழ் அடைந்தார். இவரது கொள்கையான “ஏக கடவுள், ஏகச் சமயம், ஒரே சாதி” என்ற கோட்பாட்டால் சாணார் மக்கள் அனேகர் ஈர்க்கப்பட்டு இந்து சமயத்தைவிட்டு இப்புதிய சமயத்தைத் தழுவினர். 1851 ஆம் ஆண்டு தனது 43 அகவையில் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இவரது பூத உடல் பூவண்டர்தோப்பு என்ற சாமித்தோப்பில் சமணமுறை போன்று உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டு, அதன்மேல் தலைமைப்பதி நிறுவப்பட்டுள்ளது.
இவரது மக்கள் தொண்டு 1838-ல் தான் தொடங்கப்பட்டது. ஆனால் தோள்சீலைப் போராட்டம் 1822-ல் தொடங்கப்பட்டுவிட்டது. அதன் இரண்டாவது கட்டப் பேராட்டம் கூட 1829-ல் தொடங்கப்பட்டது. அதாவது சாமியார் மக்கள் தொண்டு தொடங்குவதற்கு முன்பே, (1838-ல்) ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே கலகத்தின் இரண்டாவது நிலை எட்டிவிட்டது. எனவே பெண்கள் தோள்சீலை (Upper Cloth) அணிவதில் இவருக்கு எந்தவித பங்களிப்பும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். தோள்சீலைப் போராட்டம் முழு வெற்றி பெற்றது 1859-ல் ஆகும். இதற்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே சாமியார் காலமாகிவிட்டார்கள். அந்த வகையிலும் அவருக்கு பங்கு எடுத்துக் கொள்ள இயலவில்லை. அவரது ஆயுட் காலத்தில் சில குறுகிய காலகட்டங்களில் தோள்சீலைப் போராட்டம் நடந்தது என்பது உண்மை. இப்போராட்டங்களை கிறிஸ்தவ மிஷனறிமார்கள் முன்னின்று நடத்தினார்களேத் தவிர, முத்துக்குட்டிசாமிகள் முன்னின்று, குறைந்தபட்சம் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களிடத்தில் கூட விரிவாகச் செய்யவில்லை.
பூமகள் நிதமுடன் போட்ட
தோள்சீலை தன்னைப் போடாதே என்றடித்தானே சிவனே அய்யா
என்று இறைவனிடம் ஆவலாதி கூறுகிறாரேத் தவிர, அடித்த உயர்சாதியானனைப் பார்த்து “ஏய் நீ ஏன் எங்கள் பெண்ணை அடிக்கிறாய், அடித்தால் உன் கையை நான் உடைப்பேன்” என்றாவது கூறி இவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தவிரவும் பெண்களை அழைத்து “ஏ, கண்மணிகளா சேலையைக் கட்டிக் கொண்டும், ரவிக்கையை அணிந்து கொண்டும் தைரியமாக நடமாடுங்கள், அதனால் என்ன வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பெண்களுக்கு இவர் ஊக்கமளித்ததாகக்கூட அகிலத்தில் குறிப்பு உண்டா?

முதல் போராட்டம்

சீர்திருத்தக் கிறித்தவ சமயத் தொண்டரான மீட் பாதிரியார் [6] கிறித்தவ பெண்களின் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதனால் கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை துணிந்து மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு மேலாடையையும் பயன்படுத்தினர். இதனால் மேல் சாதியினர் கலவரம் செய்தனர். மே மாதம் 1822ம் வருடம் கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் ஐயர் என்ற ஐரோப்பிய மறைப்பணியாளர் ஆங்கிலேய தளபதிகார்னல் நேவால் என்பவருக்கு இச் சம்பவங்களைப் பற்றி விரிவாக கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரனைக்கு உத்தரவிடுகிறார். இதன் பயனாக 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப் படி சீர்திருத்தக் கிறித்தவர்களுக்கு மட்டும் குப்பாயம் என்ற உடையை அணியலாம் என்று தீர்ப்ளிக்கப் படுகிறது.

இரண்டாம் கட்ட போராட்டம்

மிக அதிகமாக பாதிக்கப் பட்ட இடங்களான ஆத்தூர்திற்பரப்புகண்ணனூர்அருமனை,உடையார்விளை,புலிப்புனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827 ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறித்தவப் பெண்கள் உயர்சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக்கூடாது என்று தடை விதிக்கப் பட்டது. இதனால் கிறித்தவ நாடார் பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ நாடார் பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையை விட ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் சாதி பெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர்களைப் பின்பற்றி இந்து நாடார் பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு ஆட்சியில் இருந்த நாயர்கள் எதிர்பு தெரிவித்தனர். விக்டோரியா மகராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. விக்டோரியா மகராணியின் பிரகடனம்
'one soceity or Government should not interfere into the religious regulations or social restrictions of other society. Government servants should not intervene and discriminate anybody in the customary affairs that is being followed in the respective soceities. The violators of this order would be punished'[7]

இந்த பிரகடனம் நவம்பர் 1, 1858 ம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவை ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியிடமிருந்து அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது ஆற்றிய உரை. இதை எதிர்த்து கிறித்தவ மறைப் பணியாளர்கள் ஆங்கிலேய அரசிடம் முறையிட்டனர். நெய்யாற்றின்கரையில் தொடங்கியப் போராட்டம் பாறசாலைநெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன. ஆண்கள் தங்கள் உயிருக்கு பயந்து பல இடங்களில் ஒளிந்து வாழ்ந்து வந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஐரோப்பிய மறைபரப்பாளர்களின் பங்களாக்களில் ஒளிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். டிசம்பர் 30, 1859 ம் நாள் கோட்டாறுப் பகுதியில் வைத்து கிறித்தவ நாடார்களுக்கும் உயர் சாதி நாயர்களுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. இந்து நாடார்களும் கிறித்தவர்களுடன் இதில் கைகோர்த்து கொண்டனர்.

உடை உடுத்த உரிமை

1829-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் நாள் திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட நீட்டில் (அரசு ஆணையில்) இந்து மதத்தில் நீடிக்கின்ற சாணார் பெண்டிர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சாணார் பெண்டிர் போன்று குப்பாயம் அணியலாம் என்று கூறப்படவில்லை. இந்த உத்தரவுப்படி இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கு தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை வழங்கவில்லை என்பது வெட்ட வெளிச்சம். இதனால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கப் பெற்ற உரிமையும் பறிபோயிற்று. சுருக்கமாகக் கூறின்
“… As it is not reasonable on the part of the Shanar women to wear cloths over their breasts, such custom being prohibited, they are required to abstain in future from covering the upper part of their body. An order (circular) had been issued on the 7th Edavam 989, to all places prohibiting the Shanar women of the families of such Sanars as may have embraced Christianity from wearing cloths, over their breasts, and requiring them to substitute for these the Kuppayam (a kind of short bodice used by their Christians and by Mohamadan native females) but with regard to their (the Shanars) allegation as an authority for wearing clothes over their breasts, that a decree has been passed subsequently by a law court, permitting the Shanar women on the contrary the use of clothes on the upper part of their body. Such a decision since if it be admitted as establishing a rule, it would be a direct contravention of the order alluded to, cannot but be considered as invalid. Therefore the order referred to is hereby republished to be held as a document (or authority) in their respect”
[8].
மிஷனறிகள் அல்ல குப்பாயத்தை வடிவமைத்தது. அவர்களின் மனைவிகளே இதை உருவாக்கி கையால் தைத்துக் கொடுத்தனர். இதை உருவாக்கிக் கொடுப்பதற்கான காரணத்தை அவர்கள் கூறும் பொழுது
“… that the Shanars and such other castes women, as have embraced Christianity ought to wear an upper cloth for the sake of decency when they go to church, the fairs, markets and similar places, and they were instructed to do so and that it ought to be ordered agreeably to Christianity...” No doubt at this fag end of the nineteenth century it passes strange a government should make restrictions and laws as to the domestic economy and dress of individuals; but the Travancore Govt. was so unenlightened in those days that it made such indecent restrictions regarding the dress of inferior women”. [9].
இதற்கான அரசாணை 26, சூலைத் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை மற்ற கீழ் சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.

மூன்றாம் கட்ட போராட்டம்

இதனால்தான் மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. இப்பேராட்டத்தை மிஷனறிகள் பொறுப்பேற்று நடத்தினர். ஆனால் இப்போராட்டத்தைப் பூனூல் அணிந்த சத்திரிய நாடார்கள் எதிர்த்தனர். ஆனாலும் சாணார் கிறிஸ்தவர்கள் சற்றும் சளைக்காமல் நாயர்களை எதிர்த்துப் போராடி 1859-ல் வெற்றிவாகை சூடினர். “அதன் பயனாக 1859 ஆம் ஆண்டு ஜுலை 26-ம் நாள் அதிகாரபூர்வ அரசு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அனைத்து சமயத்தைச் சேர்ந்த நாடார் பெண்களும், கிறிஸ்தவப் பெண்களைப் போன்று குப்பாமிட்டுக் கொள்ளவோ, மீனவப் பெண்களைப் போன்று கட்டிச் (Coarse) சீலை உடுத்திக் கொள்ளவோ செய்யலாம் என்றும், ஆனால் உயர் சாதிப் பெண்கள் (நாயர், நம்பூதிரிகள், வெள்ளாளர்கள்) மேலாடை அணிவது போன்று அணியாமல் வேறு எவ்விதத்திலாவது மார்பை மறைத்துக் கொள்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என அந்த அறிக்கை தெரிவித்தது”. [10] இந்த நீட்டுப்படித்தான் இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கும் புனூல் பூண்ட நாடார் பெண்களுக்கும் சேர்த்து குப்பாயம் அணியும் உரிமை கிடைத்தது. ஆயினும் இவ்வுரிமை தாழ்ந்த சாதிப் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு இவ்வறிப்பால் உரிமை கிடைக்கவில்லை. எனவே இந்த ஆணையைக் கண்டித்து மிஷனறிகள் ஆங்கில அரசிடம் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். சென்னை மாகாண ஆளூனர் சார்லஸ்ட்ரெவிலின் திருவிதாங்கூருக்கான ஆங்கிலப் பிரதிநிதி மால்ட்பியை நேரடியாக அழைத்துப் பேசினார். திருவிதாங்கூரில் பெண்கள் உடை அணிவதில் இருக்கின்ற எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்க ஆங்கிலப் பிரதிநிதி மகாராஜாவிடம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மால்ட்பி இதனைக் குறித்து மகாராசாவிடம் (ஆயில்லியம் திருநாள் ராமவர்மா – 1860 – 1080) பேசினார். ஆங்கில அரசின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் ஆங்கில அரசுடனான தங்களது உறவு பாதிக்கப்படும் என்றுணர்ந்த மகாராஜா 1865-ம் ஆண்டு மற்றோரு அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் இந்து கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு மேலாடை அணிவதற்குக் கொடுக்கப்பட்ட உரிமை அனைத்து சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் நாயர் பெண்களைப் போன்று ஆடை அணியும் உரிமை மட்டும் அனைவருக்கும் மறுக்கப்பட்டிருந்தது”. [11]

உடை உடுத்த உரிமை வழங்கிய அரசாணை
ரவிக்கை அணிவதற்கான உரிமையை கர்னல் மன்றோ (Resident) 1813-ல் வழங்கப்பட்டு கிறிஸ்தவப் பெண்கள் அன்று முதல் பகிரங்கமாக அணிந்து கொண்டனர்.
இப் போராட்டத்திம் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர்.

[தொகு]தாலி அறுத்தான் சந்தை சம்பவம்

போராட்டத்தின் போது குப்பாயம் அணிந்த தாழ்த்தப்பட்டவர்களது ஆடைகள் கிழிக்கப்பட்டு தனியாகத் தொங்கவிடப்பட்டன. சில இடங்களில் அவற்றிற்குத் தீ வைக்கப்பட்டன. பெண்களின் மேலாடைகளை கிழிப்பதற்காக உயர் சாதியினர், ஒரு சிறிய அரிவாளை, நீண்ட கழியின் முனையில் கட்டிப் பயன்படுத்தினார்கள். அதை தொரட்டி என்று திருநெல்வேலிதஞ்சை மாவட்டங்களிலும் தோட்டை என்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் குறிப்பிடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்களின் அருகே சென்றால் தீட்டு என்ற காரணத்தால் இக்கருவியை பயன்படுத்தினார்கள்.ஒரு முறை சந்தைக்குக் குப்பாயம் அணிந்து வந்த ஒரு பெண்ணின் மேலாடையைக் கிழிக்கப் பயன்படுத்தப்பட்ட தொரட்டி அவரது தாலிக் கயிற்றையும் அறுத்துக் கொண்டு வந்து விட்டது. அன்றிலிருந்து அந்த சந்தைக்குத் தாலி அறுத்தான் சந்தை என்ற பெயர் ஏற்பட்டது. இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் இச்சந்தை தாலி அறுத்தான் சந்தை என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது.[12]




தாலி அறுத்தான் சந்தை சம்பவம்

போராட்டத்தின் போது குப்பாயம் அணிந்த தாழ்த்தப்பட்டவர்களது ஆடைகள் கிழிக்கப்பட்டு தனியாகத் தொங்கவிடப்பட்டன. சில இடங்களில் அவற்றிற்குத் தீ வைக்கப்பட்டன. பெண்களின் மேலாடைகளை கிழிப்பதற்காக உயர் சாதியினர், ஒரு சிறிய அரிவாளை, நீண்ட கழியின் முனையில் கட்டிப் பயன்படுத்தினார்கள். அதை தொரட்டி என்று திருநெல்வேலிதஞ்சை மாவட்டங்களிலும் தோட்டை என்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் குறிப்பிடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்களின் அருகே சென்றால் தீட்டு என்ற காரணத்தால் இக்கருவியை பயன்படுத்தினார்கள்.ஒரு முறை சந்தைக்குக் குப்பாயம் அணிந்து வந்த ஒரு பெண்ணின் மேலாடையைக் கிழிக்கப் பயன்படுத்தப்பட்ட தொரட்டி அவரது தாலிக் கயிற்றையும் அறுத்துக் கொண்டு வந்து விட்டது. அன்றிலிருந்து அந்த சந்தைக்குத் தாலி அறுத்தான் சந்தை என்ற பெயர் ஏற்பட்டது. இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் இச்சந்தை தாலி அறுத்தான் சந்தை என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது.[12]

சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்திட்ட சர்ச்சை கருத்துக்கள்

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடபட்டுள்ள 9ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தின் 168வது பக்கத்தில் காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற தலைப்பிலான பாடத்தில் நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தும் வகையில் சில கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அது உடனே நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தை சேர்ந்த திமுக, மதிமுக, பமக, சமக ஆகிய கட்சிகள் கூறி வருகின்றன. இப்பாட திட்டத்தை ஜானகி நாயர் என்பவர் தயாரித்துள்ளார். அவர்கள் நீக்குவதற்கு முன் வைக்கும் முக்கிய காரணங்கள்.
  • சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள பத்தியில், ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கபட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள் தான் என்றும், நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்றும் தவறாக குறிப்பிடபட்டிருக்கிறது. தமிழர் நாகரீகத்தின் ஓர் அங்கமாக இந்து கடலில் மூழ்கிய குமரிக்கண்டத்தின் ஒருபகுதி தான் கன்னியாக்குமரி மாவட்டம் மாகும். நாடர்கள் தான் அம்மாவட்டத்தின் பூர்வகுடிமக்கள் ஆவர். அவ்வாறு இருக்கும்போது அவர்களை பிழைப்பு தேடி வந்தவர்கள் என்றும், பிழைப்பு தேடி வந்த மலையாள நாயர்களை பூர்வகுடிமக்கள் என்றும் பாடநூலில் குறிப்பிடபட்டிருக்கிறது.
  • நாடார்களை சாணார்கள் என்று அழைக்கும் வழக்கம் வெகுகாலத்திற்கு முன்பே ஒழிந்துவிட்ட நிலையில், இந்த பாடத்தின் அனைத்து இடங்களிலும் நாடார் சமுதாயத்தினரை சாணார்கள் என்று குறிப்பிட்டிருப்பது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.
  • நாடார் சமுதாயப் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப் பட்டிருந்ததை எதிர்த்து, கிறித்தவ மறைபரப்பு பணியாளர்களின் துணை கொண்டு நடத்திய போராட்டங்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. 1836ம் ஆண்டிலிருந்து அய்யா வைகுந்தர் அவர்கள் நடத்திய போராட்டங்களை பற்றிய குறிப்புகளை பாட புத்தகத்தில் சேர்க்கவில்லை.
  • மரமேறி தாண்டி வந்த நாடார்கள்

    திருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலியின் உண்மையான அர்த்தம் 'புகழ்மிகும் நெல்லின் வேலி'.
    இந்தப்பகுதி தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தில் அகண்ட இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் இருந்ததால் இந்தப்பகுதி மக்களை முதலில் பார்த்துவிடலாம்.


    சோழநாட்டிலுள்ள காவேரிப்குதி, மதுரை, தென் திருவாங்கூர் ஆகிய பகுதிகளில் இந்த நாடார் இன மக்கள் உருவானதாக கூறப்படுகிறது. ஈழத்து வரலாற்றில் தென்னிந்திய கடற்கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் எளிதாக புலம் பெயர்ந்து ஈழத்தை நோக்கி நகரத் தொடங்கினர்.  ஆனால் 'உள்ளே வெளியே' என்பதாக ஈழத்துக்குள் சென்றவர்களும் திரும்பவும் இங்கேயே வந்தவர்களும் உண்டு.  அது போல ஈழத்தில் வடக்கு கடற்கரையோரத்தில் வாழ்ந்து வந்தவர்களின் ஒரு பகுதியினர் தான் இவர்கள் என்றும் கூறப்படுகிறது.  தொடக்கத்தில் சான்றார் என்று அழைக்கப்பட்டு பிறகு சாணார் என்று மருவியது. யாழ்பாணத்தில் இருந்து வந்தவர்கள் இந்த பனைவிதைகளை கொண்டு வந்து இங்கே பனை மரங்களை உருவாக்கினார்கள் என்று நம்புகிறார்கள்.


    நெல்லை மற்றும் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் போதே நம் கண்களுக்கு பனைமரம் ஏராளமாகத் தெரியும்.  கேரளாவைப் போலவே கண்களுக்கு குளிர்ச்சி தரும் பச்சைபசேலுக்குத் தேவையான சீதோஷ்ண நிலை எங்கும் நிலவும். இராமநாத புரத்தை வறப்பட்டிக்காடு என்பது போல மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள தென்மாவட்டங்கள் குறிப்பாக நாங்குனேரி, ஸ்ரீவைகுண்டம்,திருச்செந்தூர் போன்றவைகள் வறண்ட பூமியாக கண்ணுக்கு எட்டியவரையில் பொட்டல்காடாகவே தெரியும்.  
    மக்கள் வசிப்பதற்கு தகுதியற்றதாக, கருங்கற்கள் நிறைந்த, செம்மண் நிறைய மொத்தத்தில் பனைமரங்கள் வளர்வதற்கு ஏற்ற பூமியாக இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள பூமியில் ஆழத்தில் சிவந்த களிமண் இருந்த போதிலும் மேல்மட்டத்தில் உள்ள தளர்ச்சியான மணல் ஒவ்வொரு காற்று வீசும் பருவத்திலும். தென் மேற்கு சுழற்சி காற்றால் கிழக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது. இந்த காற்றும், நகரும் மணல் துகள்களும் மக்களுக்கு ஒவ்வொரு சமயத்திலும் ஏராளமான பிரச்சனைகளை உருவாக்குகின்றது. காலப்போக்கில் வயல்வெளிகள், கிராமங்கள் கூட அமிழ்ந்து போயுள்ளன.  இது போன்ற பூமியில் தான் இங்கு நாம் பார்க்கப்போகும் நாடார்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.
    இந்தியாவில் உள்ள மொத்த சாதிகள் உருவான கதைக்கு ஆயிரத்தெட்டு புராண இதிகாச சம்பவங்களைக் கூறினால் இந்த சாதி என்ற மூலக்கூறு இன்று வரைக்கும் வளர்ந்து கொண்டு இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.  பொருளாதாரம் மற்றும் அவரவர் செய்து கொண்டிருந்த தொழிலை அடிப்படையாக வைத்து தான் இந்த சாதி ஒவ்வொரு காலகட்டத்திலும் விடாப்பிடியாக நகர்ந்து கொண்டு வந்தது.  நாடார் என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் இதற்குள்ளும் ஏராளமான கிளைநதிகள் உண்டு.  குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டும் பார்க்கலாம்,
    சுருக்கு பட்டையர்
    பனைத் தொழிலை சார்ந்து வாழ்ந்தவர்கள். நாடார் சமூகத்தில் 80 சதவிகிதத்தினர் இந்த சுருக்கு பட்டையராகத் தான் இருக்கின்றனர்.
    மேல் நாட்டார்,
    தென் திருவாங்கூரிலும், நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலும் வசிக்கின்றனர். இந்த வகையினர் பெரும்பான்மையாக அம்பாசமுத்திர பகுதியிலும், சொல்லக்கூடிய வகையில் தென்காசி, சங்கரன்கோவில், ஸ்ரீவைகுண்டம்,,நாங்குநேரி போன்ற பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
    நட்டாத்தி
    நெல்லை மாவட்டத்தில் சாயர்புரத்திற்கருகில் நட்டாத்தி கிராமத்தைச் சுற்றிலும் இந்த நாடார்கள் அதிகமாக வசிக்கின்றனர். ஆனால் எண்ணிக்கையில் சொற்பமாகவே இருக்கின்றனர். வட்டிக்கு பணம் கொடுப்பது, மற்ற வாணிபம், விவசாயம் போன்றவை இவர்களின் தொழிலாகும். ஆனால் காலப்போக்கில் இந்த வகையில் உள்ளவர்கள் கிறிஸ்துவத்திற்கு மாறிவிட்டனர்.
    கொடிக்கால்
    வெற்றிலை பயிரிட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அம்பாசமுத்திரம், தென்காசி போன்ற இடங்களில் அதிகமாக வாழ்பவர்கள்.


    இவர்களின் தொடக்க வாழ்க்கை பாலைவனத்தில் வாழ்பவர்களை விட சற்று மேம்பபட்ட வாழ்க்கை என்பதாகத் தான் தொடங்கியது. இந்த வெப்ப பூமியில் வாழ்ந்து கொண்டு இந்த பனை மரங்களை நம்பியே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து இன்று சமூகத்தில் ஜெயித்தும் காட்டியுள்ளனர்.  தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் ஆட்சி புரிய தொடங்கிய போது வாழ்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு மன்னர்களும் தங்களின் குலப்பெருமையை மேம்படுத்திக் காட்ட ஒவ்வொருவிதமான புரூடா கதைகளை எடுத்துவிடத் தொடங்கினர். இதன் காரணமாகவே பலருடைய பரம்பரை புண்ணாக்கு கதைகள் இன்று வரைக்கும் நம் மனதில் ஊறிக் கொண்டிருக்கிறது.  இதைப்போலவே நாடர்களின் தொடக்க பாரம்பரிய கதைகளிலும் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்கள்.
    ஏழு தேவகன்னிகைகள் பூமியில் வந்து குளித்துக் கொண்டிருக்கும் போது இந்திரன் ஒளிந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.  இறுதியில் "எல்லாமே" சுபமங்களமாக முடிய ஏழு ஆண் குழந்தைகள் உருவானது.  இந்த குழந்தைகளை பூமியில் விட்டு விட்டு கன்னிகையர்கள் தேவலோகத்திற்கு சென்றுவிட பெண் தெய்வமான பத்ரகாளி இந்த குழந்தையை வளர்த்து வந்தாள். மதுரை நகரில் வைகைநதி பெருக்கெடுத்து ஓட பாண்டிய மன்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நாள் வந்து கூடையில் மண் சுமந்து வர வேண்டும் என்று உத்திரவிட ஏழு பயபுள்ளைங்களும் "நாங்கள் ஆளப் பிறந்தவர்கள்.  கூடை சுமக்கமாட்டோம்" என்று எதிர்த்து நின்றனர்.  மன்னர் கோபமடைந்து ஏழு பேர்களையும் தலைமட்டும் மண்ணுக்கு வெளியே தெரியும்படி புதைத்து யானையை விட்டு தலையை இடறச் செய்தார். யானை கால் கொண்டு எத்தித்தள்ள முதலாவரின் தலை உருண்ட போது விடாதும் கோஷம் போட்டுக் கொண்டே நகர்ந்தது. இரண்டாவது தலையும் அதே போல் பேச பேசியதைக் கண்ட மன்னன் மற்ற ஐந்து இளைஞர்களை விடுவித்து மரியாதை செய்தான்,


    இந்த ஐந்தில் தொடங்கியது தான் நாடார் இனம் என்று கதை திரைக்கதை வசனம் ஒன்று சரித்திரங்களில் இருக்கிறது. ஆனால் பெண்கள் ரவிக்கை போடக்கூடாது,  நாடார் இன மக்கள் ஆலயங்களில் நுழையக்கூடாது போன்ற பல கேவலங்களைத்தாண்டி இன்று இந்த சமூக மக்கள் வந்துள்ள உச்சம் மெச்சத்தகுந்ததே.
     

    விருதுநகர் நாடார் வரலாறு

    விருதுநகர் வரலாறு:

    விருதுநகர் என்றால் வணிகம் என்று பொருள் கொள்ளும் அளவிற்கு புகழ் பெற்றது.

    "Virudhunagar Produces Nothing But Controls Everything" என்று சிறப்புடன் கூறப்படுகிறது.
    “பொதியை எந்தி வண்டியிடிலே, பொள்ளாச்சி சந்தையிலே

    விருதுநகர் வியாபாரிக்குச் செல்லக்கண்ணு – நீயும்

    வித்துப் போட்டுப் பணத்தை யெண்ணு செல்லக்கண்ணு”

    என்று கவிஞர் மருதகாசி பாடியுள்ளார்.அரசியலில் காமராசரின் பங்கு மகத்தானது. விடுதலைப் போரிலும் பின் தமிழகத்தை உருவாக்குவதிலும் காமராசர் வழிகாட்டியாக இருந்தார். காமராசரின் அட்சி “பொற்காலம்” என்று கூறலாம்.

    இலவச ஆங்கில வழிக்கல்வி அனைவருக்கும் வேருபாடின்றி அளித்த முதல் பள்ளி 1889ஆம் ஆண்டு விருதுநகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீருடையை முதலில் விருதுநகர் பள்ளிகள் தான் கடைபிடித்தன.

    மகமை, மற்றும் உறவின்முறை மூலம் பள்ளிகள், கல்லூரிகள் இயக்குவதில் விருதுநகர் புகழ்பெற்றது என்று கூறலாம்.

    ஆன்மீகத்தில் ஆலயவழிபாடு மட்டும் அல்லாமல் பல சங்கங்கள் வைத்து வேதம், கீதை புராணங்கள், தேவாரம் என அனைத்தையும் மக்கள் படிக்கும் வண்ணம் செய்வதில் பெருமை வாய்ந்தவர்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பங்குகொள்வதைக் காணலாம்.
                                              
                     தமிழகத்தின் “பொற்காலம்” என்று கருதப்பட்ட முன்னால் முதலமைச்சர் காமராசரின் ஆட்சியை யாரும் மறக்க முடியாது. கருப்பு காந்தி, தென்னாட்டு காந்தி என்று போற்றப்படும் கர்ம வீரர் காமராசரை தந்தது விருதுநகர். இன்று விருதுநகர் என்றால் காமராசர் பிறந்த மண் என்று உலகெங்கும் விருதுநகரின் புகழ் பரவியுள்ளது. கல்வி, தொழில், நீர் நிலைகள், மின்சாரம் என்று தமிழகத்தின் அனைத்து துறையிலும் புரட்சி செய்த காமராசர் தன் குடும்பம், தன் மக்கள், தன் ஊர் என்று பாராத தன்னலமற்ற எளிமையான நாடு போற்றும் "KingMaker“ ஆவார்.

    விருதுநகரில் உள்ள நாடார் சமுகத்தினரை சாணான் என்று ஒதுக்கிவைக்கப்பட்ட காலம். பாண்டியர்களின் வீழ்ச்சியில் இருந்து நாடார்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர். அக்காலத்தில் நாடார்கள் “கோவிலுக்குள்” செல்ல அனுமதி இல்லை.

    ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயரின் முற்போக்கும்,சிந்தனையும், அப்போது அவர்களுடன் விருதுநகர் நாடார்களுக்கு ஏற்பட்ட வணிக வளர்ச்சியும் படித்த விருதுநகர் நாடார்களிடையே ஆங்கிலேயர் பால் ஈர்ப்பு இருந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சியால் நாம் வளர்ச்சி அடையலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. அப்போது ஆங்கிலேயர் ஆட்சி செய்த பிற நாடுகளில் வணிகம் செய்ய ஆரம்பித்தனர் விருதுநகர் மக்கள். இதனால் விருதுநகரில் ஆங்கிலேயரை ஆதரிக்கும், முற்போக்கு சிந்தனைகளையும் கொண்ட “JusticeParty” சக்தி வாய்ந்ததாக இருந்தது. “JusticeParty” யின் பங்கு விருதுநகர் அரசியலில் முக்கியமானது. “JusticeParty” யினைச் சேர்ந்தோர் விருதுநகர் மக்களின் வளர்ச்சிக்காகவும் நகர் வளர்ச்சிக்காகவும் பெரிதும் பாடுபட்டனர்.
    “JusticeParty” யின் தூண் போன்று இருந்த V.V.RamasamyNadar, M.S.P.SenthikumaraNadar மற்றும் M.S.PeriyasamyNadar, M.S.P.Rajah போன்றோரின் சேவை மகத்தானது.

    விருதுநகர் மக்களின் எதிர்ப்பை மீறி காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்தவர் காமராசர் வீட்டில் உள்ளவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் காந்திஜியின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.காமராசரின் முயற்சியால் விருதுநகரில் விடுதலைப்போராட்டங்கள் நடந்தது. “JusticeParty” யின் கோட்டையாக இருந்த விருதுநகர் காமராசரின், காங்கிரஸ் கீழ் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டது. விருதுநகரில் சில தீவிரவாத விடுதலைப் போராட்டமும் நடந்துள்ளது.

    பிரசுரங்களை வெளியிடுதல், சட்டமறுப்பு இயக்கம், கொடி போராட்டம்,சத்தியாகிரகப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் என்று பல விடுதலைப் போராட்டங்களில் கலந்து சிறை சென்றனர் விருதுநகர் மக்கள். K.Kamaraj, A.S.S.S.SankarapandiyaNadar, MurugaDhanuskodi, Gurusamy, MuthusamyAasan போன்றோர்கள் விடுதலை வேட்கையில் மக்களை வழி நடத்திச்சென்றனர். அந்தப் புனிதப் போரில் வெற்றியும் கண்டனர்.

    நாடார்கள் வரலாறு

    திராவிட இனத்தின் மிகப்பெரும் ஜாதியாக நாடார் சமுதாயம் விளங்கியது. ஆரியர்கள் படையெடுப்பால் திராவிடர்கள் பலவாறு பிரிய ஆரம்பித்தனர். நம் சமுதாய மக்கள் இயற்கையிலே உடல் வலிமை, கடும் உழைப்பிற்கு சொந்தக்காரர்களாக இருந்தனர். அதாவது உண்மையான சத்திரியகுலம் நாடார் குலம் தான்.
    பாண்டிய, சேர, சேழ மன்னர்கள் நாடார் குலத்தவர்கள் என்று வரலாறு கூறுகின்றது. அதற்கு சரியான ஆதாரமும், வலுவான கருத்துக்களும் நம்மிடம் உள்ளது. நாயக்க மன்னர்கள் படையெடுப்பால் நம் அரச குலம் சொல்லொன்னா துயரம் அடைந்தது. நம் சமுதாயம் சிதறி பெரும்பகுதி மக்கள் இலங்கைக்கு சென்றனர். இந்தியாவில் இருந்தவர்களும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் என பல்வேறு பகுதிகளில் மக்கள் வசிக்கமுடியாத தேரிப்பகுதிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் வசிக்கதொடங்கினர். நாடாண்டகுலம் நாடு பிடுங்கப்பட்டு காடு விரட்டப்பட்டு கடுந்துன்பம் அடைந்தது. நம் வரலாறுகள் பெரும்பகுதி அழிக்கப்பட்டன. இலங்கை மற்றும் நம் ஆட்சிக்கு அப்பார்பட்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகள் மூலமாகவே நாம் நம் பெருமைகளை அறிய முடிந்தது.
    கிமு 6ம் நூற்றாண்டு முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பாண்டிய, சேர, சேழ மன்னர்கள் தமிழகத்தை ஆண்டுவந்தனர். இந்த மூவருமே சகோதரர்கள் எனவும் பாண்டியன் மூத்தவன் எனவும் வரலாறு கூறுகின்றது. ஆரம்ப காலத்தில் கொற்கை தலைநகராக இருந்தது. பின் அது பாண்டிய நாட்டின் தலைநகராக மாறியது. பாண்டியனின் துறைமுகமும் கொற்கைதான்.
    1292 ல் மதுரை பாண்டியனின் தலைநகர் ஆனது. பழையகாயல் பாண்டியனின் துறைமுகம் ஆனது. கொற்கை பொலிவு இழந்தது. இந்த கொற்கை இன்று கடலில் இருந்து பலகிலோமீட்டர் தொலைவில் பனைமரக்காடாய் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் முகமதியர் பாண்டியமன்னனை வென்றனர். அதன் பின் மீண்டும் பாண்டியர் ஆட்சி ஏற்பட்டது. ஆனால் 16ம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்க மன்னர்களிடம் பாண்டிய அரசு தோற்றது. சேர, சோழ, பாண்டிய வரலாறுகள் அழிக்கப்பட்டன. அரசகுலம் நாடுவிரட்டப்பட்டனர்.
    இலங்கை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்ட்ரா போன்ற இடங்களில் நாடார் சமுதாயம் காணப்படுகின்றது. மேற்படி இடங்களில் சில இடங்களில் சில பெயர் மாறுதலுடன் நாடார்கள் வாழ்கின்றார்கள். ராவணனின் தலைமை அமைச்சரும் பிரதான தளபதியுமான மகோத்திரா நாடார் என்பதும் சீதையை ராவணன் கடத்திய ஆடி மாதம் முதல் தேதியை விழாவாக நாடார்கள் கொண்டாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    அரச உரிமை மறுக்கப்பட்ட நாடார் சமுதாயத்தில் பெரும்பான்மை நாடார் சமுதாயம் பனையேறும் தொழில் செய்து வந்தனர். அவர்கள் பிற சாதி மக்களுடன் இருந்து ஒதுங்கி வாழ்ந்தனர். அவர்கள் பிறப்பு முதல் திருமணம், இறப்பு வரை அவர்களுக்கு ஷஷஅம்பட்டையர்கள்ஷஷ எனப்படும் நாவிதர்கள் தான் அனைத்து சடங்குகளையும் செய்தனர். நாடார்களுக்கு என உள்ள நாவிதர்கள் வேறு உயர்ந்த சமூகத்திற்கோ அல்லது தாழ்ந்த சமூகத்திற்கோ செல்ல மாட்டார்கள். நாடார்களுக்கு என கோவில்களில் பூஜை செய்ய பிராமண வகுப்பில் ஒரு பிரிவானவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இவர்கள் குருக்கள் என அழைக்கப்பட்டனர்.
    தெந்தமிழகத்தில் உள்ள நாடார்களின் பூர்வீக குல தெய்வங்களின் கோவில்கள் ஷஷமானாடு தண்டுபத்துஷஷ எனப்படும் திருச்செந்தூர் அடுத்து உள்ள தேரிப்பகுதியை சுற்றியே அமைந்துள்ளது. ராமநாதபுரத்தின் வடபகுதியிலும் குல கோவில்கள் உள்ளன
    நன்றி ...

    Nadar singam

    .

9 கருத்துகள்:

  1. வில்லவர் மற்றும் பாணர்

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும்.

    இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும்.

    பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர்.
    அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.

    பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.


    வில்லவர் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்


    பாணா மற்றும் மீனா

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்குஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.

    மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களுக்கும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில்தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    பதிலளிநீக்கு
  2. வில்லவர் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.


    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர்
    2. குகன்குலத்தோர்
    3. கவுரவகுலத்தோர்
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    பதிலளிநீக்கு
  3. துளு படையெடுப்பு

    கி.பி 1120 இல் சேர நாடு பாணப்பெருமாள்(பானு விக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு இளவரசர் படையெடுப்பாளரால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த துளு மன்னர் கவி அலுபேந்திராவின் (கி.பி 1110 முதல் கி.பி 1160 வரை) சகோதரர் பாணப்பெருமாள் ஆவார். 350000 எண்ணிக்கையிலான நாயர்களின் வலுவான படையுடன் பாணப்பெருமாள் கேரளா மீது படையெடுத்தார். இது கடலோர கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு துளு-நேபாள நாயர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தது ஆகும்.

    நாயர்கள் அஹிச்சத்திரத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆவர். நம்பூதிரிகள் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்திரத்திலிருந்து வந்த பிராமணர்கள் ஆவர். கடம்ப மன்னர் மயூரா வர்மா 345 கி.பி யில் அஹிச்சத்திரத்தில் இருந்து ஆரியர்களையும் நாகர்களையும் கொண்டு வந்தார்.

    பாணப்பெருமாளுக்கு அரபு ஆதரவு

    துளு இளவரசர் பாணப்பெருமாள் அரபு ராணுவத்தின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் பாணப்பெருமாள் தனது தலைநகரை நிறுவினார். வில்லவர் சேர வம்சம் கொடுங்கல்லூரிலிருந்து கொல்லத்திற்கு மாறியது. பின்னர் பாணப்பெருமாள் கொடுங்கலூரை ஆக்கிரமித்து, அங்கிருந்து 36 ஆண்டுகள் 1120 கி.பி முதல் 1156 கிபி வரை ஆட்சி புரிந்தார். பின்னர் பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்தைத்தழுவி அரேபியாவுக்குச் சென்றார். அவரது மகன் உதயவர்மன் கோலத்திரி 1156 ஆம் ஆண்டில் கோலத்திரி வம்சத்தை நிறுவினார்.

    மஹோதயபுரம் சேரரின் தலைநகர் மாற்றம்

    கி.பி 1075 முதல் அலுபா இராச்சியத்தின் துளு படையினரால் கேரளா தாக்கப்பட்டது, கடைசி கொடுங்கலூர் தமிழ் சேர மன்னர ராமவர்மா குலசேகரப்பெருமாள் தமது தலைநகரத்தை கொல்லத்திற்கு மாற்றுமாறு கட்டாயப்படுத்தியது. ராமவர்மா சேரா-ஆய் வம்சத்தின் ராஜாவாக ராமர் திருவடியாக மாறினார். கடைசி வில்லவர் சேர ராமவர்மா தனது ராஜ்யத்தை ஒருபோதும் பிரிக்கவில்லை. கொல்லத்தின் பனங்காவில் கொட்டாரத்தில் இறக்கும் வரை அவர் இந்துவாகவே இருந்தார். இது பிற்கால சேர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. வில்லவர் குலங்கள் கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு குடிபெயர்ந்தன.

    கி.பி 1310 இல் பாண்டியன் இராச்சியத்துடன் மாலிக் காஃபூரின் போர்

    இவ்வாறு வடக்கு கேரளா துளு-நேபாள மக்களால் ஆளப்பட்டது.
    இரண்டு பாண்டிய இளவரசர்களுக்கிடையில் நடந்த போரில் டெல்லி சுல்தானேட் தலையிட அழைக்கப்பட்டார். 2 லட்சம் வலுவான டெல்ஹி இராணுவத்தின் தளபதி மாலிக் கஃபூர், 50000 போர்வீரரகளை மட்டுமே கொண்டிருந்த பாண்டிய நாட்டை ஆக்கிரமித்தார். பாண்டிய இராணுவம் தோற்கடிக்கப்பட்டது மற்றும் மதுரை துருக்கி இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. தோல்விக்குப் பிறகும் வில்லவர்கள் டெல்ஹி படைகளால் வேட்டையாடப்பட்டனர்.

    கிபி 1310ல் டெல்லி சுல்தானால் பாண்டியன் வம்சம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அனைத்து கேரளமும் துளு-நேபாள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. துளு வம்சத்திற்கு அரேபியர்களின் மற்றும் டெல்ஹி சுல்தானேட்.டின் ஆதரவு இருந்தது.

    துளு சாமந்தா ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட கேரளா

    கி.பி 1335 இல் மதுரை சுல்தானேட் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா மற்றும் நம்பூதிரிகளுக்கு வழங்கப்பட்டது.

    கிபி 1335 ல் நான்கு மருமக்கள்வழி ராஜ்யங்கள் உருவாக்கப்பட்டன.
    அவை

    1. கண்ணூரின் கோலத்திரி வம்சம்
    2. கோழிக்கோடு சாமூதிரி வம்சம்
    3. கொச்சியின் பெரும்படப்பு ஸ்வரூபம்
    4. வேணாட்டின் ஆற்றிங்கல் ஸ்வரூபம்

    கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு தமிழ் வில்லவர் இடம்பெயர்வு

    தமிழ் வில்லவர்கள் மேலும் கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு குடிபெயர்ந்தனர். கேரளாவின் வில்லவர்கள் கோட்டையடி மற்றும் சேரன்மாதேவியில் கோட்டைகளை கட்டினர். சோழர்கள் களக்காட்டில் கோட்டையை கட்டினர். பாண்டியர்கள் கல்லிடைகுறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் கோட்டைகளை கட்டினர். வில்லவர் குலங்களின் இந்த கோட்டைகள் 1600 வரை இருந்தன.

    வேளாளர் நாயருடன் சேர்ந்தனர்

    கி.பி 1335 இல் துளு ஆட்சி நிறுவப்பட்டபோது
    வேளாளர் மருமக்கத்தாயம் மற்றும் பெண்வழி வாரிசுரிமை என்னும் நாயர் பழக்கவழக்கங்களை ஏற்றுகொண்டனர். பல கணவருடைமை சம்பந்தம் என்னும் சம்பிரதாயங்ஙளையும் கடைப்பிடித்து வந்தனர்.
    நாயர் தாய்மார்களின் குடும்பப் பெயர்களைப் பயன்படுத்துவதால், இப்போது பல நாயர்களில் வெள்ளாளரின் பிள்ளை குடும்பப்பெயர் உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. துளு படையெடுப்பு

    துளு பிராமணர்
    துளு பிராமணர்கள் கி.பி 1335 க்குப் பிறகு தம்மை நம்பூதிரிகள் என்று அழைக்கத் தொடங்கினர்.

    துளு பிராமணரின் ஆதிக்கம்

    துளு பிராமணர்கள் கி.பி 1335 இல் நிலப்பிரபுக்களாக மாறினர். மேலும் 500 நம்பூரி சங்கேதங்கள் கேரளாவில் பயிரிடக்கூடிய பெரும்பாலான நிலங்களை கட்டுப்படுத்தின. பல நம்பூதிரி குடும்பங்கள் 5000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை வைத்திருந்தன.

    ஐரோப்பியர்கள் துளு-நேபாள இராச்சியங்களைப் பாதுகாத்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மிஷனரிகள் மலையாளத்தில் சுமார் மூவாயிரம் நேபாள வார்த்தைகளைச் சேர்த்தனர். நாடார்கள் அடக்கப்பட்டனர். அவர்களின் மொழியாகிய மலயாண்மை மொழி அழிக்கப்பட்டது. அவர்களின் பெண்கள் தோளுக்கு மேலே துணி அணிய அனுமதிக்கப்படவில்லை. உயர்குடி பெண்கள் மட்டுமே தோள் சீலை அணிய முடியும். நாடார் பெண்கள் 1600 வரை தோள் சீலை அணிந்திருந்தனர்.

    கேரள நாடார்கள் ஒரு நில பிரபு வர்க்க மக்கள். ஆனால் பத்து ஏக்கருக்கு மேல் நிலங்களை நாடார்கள் சொந்தமாக்க முடியாத வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. கிறிஸ்தவ மிஷனரிகள் கி.பி 1807 இல் நாடார்களுக்காக ஆங்கிலப் பள்ளியைத் தொடங்கினர். தெக்கன் களரி என்னும் போர்முறையில் பயிற்சி பெற்றவர்கள். நாடார்கள் இரட்டைக்குழல் கைத்துப்பாக்கிகளை பதிநேழாம் நூற்றாண்டிலும் பயன்படுத்தினர்.

    பிரிட்டிஷ் காரர்கள் திருவாங்கூரின் பாதுகாவலர்களாக
    மாறிய பின்னரே, திருவிதாங்கூர் மன்னர்களுக்கு திமிர்பிடித்தது.

    1696 ஆம் ஆண்டில் பேப்பூரிலிருந்து ஒரு குறுநில மன்னரின் இரண்டு மகன்கள் பிரிட்டிஷ் பாதுகாப்பின் கீழ் திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டனர்.

    அனந்த பத்மநாபன் நாடார் 1729 ஆம் ஆண்டில் மார்த்தாண்ட வர்மா என்ற ஒரு ராஜாவைக் காப்பாற்றினார். அனந்த பத்மநாபன் நாடார் சுமார் முப்பது குறுப்பு மற்றும் நாயர் வீரர்களை ஒற்றைக்கு கொன்றார். ஆனால் நன்றியற்ற மார்த்தாண்ட வர்மா ராமைய்யன் என்ற பிராமண மந்திரியின் ஆலோசனைப்படி அனந்தபத்மநாபன் நாடாரை விருந்துக்கு அழைத்து கொன்றார். மார்த்தாண்ட வர்மா நாடார்களை இராணுவ சேவையில் இருந்து நீக்கிவிட்டார். தர்மராஜா என்று அழைக்கப்படும் அடுத்த மன்னர் நாடார்களை ஊழியம் என்ற அடிமை வேலை செய்ய கட்டாயப்படுத்தினார்.

    நாயர்கள் துளு- நேபாள வம்சாவளியைக் கொண்டுள்ளனர் மற்றும் இன ரீதியாக தமிழர்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல. அவர்களின் நேபாள தோற்றம் காரணமாக நாயர்கள் ஒரு வெள்ளை - மஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளனர். மற்றும் நாயர்கள் சற்று மங்கோலிய முக அம்சங்களைக் கொண்டுள்ளனர்.

    துளு வம்சத்திற்கு டெல்ஹி படையெடுப்பாளர்களால் கேரளா வழங்கப்பட்டது

    பரசுராமனால்தான் கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டதாக நம்பூதிரிகள் கூறுகிறார்கள். அவர்கள் உண்மையில் துளு படையெடுப்பாளரான பாணப்பெருமாளுடன் கி.பி 1120 இல் கேரளாவுக்கு வந்தனர். அரேபிய ஆதரவோடு பாணப்பெருமாள் கேரளா மீது படையெடுத்தார்.

    பரசுராமனால் கேரளா தங்களுக்கு வழங்கப்பட்டதாக நம்பபூதிரிகள் கூறினர். ஆனால் கேரளாவை துளு-நேபாள மக்களுக்கு அதாவது சாமந்தா, நம்பூதிரி மற்றும் நாயர் ஆகியோருக்கு கி.பி 1311 இல் மாலிக் காபூர் வழங்கினார். பாண்டிய வம்சத்தின் கீழ் உள்ள தமிழ் படைகள் மாலிக் கஃபூரால் தோற்கடிக்கப்பட்டன. அரேபியர்கள் மற்றும் டெல்லி சுல்தானேட்டின் கூட்டாளிகளான நம்பூதிரிகள் மற்றும் சாமந்தர்களுக்கு கேரளா வழங்கப்பட்டது.


    கி.பி 1120 இல் கேரளா மீது படையெடுத்த போது அரேபியர்கள் பாணப்பெருமாளை ஆதரித்தனர். இதைத் தொடர்ந்து பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்தைத் தழுவி அரேபியா சென்றார். பாணப்ப்பெருமாளின் இராணுவம் படைமலை நாயர் (கிருஷ்ணன் முன்ஜாத்) தலைமையில் இருந்தது. படைமலை நாயர் மாலத்தீவுக்குச் சென்று, இஸ்லாம் மதத்தைத் தழுவி, ஹுசைன் குவாஜா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். பல நாயர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். பாணப்பெருமாளின் மருமகன் தர்மடத்தின் மன்னராக இருந்த மகாபலி. மஹாபலி இஸ்லாம் மதத்தைத் தழுவி சைஃபுதீன் முகமது அலி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். பாணப்பெருமாளின் மகன் உதயவர்மன் கோலத்திரி கோலத்திரி வம்சத்தின் முதல் மன்னர். வடக்கு கேரளாவில் ஒரு பெரிய குடியேற்றத்தை மேற்கொண்ட அரேபியர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். இவ்வாறு கி.பி 1120 இல் கடலோர கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் அரேபியர்களுடன் கூட்டணி வைத்து அதன் மூலம் வடக்கு கேரளாவை கைப்பற்றினார்.

    பதிலளிநீக்கு
  5. துளு படையெடுப்பு

    1156 முதல் 1314 வரை துளு மக்கள் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்கள் மீது ஆட்சி செய்தனர் . டெல்லி சுல்தானேட் இராணுவத் தலைவர் மாலிக் கபூர் பாண்டிய சாம்ராஜ்யத்தைத் தாக்கியபோது துளு கோலாத்திரி வம்சம் அவருக்கு ஆதரவளித்தது. பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு துளு வம்சமும் அதன் நாயர் வீரர்களும் நம்பூதிரிகளும் தெற்கே நகர்ந்து முழு கேரளத்தையும் ஆக்கிரமித்தனர். கி.பி 1335 இல் மதுரை சுல்தானகம் நிறுவப்பட்டபோது கேரளாவில் நான்கு துலு-நேபாளி ராஜ்யங்கள் நிறுவப்பட்டன.

    இதனால் கேரளா நேபாளத்தின் அஹிச்சத்திரத்தில் இருந்து குடியேறிய துளு சாமந்த க்ஷத்ரியர், நம்பூதிரிகள் மற்றும் நாயர்கள் ஆகியோரின் கைகளில் விழுந்தது. துளு-நேபாளி மக்கள் தங்களை சவர்ணர் என்று அழைத்தனர். கேரளாவின் பழங்குடி திராவிட மக்கள் அவர்ணர் என்று அழைக்கப்பட்டனர்.

    இதன் பின்னர் கேரளா கோயில்கள் அனைத்தும் துளு-நேப்பாள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன .. போர்த்துகீசியர்கள் வந்தபோது கொச்சி மன்னரும் அவரது நாயர் வீரர்களும் இடுப்பு துணிகளை, (கோவணம்) மட்டுமே அணிந்திருந்தனர்.

    ஆனால் ஐரோப்பியர்கள் துளு படையெடுப்பாளர்களை ஆதரிக்கத் தொடங்கினர். ஐரோப்பியர்கள் துளு-நேப்பாளி இராச்சியங்களை 450 ஆண்டுகளாக பாதுகாத்தனர். கேரளாவின் வில்லவர் மக்கள் பழங்காலத்தில் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளாக ஆட்சி செய்திருந்தனர். ஆனால் கி.பி 1310 க்குப் பிறகு வில்லவர் ஒடுக்கப்பட்டனர்.

    ஆனால் அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் வில்லவரின் எதிரிகளை ஆதரித்தனர். வில்லவர் தங்கள் நிலத்தையும் சுதந்திரத்தையும் இழந்தனர். ஐரோப்பிய அறிஞர்கள் வில்லவர்களுக்கு கேரளாவில் பூர்வீகம் இல்லை என்றும் ஸ்ரீலங்காவிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கருதினர். கி.பி 1120 முதல் 1947 வரை கேரளா வெளிநாட்டு காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. வில்லவர் மக்கள் அவர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.

    இன்று மலையாள மொழியின் பாதி நேபாள மொழியைக் கொண்டுள்ளது. அவர்கள் பயன்படுத்தும் "சமஸ்கிருதம்" உண்மையில் நேபாள மொழி என்பதை மலையாளிகள் ஒருபோதும் உணரவில்லை.

    இது 600 ஆண்டுகளாக கேரளாவை ஆண்ட துளு-நேபாள ஆட்சியின் விளைவாகும்.
    அரேபியர்களும், டெல்லி சுல்தானேட்டும் பலவீனமான துளு ஆட்சியாளர்களை ஆதரித்தனர். அதனால்தான் ஒரு போர் கூட இல்லாமல் அவர்களுக்கு கேரளா கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  6. இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்

    பண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி

    பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.

    திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
    1. தானவர் தைத்யர்
    2. பாண மீனா வம்சங்கள்.
    3. வில்லவர் - மீனவர் வம்சங்கள்

    தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.

    தானவர் மற்றும் தைத்யர்

    இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் - பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.

    சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)

    சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)

    விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.

    நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.

    ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.

    விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ​​ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.

    இந்த சாதனை காரணம், இந்திரன் "விரித்ரஹான்" அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.

    விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

    மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.

    சிந்து மன்னர் வாளா

    விரித்ராவின் சகோதரர் தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.

    ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாலாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.

    சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு

    சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.

    விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.

    பிராஹுய்

    பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. அசுர திராவிட துடக்கம்

    தைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி

    தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர். சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.

    நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.

    தானவா மல்யுத்த வீரர்கள்

    கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.

    புத்தமதத்தில் தானவர்

    புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.

    வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.

    மகாபலி வம்சம்

    வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.

    சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.

    மகாபாரத காலத்தில் பாணாசுரன்

    பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.

    ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
    வாணாதி ராயர், வன்னியர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.

    வாணர்

    பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
    விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.


    கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

    கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

    கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.

    பதிலளிநீக்கு
  8. அசுர திராவிட துடக்கம்

    பாண்பூர்

    வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

    மகாபலி

    மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.


    மீனா வம்சம்

    இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

    மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
    மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

    பாணா மீனா குலங்கள்

    வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

    கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

    பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

    பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

    வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

    திராவிட பாரம்பரியம்

    உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

    சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

    ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

    நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
  9. அசுர திராவிட துடக்கம்

    வில்லவர் மீனவர்

    தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

    வில்லவர் குலங்களின் இணைப்பு

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

    பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

    பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

    காலவரிசை

    1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
    2. முதல் பிரளயம் (கிமு 5550)
    3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
    5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)


    பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

    பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

    வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

    கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

    தெற்கே வில்லவர் குடியேற்றம்
    கேரளா
    1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
    2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

    தமிழ்நாடு
    1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

    வட இந்தியாவில் வில்லவர்
    வில்லவர் குலங்கள்
    1. வில்லவர் = பில்
    2. மலையர்
    3. வானவர் = பாணா
    4. மீனவர் = மீனா

    வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
    மலையர் = மலெயா, மலயா
    வானவர் = பாணா, வானாதிராயர்
    மீனவர் = மீனா, மத்ஸ்யா
    நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
    நாடார் = நாடோர்
    பணிக்கர் = பணிக்கா
    சான்றார் = சான்றாரா, சான்தா
    பாண்டியன் = பாண்ட்யா
    மாவேலி = மகாபலி

    முடிவுரை

    வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.

    பதிலளிநீக்கு