செவ்வாய், 24 நவம்பர், 2015

காந்தியடிகள் பற்றி சிறு சிறு குறிப்புகள்

1. காந்தியின் முழுமையான பெயர் என்ன?
➯ மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி
2. காந்தியடிகளின் தந்தை பெயர் என்ன?
➯ கரம் சந்த் காந்தி
3. காந்தியடிகளின் தாயார் பெயர் என்ன? 
➯ புத்திலிபாய்
4. காந்தியடிகள் எப்போது பிறந்தார்?
➯ 02-10-1869
5. காந்தியடிகளின் எத்தனையாவது பிறந்தநாளை 02-10-2015 அன்று நாம் கொண்டாடுகிறோம்?
➯ 146 வது பிறந்தநாள்
6. காந்தியடிகள் எங்கு பிறந்தார்?
➯ குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர்
7. காந்தியடிகளுக்கு உண்மையின் மீது பிடிப்பு ஏற்படுத்திய நாடகம் எது?
➯ அரிச்சந்திரன் நாடகம்
8. காந்தியடிகள் எங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்தார்?
➯ சமல்தாஸ் கல்லூரியில் மெட்ரிகுலேசன் முடித்தார்
9. காந்தியடிகள் எப்பொழுது திருமணம் செய்துகொண்டார்?
➯ மே 1883
10. காந்தியடிகளுக்கு திருமணம் நடந்தபோது அவருக்கு வயது என்ன?
➯ 13க்கும் 14க்கும் இடையில்
11. காந்தியடிகளின் துணைவியார் பெயர் என்ன?
➯ கஸ்தூரிபாய்
12. காந்தியடிகள் லண்டன் செல்லும் முன்பு தனது தாயாருக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்கள் என்னென்ன?
➯ மது, மாது, மாமிசம் தவிர்ப்பேன்
13. காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்கு எந்த ஆண்டு சென்றார்?
➯ 1888
14. காந்தியடிகள் தன்னுடைய எத்தனையாவது வயதில் தென்னாப்பிரிக்கா சென்றார்?
➯ 24ம் வயதில்
15. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
➯ 21 ஆண்டுகள் (1893-1914)
16. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தகைய கொடுமைக்கு ஆளானார்?
➯ நிறவெறி கொடுமைக்கு
17. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எந்த இடத்தில் இரயிலில் பயணம் செய்யும் போது அவமதிக்கப்பட்டு இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார்?
➯ பீட்டா்மெரிட்ஸ்பர்க்
18. காந்தியடிகள் எப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்?
➯ 09-01-1915
19. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம்?
➯ வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (09-01-1915)
20. காந்தியடிகளின் இந்திய அரசியல் குரு யார்?
➯ கோபால கிருட்டின கோகலே
21. காந்தியடிகள் இந்திய விடுதலை போராட்டத்தில் எத்தகைய கொள்கையை பின்பற்றினார்?
➯ மிதவாதகொள்கை
22. காந்தியடிகள் எந்த விடுதலைப்போராட்ட கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்?
➯ இந்திய தேசிய காங்கிரஸ்
23. காந்தியடிகள் 1917ல் மேற்கொண்ட முதல் சத்தியாக்கிரக போராட்டத்தின் பெயர் என்ன?
➯ சாம்பரான் சத்தியாகிரகம் (பீகாரில் தொடங்கப்பட்டது)
24. காந்தியடிகளின் 1918ல் குஜராத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பெயர் என்ன?
➯ கேதா ஆர்ப்பாட்டம்
25. காந்தியடிகள் 1918ல் அகமதாபாத்தில் நடத்திய போராட்டம் எது?
➯ அகமதாபாத் மில் வேலை நிறுத்தப் போராட்டம்
26. காந்தியடிகள்1919ல் நடத்திய அகில இந்திய போராட்டம் எது?
➯ ரௌலட் சட்டத்திற்கு எதிரானது சத்தியாகிரகப் போராட்டம்
27. காந்தியடிகள் 1920ல் நடத்திய போராட்டம் எது?
➯ ஒத்துழையாமை இயக்கம்
28. காந்தியடிகள் 1930ல் நடத்திய போராட்டம் எது?
➯ சட்டமறுப்பு இயக்கம்
29. காந்தியடிகள் 1942ல் நடத்திய போராட்டம் எது?
➯ வெள்ளையனே வெளியேறு இயக்கம்
30. காந்தியடிகளுக்கு 1920ல் தென்னாப்பிரிக்காவில் வழங்கப்பட்ட கெய்சர் ஜ ஹிந்த் என்ற பட்டத்தை எந்த போராட்டத்தின் போது துறந்தார்?
➯ ஒத்துழையாமை இயக்கம்
31. காந்தியடிகள் 12 மார்ச் 1930ல் என்ன போராட்டத்தை மேற்கொண்டார்?
➯ உப்புசத்தியாகிரகம்
32. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் எங்கு தொடங்கப்பட்டது?
➯ அகமதாபாத்தில் தொடங்கி தண்டியில் முடிவடைந்தது
33. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் (தண்டி யாத்திரை) எவ்வளவு நாள் நடந்தது?
➯ 12-03-1930 முதல் 06-04-1930 வரை தூரம் 388 கிலோமீட்டர்
34. காந்தியடிகள் மேற்கொண்ட தண்டியாத்திரையை அவர் எவ்வாறு பயணம் செய்தார்?
➯ 388 கிலோ மீட்டரும் பாதயாத்திரையாக
35. காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு (1942) இயக்கத்தின் போது எவ்வாறு முழங்கினார்?
➯ செய் அல்லது செத்துமடி (do or die)
36. காந்தியடிகள் சுதந்திரத்திற்காக மட்டுமல்லாது வேறு எதற்காக போராடினார்?
➯ குழந்தைகள் திருமணம், திண்டாமை ஒழிப்பு, விதவைகளுக்கு எதிரான கொடுமைகள்
37. காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு அழைத்தார்?
➯ ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்)
38. காந்தியடிகள் நாதுராம் கோட்சே என்று சுட்டுக் கொன்றார்?
➯ 30-01-1948
39. காந்தியடிகள் இறந்ததினத்தை இந்தியாவில் எவ்வாறு கொண்டாடுகிறோம்?
➯ தியாகிகள் தினம்
40. காந்தியடிகள் இறந்த தினத்தை ஐ.நா.சபை எவ்வாறு அறிவித்துள்ளது?
➯ சர்வதேச அகிம்சை தினமாக (International day of Non–violence )
41. காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்?
➯ நவஜீவன்
42. காந்தியடிகள் தன் சுயசரிதையை எந்த மொழியில் எழுதினார்?
➯ குஜராத்தி மொழியில்
43. காந்தியடிகள் தன் சுயசரிதையை என்ன பெயரில் எழுதினார்?
➯ சத்தியசோதனை
44. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர் யார்?
➯ மன்மோகன் தேசாய்
45. காந்தியடிகளின் வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட பின்னர் அந்த நூலுக்கு வைக்கப்பட்ட பெயர் என்ன?
➯ My Experiments with Truth.
46. காந்தியடிகள் இந்தியாவில் நடத்திய ஆங்கில இதழ் எது?
➯ யங் இந்தியா
47. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்திய ஆங்கில இதழில் பெயர் என்ன?
➯ இந்தியன் ஒப்பீனியன்
48. காந்தியடிகளை முதன்முதலில் “ மகாத்மா ” என்று அழைத்தவர் யார்?
➯ இரவீந்திரநாத் தாகூர்
49. காந்தியடிகளை முதன்முதலில் “தேசப்பிதா ” என்று அழைத்தவர் யார்?
➯ நேதாஜி சுபாசு சந்திரபோஸ்
50. காந்திஜீ யை தமிழில் காந்தியடிகள் என்று எழுதும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் யார்?
➯ திரு.வி.க
51. காந்தியடிகள் தன் வாழ்நாளில் மொத்தம் எவ்வளவு நாட்கள் சிறையில் கழித்தார்?
➯ 2338 நாட்கள்
52. காந்தியடிகள் அதிக நாட்கள் இருந்த சிறை எது?
➯ எரவாடா சிறை (பூனா)
53. காந்தியடிகள் மரணமடைந்த போது அவருக்கு வயது என்ன?
➯ 78 வயது
54. தில்லி செங்கோட்டை அரியணையோடு மீண்டும் தொடர்பு படுத்தப்படும் பெயர்
➯ காந்தி
55. காந்திஜியின் மனைவி பெயர் என்ன?
➯ கஸ்தூரிபாய்
56. காந்திஜிக்கும் கஸ்தூரிபாவிற்கும் பிறந்த மகன்கள் யார் யார்?
➯ ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ்
57. எந்த அரியணைக் கனவோடும் வளர்க்கப்படாதவர்கள் யார்?
➯ காந்திஜியின் பிள்ளைகள்
58. தென் ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட காந்திஜியின் மகன் யார்?
➯ ஹரிலால்
59. தென் ஆப்பிரிக்காவில் கைகளில் விலங்குபூட்டி தெருக்களில் கைதியாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டவர் யார்?
➯ ஹரிலால்
60. தன் புதல்வர்களையும், தன் பேரப்பிள்ளைகளையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் யார்?
➯ காந்திஜி
61. 388 மைல்கள் நடந்த தண்டி யாத்திரையில் தன் பேரப்பிள்ளையான சிறுவனை (ஹரிலால் மகன்) நடக்க வைத்து அழைத்துச் சென்றவர்?
➯ காந்திஜி
62. தனது உண்ணாவிரதப் போராட்டத்தில் தன் குடும்பத்தை ஈடுபடுத்தியவர் யார்?
➯ காந்திஜி
63. தன் பிள்ளைகள் என்பதற்காக ஒரு சிறு பலன் கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற உறுதியாக இருந்தவர் யார்?
➯ காந்திஜி
64. லண்டனில் ஹரிலாலைப் படிக்க வைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் அவரை அனுப்ப மறுத்தவர்
➯ காந்திஜி
65. தான் சிறையில் இருந்தபோது சந்தையில் முள்ளங்கி வியாபாரம் செய்து ஆசிரமவாசிகளுக்கு உணவுதர வேண்டிய பொறுப்பை மகன் மணிலாலிடம் ஒப்படைத்தவர்
➯ காந்திஜி
66. மிகுந்த வறுமையில் வாடிய காந்திஜியின் மகன்
➯ ஹரிலால்
67. மணிலாலை தன்னுடைய மகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமலே ஒரு வருடத்துக்கு நீ உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு தன் மகனை அனுப்பியவர்
➯ காந்திஜி
68. சென்னையில் மூட்டைகள் தூக்கியும் நடைபாதையில் படுத்தும் உறங்கிய காந்திஜியின் மகன்
➯ மணிலால்
69. காந்திஜியைவிட அதிக ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டவர்
➯ மணிலால்
70. உப்பு சத்தியாக்கிரகத்தில் தலையில் எலும்புமுறிவு தாக்குதலுக்கு ஆளான காந்தியின் மகன்
➯ மணிலால்
71. மண்டை உடைக்கப்பட்டு மூளையில் காயத்துடன் சுயநினைவின்றி சிறைக் கைதியாக வாழ்நதவர்
➯ மணிலால்
72. 25 முறை மொத்தம் சுமார் 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்
➯ மணிலால்
73. தெருப்பிச்சைக்காரனாக இருந்த காந்தியின் மகன்
➯ ஹரிலால்
74. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதி வாழ்க்கை நடந்த இடம்
➯ சிறைச்சாலை
75. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதிச் சடங்குகள் நடந்த இடம்
➯ சிறைச் சாலை வளாகம்
76. 6 முறை - சுமார் 2 ஆண்டுகள் சிறைக் கைதியாக வாழ்ந்தவர்
➯ கஸ்தூரிபாய்
77. தமது 69வது வயதில் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் இருந்தவர்.
➯ கஸ்தூரிபாய்
78. இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு பியுன் வேலையைக் கூட தன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதை விரும்பாதவர்
➯ காந்திஜி
79. வன்முறை தவிர்த்து விடுதலைக்குப் போராடியவர்
➯ காந்திஜி
80. விடுதலைக்கான போராட்டத்தில் நீ சிறையில் மரணம் அடைந்தால் உன்னை தெய்வமாக வழிபடுவேன் என்று கஸ்தூரிபாயிடம் கூறியவர்
➯ காந்திஜி
81. காந்தியடிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எது?
➯ மது, மாமிசம் தவிர்த்தல் மற்றும் அகிம்சை வழியில் வாழ்தல்

சனி, 11 ஜூலை, 2015

கழகத்துக்காக ...5

எது சாதனை !
>>>>>>>>>>>>>>>>>>
யாராலும் செய்யமுடியாதது தான் சாதனை 
ஒருவன் செய்வதை பார்த்து செய்வது சாதனை அல்ல!
அது காப்பியடிப்பு அல்லது நேகாமல் நொங்கு திங்குற திருட்டுத்தணம் !
பிற அரசியல் கட்சிகளால் ,முடியாது , நடக்காது அது சாத்தியப்படாது, என்று நீராகரிக்கப்பட்ட ஒன்றை செய்வதுதான் சாதனை. .அப்படிப்பட்ட சாதனைதான் சென்னை மாகானத்துக்கு தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது பெருந்தலைவர் காமராஜர் எவ்வளவோ போராடிபார்த்தார் தமிழ் நாடு என்று பெயர் சூட்டமுடியவில்லை காமராஜர் ஆட்சியில் சங்கரலிங்கநாடார் என்பவர் தமிழ் நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று விருது நகரில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அதன் பிறகாவது தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முடிந்ததா /? முடியவில்லை முடியாது என்று நிராகரித்துவிட்டார் கர்ம வீரரால் முடியாது என்று சொல்லப்பட்டஒன்றை திராவிட முன்னேற்ற கழகம் பதவி ஏற்ற முதல் அறிவிப்பாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது இதுதான் சாதனை 
வடநாட்டவர்கள் நினைத்த போதெல்லாம் இந்தியை வலுக்கட்டாயமாக 
திணித்துகொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணித்து விடலாம் என்று கனவு கணடவர்கள் வாயில் அல்வாவை கொடுத்து 
தமிழ்நாட்டில் இரு மொழித்திட்டத்தை சட்டமாக்கியதுதான் மிகப்பெரியசாதனை 
சாதிவிட்டு சாதி மாறி திருமணம் செய்தால் அது சட்டப்படி செல்லாது என்று இருந்த காலத்தில் சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அரசானையை சட்டமாக தந்ததுதான் திராவிட முன்னேற்றகழகம் இதை செய்வதற்கு எந்தகட்சிக்காவது துணிவிருந்ததா ? ஆக யாருமே செய்யாத . செய்ய முடியாத செயலை செய்தது திராவிட முன்னேற்றகழகம் 
ஒரு அரசு எழை விவசாயிகளின் கடன் 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்யமுடியுமா ? அரசு திவாலாகி விடாதா ? கலைஞர் தானே சென்று குழிக்குள் விழுகிறார், அது முடியாது என்று எதிர் கட்சிகளும் 
அரசியல் விமர்ச்சகர்களும் வாதம் செய்தபோது 7ஆயிரம் கோடியையும் தள்ளுபடி செய்து அரசையும் திவாலாகாமல் பார்த்துகொண்டவர்தான் கலைஞர் இதுதான் சாதனை ! முடியுமா மற்ற கட்சிகளால் !!
சாதியை ஒழிக்க பெரிய தலைவர்கள் எல்லாம் போராடி முடியாதபோது 
அதன் வேற்றுமைகள் களையபடவேண்டும் அதற்கு அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் சகோதரபாசத்தோடு நடந்து கொள்வார்கள் அதன் முலம் சாதிகளை ஒழிக்கமுடியும் என்று தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்களை 
கொண்டுவந்ததுதான் மிகப்பெரிய சாதனை இத்திட்டம் கொண்டுவந்தபோது இத்திட்டத்தினால் சகோதரபாசம் பெருகாது மாறாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்வார்கள் என்று எதிர் கட்சிகள் விமர்ச்சனம் செய்தார்களே ! எந்த சமத்துவபுரத்திலாவது சண்டைநடந்ததா ? 
தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மிகப்பெரிய சாதனை அல்லாவா !
இப்படி நூற்றுககணகான சாதனை திட்டங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதனைகளா இருக்கிண்றன ! அவைகளை எல்லாம் நான் எழுதினால் உங்களுக்கு படிக்க நேரமிருக்காது ஏனென்றால் இந்த நாட்டுக்கு தேவையான அத்துனை திட்டங்களும் கலைஞரால் போட பட்டு விட்டன! 
இனி வரும் அரசுகள் அத்திட்டகளை புனரமைப்பு செய்ய முடியுமே தவிர புதிய திட்டங்கள் போட முடியாது உதாரணத்துக்கு ஒருரூபாய்கு அரிசி தந்தார் கலைஞர் ஜெயலலிதாவோ இலவசம்,ஆக தந்தார் கலைஞரின் திட்டத்தை வீம்புக்காக காப்பியடித்தர் ஒரு ருபாய் என்பது பெரிய பனம் அல்ல அவராலும் இலவசமாக கொடுத்திருக்கமுடியும் அவர் இலவசமாக இருபது கிலோ கொடுத்தால் ஜெயலலிதா 21 கிலோ கொடுப்பார் ஆக கலைஞரின் திட்டங்களை காப்பித்தான் அடிக்கமுடியும் இனிவரும் அரசுகள் 
ஏன் கலைஞர் வந்தாலோ அவர் போட்ட திட்டங்களைத்தான் செம்மை படுத்தமுடியும் காரணம் அத்துனை திட்டங்களும் போட்டாச்சு !!
ஆனால் நான்கு வருட சாதனையை விளக்க ஜெயலலிதா உத்தரவு போட்டுள்ளார் இவரின் சாதனை என்ன ? புதுமையாக என்ன செய்துள்ளார் ? 
யாரும் செய்யாததை செய்திருகிறாறா என்றால் கேள்வி குறிதான் மிஞ்சும் எண்று நினைக்காதீர்கள் யாரும் செய்யாதை பல ஜெயலலிதா செய்துள்ளார் 
ஒரு வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்துள்ளார் 
அரசியல் வாதி ஒருவர் 100கோடி அபதாரம் வாங்கி சாதனை செய்துள்ளார் 
நான் குற்றம் செய்துவிட்டேன் என்னை மன்னித்து என் உடல் நிலையை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை தருமாறு நிதிபதி அவர்களை கேட்கிறேன் என்று கெஞ்சியுள்ளார்
ஆக இதுதான் சாதனையே தவிர வேறு எதுவுமில்லை 
இவர் செய்ததை யாரும் இதுவரை செய்யவில்லை 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆக வாக்காள பெருமக்களே உங்களுக்காக சாததைனைகள் செய்து 
சரித்திரம் படைத்த திராவிடமுன்னேற்றகழகத்தை
மீண்டும் அரியனை 
ஏற்றி நீங்கள் வளம் பெற வேண்டும் ! 
......................................மும்பை ஆறுமுகப்பாண்டியன்

வெள்ளி, 10 ஜூலை, 2015

கழகத்துக்காக ....4

திராவிட முன்னேற்ற கழகம் என்னும் ஆலமரத்தின் 
ஆணிவேரை அசைத்துப்பார்த்தவர்கள் 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஈ வெ கி சம்பத்
பேரறிஞர் அண்ணாவையே 
கலங்க வைத்தவர்
கண்ணிர் விட வைத்தவர்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எம் .ஜி. ஆர்
கலைஞரை கலங்க வைத்தவர்
ஒரு கட்டத்தில் திராவிடமுன்னேற்றகழகத்தை
அழிக்காமல் விடமாட்டேன் என்று சபதம் செய்தவர்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வைகோ
கழகத்தாலே வளர்ந்து
கழகத்தையே அழிக்க நினைத்த பச்சை துரோகி !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இவர்கள் கழகத்தை வேரோடு வேரடி மன்னோடும்
வீழ்த்திவிடலாம் என்று கனவு கண்டு தோற்று போனவர்கள்
சிலர் சொல்வார்கள் எம்ஜிஆர் வெற்றி பெற்றாரே என்று
அவர் தனி கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்தாரே ஒழிய
திராவிட முன்னேற்ற கழகத்தை அழிக்கமுடிந்ததா ?
இந்த முப்பெரும் துரோகிகளாலே அழிக்க முடியாதபோது
நேற்று பெய்த மழையில் இன்று முழைத்த காளான்கள்
திராவிட முன்னேற்ற கழகத்தை அழிப்பேன் ஒழிப்பேன்
என்பது முடவன் கொம்புதேனுக்கு ஆசைப்பட்டகதைதான் !
தமிழ் உள்ள வரை !
தமிழன் உள்ளவரை !
தமிழகம் உள்ளவரை !
ஏன் ….உலக உயிரினம் உள்ளவரை
திராவிட முன்னேற்ற கழகத்தை எந்த கொம்பனாலும்
அழிக்கவோ அசைக்கவோ முடியாது !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
……………மும்பை ஆறுமுகப்பாண்டியன்



கழகத்துக்காக ....3

இளைஞர்களுக்கு கலைஞரின் வேண்டுகோள் 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இளைஞர்கள் மாணவர்கள்
எழுஞாயிறுகளாக ஒளிவிட
வரலாறு படியுங்கள்-
வரலாற்று நாயகர்களை வணங்குங்கள்-
வீரர்களை அறிந்து கொள்ளுங்கள்-
விவேகிகளைப் புரிந்து கொள்ளுங்கள்-
விஞ்ஞானிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்-
விஞ்ஞானப் புதுமைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்-
தியாகிகளைப் பாராட்டுங்கள்- நமது
திருநாட்டைப் பாதுகாத்திடுங்கள்!
வாழ்க்கைப் பயணத்தைப் பகுத்தறிவு
வழியில் மேற்கொள்ளுங்கள்!
உழைத்து உயர்ந்தவர்களைப் புத்தகமாகப் படியுங்கள்!
முயற்சியினால் முன்னேறியவர்களை வழிகாட்டிகளாக ஏற்றிடுங்கள்.

கழகத்துக்காக ....2

இளைஞர் சமுதாயமே ! 
கலைஞரைப்பற்றி தெரிந்துகொள் !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கலியுக இயேசு பிரான் எங்கள் கலைஞர் 
……………….( மண்ணிப்பதில் )……………………………..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இந்த அடைமொழி சரிதானா ? 
பகுத்தறிவு பாதையில் செல்லும் ஒரு தலைவருக்கு கலியுக இயேசு பிரான்
என்ற அடை மொழியைத்தருவதா ? அது ஏற்புடையதல்லவே !
இந்த அடைமொழியை நான் உச்சரிக்க காரணத்தை கிழே பதிவு செய்துள்ளேன் இந்த அடைமொழியை என் தலைவர் கலைஞர் விரும்பமாட்டார் என்பதும் உண்மை 
வரலாற்றை திரும்பிப்பார்க்கிறேன் சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன கவியரசு கண்ணதாசனை உங்களுக்கு தெரியும் 
கலைஞரை என் காதலி என்று வர்ணித்தவர் பிற்காலத்தில் தனக்கு அரசியலில் இடமில்லாமல் போகவே , கலைஞரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சணம் செய்து வயிறு வளர்த்தவர் அதாவது கலைஞரை கீழ்தரமாக 
எழுதி அதன்முலம் வரும் பணத்தில் வாழ்ந்தவர் இதே கண்ணதாசன் அண்ணாவையும் விட்டு வைக்கவில்லை பணத்துக்காக தன் ரகசியத்தையும் விற்றவர்தான் இந்த கண்ணதாசன் .. ஆக ஏட்டில் கலைஞரை தரக்குறைவாக எழுதியதால் இன்று அந்த எடுகளை படிப்பவர்கள் கலைஞர் இவ்வளவு மோசமானவரா என்று சிந்திக்க வேண்டியது வரும், எனென்றால் ஏட்டில் எழுதியதை அழிக்கமுடியாது அப்படி அழிக்கமுடியாத கறையை எற்படுத்திய கண்ணதசனை பிற்காலத்தில் பழிதீர்த்தாரா என்றால் இல்லையென்றே வரலாறு சொல்கிறது காலை வாரி விட்டன்னையே வாரிஅனைத்து 
உச்சிமுகந்து பதவி கொடுத்து அழகு பார்த்தவர்தானே கலைஞர் 
அது மட்டுமல்ல எத்தனைமுறை தோல்வியதந்தாலும் 
தமிழினமே தமிழினமே என்ன கடலிலே தூக்கி போட்டாலும் 
உனக்காக மரக்கலணாக மிதப்பேன் என்று சொன்னவர்தானே கலைஞர்
கண்ணதாசன் இறந்தபோது அவருக்காக கண்ணிர் விட்டு 
எழுதிய கவிதையை படித்து பாருங்கள் கலைஞரின் அருமை தெரியும் 
எண்ணம் தானே எழுத்து 
உள்ளத்தில் இருப்பதுதானே பேச்சாக வெளியில் வரும்
வரலாற்றில் மறைக்கமுடியாத கறையை ஏற்படுத்திய 
கண்ணதாசனுக்கு வரலாறு மறக்க முடியாத 
கலஞர் எழுதிய கவிதாஞ்சலியை படித்து பாருங்கள் 
என் இனிய நண்பா
இளவேனிற் கவிதைகளால்
இதய சுகம் தந்தவனே! உன்
இதயத்துடிப்பை ஏன் நிறுத்திக் கொண்டாய்!
தென்றலாக வீசியவன் நீ - என்நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ! அப்போதும்
அன்றிலாக நம் நட்பு நிகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதே இல்லை; நண்பா!
கண்ணதாசா! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ - உன்னைக்
காலமெனும் பூகம்பம் தகர்த்துத்
தரைமட்டம் ஆக்கிவிட்டதே!
கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ!
கல்லறைப் பெண்ணின் மடியிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ
அமைதிப்பால் அருந்தித் தூங்கி விட!
இயக்க இசைபாடிக்களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முன்னை
தாக்குதல் கணை எத்தனைதான் நீ
தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என்நெஞ்சே உன் அன்னை!
திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால் - சுவைப்பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;
தித்திக்கும் கவித்தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்றாய் ?
அடடா! இந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!
ஆயிரங்காலத்துப் பயிர் நம் தோழமையென ஆயிரங்கோடி கனவு கண்டோம்!
அறுவடைக்கு யாரோ வந்தார்!
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்
நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்
நிலைபெற்ற புகழ் உனக்கு!
இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால்
இனியதமிழ் அன்னை துணை நின்றாள்!
என் நண்பா!
இனிய தோழா!
எத்தனையோ தாலாட்டுப்பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத்தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?
எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இளைஞர் சமுதாயமே ! ஒரே நேரத்தில் பல பேர்களைப்பற்றி
எழுதினால் நீ படிக்கமாட்டாய் என்பது எனக்கு தெரியும் ! ஆகவே அடுத்த பதிவில் பார்ப்போம் !
மும்பை ஆறுமுகப்பாண்டியன்


புதன், 8 ஜூலை, 2015

கழகத்துக்காக

இந்த பதிவை உங்களால் படிக்க முடியுமா?
படித்தால் மட்டும் லைக் செய்யவும்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 
நடு நிலை வாக்காளரும் நானும் !
>>>>>>>>>>>>>>>> 
ஒரு வாக்காளரிடம் யாருக்கு ஒட்டு போடுவிங்கன்னு கேட்டேன்
 அவர் சொன்னார்  அதை இன்னும் முடிவு பன்னவில்லை என்றார்
ஏன் பண்ணவில்லை .. அது வந்து இழுத்தார்
 உங்கள் வீட்டில் இரண்டுலட்சம் ரூபாய் விவசாய கடன் இருந்ததே  கட்டி முடிச்சிங்களா ?நான் கேட்டேன்
நான் எங்க கட்டினேன்  கலைஞர் தான்  தள்ளுபடி செய்து எங்க மானத்தை காப்பாதினார்
 அப்ப அவருக்கு ஒட்டு போடலாமே !
போடலாம் ஆனாலும் ……… இழுத்தார்
சரி அதை விடுங்க  உங்க வீட்டில் டிவி இல்லாம இருந்ததே டிவி வாங்கியாச்சா ? அப்பாவியாக நான் கேட்டேன்
நான் எங்க வாங்கிறது கலைஞர்தான் இலவச டிவியும் தந்தாரு
எனக்கு ஒன்னு எங்க அம்மாவுக்கு ஒன்னு என் தம்பிக்கு ஒன்னு  மொத்தம் எங்க குடும்பத்தில் ஒன்பது   இலவச டிவி வாங்கீருக்கோம் கலைஞர் புன்னியத்தில்  வெகுளியாக பதில் சொன்னார்
அப்படியின்னா இலவச டிவி தந்த கலைஞருக்கு ஒட்டு போடலாமே  நானும் வெகுளியாகக்கேட்டேன்
போடலாம் ………………………………ஆனாலும் மீண்டும் இழுத்தார்
சரி விடுங்க உங்க விட்டில் அடுப்பங்கரையில்  விறகையே கானோம்
நான் கேட்டேன்
அய்யோ உங்களுக்கு தெரியாதா ? கலைஞர் எங்களுக்கு இலவசமாக கேஸ் அடுப்பு
 தந்திருக்காரே , நாங்க ஏன் விறகு  அடுப்பை தேடனும்
அவர் சிரித்து சொன்னார்
 நான் வெறுத்துக்கேட்டேன்  அப்படின்னா  கலைஞருக்கு ஒட்டுபோடலாமே !
 போடலாம்  ஆனாலும் இன்னும் இழுத்தார் அவர்
சரி உங்க மகள் கல்யாணத்தை முடிக்க சிரமப்பட்டிங்களே எப்படி நடந்தது
நான் தெரியாதது மாதிரி கேட்டேன்
ஓ அதுவா  கலைஞரின் முவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் திருமண உதவி திட்டத்தின் முலம் 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது அதை வைத்து சமாளித்தேன்
பெருமை பட்டுக்கொண்டார்
 அப்படியின்னா அதுக்காகவாது கலைஞருக்கு ஒட்டு போடலாமே  ஏக்கத்தோடு நான் கேட்டேன்
போடலாம் ஆனாலும்  மேலும் இழுத்தார்
 உங்களுக்கு பேத்தி பிறந்திருக்குதாமே மகிழ்சியாக நான் கேட்டேன்
 ஆமா ஆமா மாகாலட்சுமி மாதிரி பெண் பிள்ளை பிறந்திருக்கு
கலைஞரின் மகபேறு உதவி திட்டதினால் ஒரு பைசா செலவில்லாமல்
தாயும் சேயும் நலம் துள்ளி குதித்தார்
அதே மகிழ்ச்சியில் நான் கேட்டேன் அப்படியின்னா கலைஞருக்கு ஒட்டு போடலாமே
மீண்டும் அதே பல்லவி போடலாம் … ஆனாலும்
விடுங்க சார்! உங்களுக்கும் உங்க் தம்பிக்கும்  வயதான அம்மாவுக்கு யார் சோறு போடனுமின்னு சண்டை வந்ததே  முடிஞ்சிருச்சா  நான் கேட்டேன் !
அதைஏன் கேட்கிறீங்க கலைஞரின் முதியோர் ஒய்வுதிய திட்டத்தின் முலம்  அந்த சண்டைமுடிந்தது  இப்ப எங்க அம்மா சந்தோசமாக இருக்காங்க கலைஞர் கொடுத்த பணத்தில் சாப்பிடுறாங்க இப்ப் எங்களுக்கு எங்க அம்மா தொந்தரவு இல்லை  நிம்மதி பெருமுச்சு விட்டார்
 இந்த சமயத்திலாவது ஒட்டுகேட்கலாமே என்று இனி கலைஞருக்குத்தானே ஒட்டு போடுவிங்க
போடலாம் ஆனாலும் மேலும் இழுத்தார்
 எரிச்சலுடன் எனங்க பிறப்புமுதல் இறப்பு வரை கலைஞர் திட்டத்தால் வாழ்தேன்னு சொல்லுறீங்க  இன்னும் கலைஞர் திட்டம் எதுவெல்லாம் கிடைத்திருக்குது கேட்டேன்
 பெருமையாக சொன்னார் அவர்
என் குழந்தைகள் பள்ளி கூடம் செல்ல இலவச சைக்கிள்
பஸ்ஸில் சென்றால் இலவச பஸ் பாஸ்
பட்டதாரி இல்லாத குடும்பத்தில் இருந்து படிக்கும் குழந்தக்கு  அது படிக்கும் வரை இலவச கல்வி
 ஒரு ரூபாய்கு அரிசி தந்தாரு
ஏன் கலைஞரின் காங்கீரிட் வீடு திட்டத்தில் எனக்கு வீடு கூட கிடைத்திருக்குதே பெருமையாக சொன்னார்
இதுதான் சமயம் என்று அப்படின்னா  கலைஞருக்கு ஒட்டு போடலாமே !
நான் கேட்க
 அவர் தலையை சொறிந்து விட்டு போடலாம் ஆனாலும் என்றாரே!
நான் கோவத்தோடு இத்தனையும் அனுபவித்துவிட்டு ஆனாலு ஆனாலு என்று இழுக்கிறீங்களே அது என்ன ஆனாலும்  நான் சீறினேன்
அது ஒன்னுமில்லைங்க  ஒட்டு போடுற நேரத்தில் ஒரு ஒட்டுக்கு  அயிரம் இரண்டாயிரமின்னு தாராங்க  ! பணம் தரும்போது வாங்கத்தானே வேண்டியதிருக்கு  ! கைநீட்டி பனம் வாங்கின பிறகு  நம்பிக்கை துரோகம் செய்யகூடாதல்லவா 1 அதுதான் யோசிக்க வேண்டியதிருக்கு என்றார் அவர்
 ஒரு நாள் கிடைக்கிற ஆயிரத்துக்கும் இரண்டாயிரத்துக்கும் நம்பிக்கையைப்பற்றி பேசுறியே பிறப்பு முதல் இறப்பு வரை கலைஞரின் திட்டத்தால் வாழ்ந்து வரும் நீ நம்பிக்கைப்பற்றி பேசுறீயே உனக்கெல்லாம் வெட்கமாக இல்லை ! நீயெல்லம் மனுசனா? நன்றிகெட்டவனேன்னு  இனிய இரவு வணக்கம் 
கேட்ககனுமின்னு நினைச்சேன் ஆனால் கலைஞரின்
மறப்பது மக்களின் இயல்பு !
நினைவுபடுத்துவது கழக தொண்டனின் கடமை !
என்ற பொன்மொழி நினைவுக்கு வந்ததால்
பொதுஜனத்தை குற்றம் சொல்லாமல்
 கலைஞரின் இன்னும் பல அரிய திட்டங்களை எடுத்துசொல்லி
 வரும் தேர்தலிலாவது  குழப்பமில்லாமல் கலைஞருக்கு  ஒட்டு போடுங்கள் என்று பணிவுடன் ஒட்டுகேட்டு  பெருமுச்சு விட்டேன் !!

......................மும்பை ஆறுமுகப்பாண்டியன் 

நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள்

















காமராஜர்

படித்தேன் ...கண்களில் கண்ணிர் பெருகியது 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்.. கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுரை அருகே.. காரில் சென்று கொண்டிருந்தார்கள்..!!
உரையாடலின் நடுவே.. நினைவு வந்தவரான. நேரு. " மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே..? என்று கேட்கிறார்..!!
"ஆமாங்க இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்கிறது..!!என்கிறார் காமராஜர்..!!
"அப்படியானால் உங்கள் தாயாரை பார்த்து விட்டு.. நலம் விசாரித்து விட்டு செல்ல வேண்டும் அல்லவா..? என்று நேரு அவர்கள் கேட்க..
"இப்பவே கூட்டத்திற்கு நேரம் ஆகி விட்டதே..?" என்று காமராஜர் மறுக்கிறார்..!!
அதற்கு நேரு அவர்கள்...
"இவ்வளவு தூரம் வந்து விட்டு.. உங்கள் தாயாரை பார்க்காமல் சென்றால்.. நன்றாக இருக்காது.. நான் பார்த்தே ஆக வேண்டும்.. என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்..!!" என்று அன்பு கட்டளையிடுகிறார்
ஆமோதித்த காமராஜர்..
வண்டி சற்று தூரம் சென்றதும்.. ஓட்டுனரிடம்.." தம்பி வண்டியை இப்படி ஓரங்கட்டு..!!" என்று வண்டியை நிறுத்த சொல்கிறார்..!!
அது வீடுகளே இல்லாத பகுதி.. இரு புறங்களிலும் விவசாய நிலங்கள் பகுதி..!!
அந்த நிலங்களில் பெண்கள் களை பறித்து கொண்டிருந்தனர்..!!
தாயாரை பார்க்க வீட்டுக்கு அழைத்து.. செல்ல சொன்னால் இப்படி அத்துவான வெயிலில்.. வண்டியை நிறுத்தியிருக்கிறாரே..! என்ற வினாவுடன் வண்டியை விட்டு இறங்குகிறார் நேரு..
காமராஜர்
களை பறித்து கொண்டிருக்கும் பெண்கள்.. கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி.. ஒருவரை அழைக்கிறார்...
"ஆத்தா நான் காமராசு வந்து இருக்கிறேன்.."!! என்று கூவுகிறார்..!!
வயலில் உழைத்து வியர்வை முகத்துடன்.. "காமராசு வந்திட்டியாப்பா.. நல்லாயிருக்கியா..?" என்று தன் மகனை கண்ட மகிழ்ச்சியில்.. உள்ளம் நெகிழ.. அருகில் வருகிறார்.. காமராஜரின் தாயார்..!!
தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள்..!!
பிறகு நேரு அவர்களை காட்டி.. அறிமுக படுத்துகிறார் காமராஜர்..!!
நேருவால்
தன் முன்னால் நடப்பதை பார்த்து.. நம்ப முடியாமல் சிலையாக நிற்கிறார்..!!
அவர் தான் நம் காமராஜர்..!

திராவிட முன்னேற்ற கழகம்



இளைஞர் சமுதாயமே!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கழக வரலாற்றை ஒரு முறை படி !
உலக வரலாற்றில் தமிழுக்காக ,கழகம்
ஆற்றிய தொண்டினை படி !
எந்த கட்சியாவது
தமிழ் வளரவேண்டும்
தமிழன் வாழவேண்டும்
தமிழ்நாடு முன்னேறவேண்டும்
என்றுசொன்னதுன்டா வரலாற்றை
மீண்டும் படி !
தமிழுக்காக கழகம் சிந்திய ரத்தத்தை படி !
தமிழனுக்காக கழகம் வாங்கிய அடியை படி !
திராவிடமுன்னேற்ற கழக தலைவர்களின்
தோல்வியை படி!
கழகத்துக்கு ஆரியர்கள் கொடுத்த நெருக்கடியை படி!
கலைஞர் பட்ட அவமானத்தை படி!
தமிழை செம்மொழி ஆக்கி தந்த
என் தலைவர் கலைஞரை படி!
தளதியின் தன்னிகரில்லா உழைப்பைப்படி !
கலைஞர் தமிழகத்துக்கு
தந்த அரும் பெரும் திட்டங்களை
சாதனைகளை திரும்ப திரும்ப படி !
படித்தாயா இளைஞனே !
படி படி மீண்டும் ஒருமுறை
எம் கழகத்தை படி
இப்போழுது; கழகத்துக்கு களங்கம்
கற்பிக்கும் கயவர்கள்
யாரென உனக்கு தெரியும் !
கழகத்துக்கு எதிராக
ஊழையிடும் நரிகளை உனக்கு தெரியும்!
கழகத்துக்கு துரோகம் செய்த தூரோகிகளை தெரியும் !
கழக ஆட்சிக்கு வரக்கூடாது என்று
வரிந்துகெட்டும் வக்கிர கும்பலை உனக்கு தெரியும் !
மும்பை ..க.ஆறுமுகப்பாண்டியன்..................


திராவிட முன்னேற்ற கழகத்தில் ஏன் சேர வேண்டும் !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இளைஞர் சமுதாயமே!
தமிழ் நாட்டில் பிராமணர் அல்லாத சமுதாயம் எல்லாம் தங்களுக்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்கி , நம்முடைய சமுதாயத்திற்காக
அல்லது நம் சாதிவளர்ச்சிக்காக என கூறி கட்சி ஆரம்பித்து
அந்தந்த சாதியில் உள்ள இளைஞர்களை வெறியேற்றி
அந்த சாதியை விட நாம் குறைந்தவனா?
அவருக்கு நிகராக நாம் ஏன் போராடக்கூடாது
நமக்கென்று ஒரு அரசியலமைப்பு வேண்டும் என்று முளைச்சலவை செய்து
கட்சி ஆரம்பித்து அதன் கட்சி தலைவர்கள் இன்று சொகுசு வாழ்கை வாழ்வதை நாம் பார்க்கிறோம் இளைஞனே இவர்களால் உன் சாதிக்கு பெருமை உண்டா ? சற்று சிந்தித்து பார் உன்சாதி கட்சி
வளர்ந்திருக்கிறதா ? உன் சாதி தலைவன் வளர்ந்திருக்கிறானா ? என்றாவது ஒரு சீட்அல்லது இரண்டு சீட் தவிர உன்சாதி தலைவனால் சீட் எந்த கட்சியிலாவது வாங்கமுடியுதா? அந்த ஒரு சீட்டையும் உன்சாதியில் கடைக்கோடியில் இருக்கும் ஒருவனுக்கு வழங்கப்பட்டதா ? யோசி இளைஞனே! கட்சி ஆரம்பித்தவனே அந்த சீட்டையும் வைத்துக்கொள்கிறான்
பிறகு எப்படி உன் சாதி வளர்ச்சிக்கு பாடுபடுவான் ! பிறகு எப்படி உன் சாதி கட்சி வளரும் தந்தை பெரியார் அவர்கள் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கிறதா ! ஒரு போதும் ”தனி கிணறு வெட்டாதே பொது கிணற்றில் எல்லோரும் சேர்ந்து தண்ணிர் எடுப்போம் அதுதான் உன் சமுதாய இழிவை போக்கும் ”இதன் அர்த்தம் உனக்கென்று ஒன்றை உருவாக்கி நீ தனிமைப்பட்டு போகாதே எல்லோரோடும் சேர்ந்து வாழ் அதுவே சாதி வேற்றுமைகளை களையும் ஆயுதம் ! ஆனால் இன்று என்ன நடக்கிறது தங்கள் சுய நலத்துக்காக , கட்சி ஆரம்பிக்கிறார்கள்
உங்கள் சாதி தலைவர்களின் வரலாற்றைப்பாருங்கள்
இதற்க்கு முன் அவர்கள் எந்த கட்சியில் இருந்தார்கள்
ஏன் அந்த கட்சியை விட்டு விலகினார்கள்
ஏன் நம்முடைய சாதிக்காக கட்சி ஆரம்பித்தார்கள்
அந்த கட்சியில் போதிய மரியாதை இல்லை
அந்த கட்சியில் மந்திரி பதவி கிடைக்கவில்லை
அடுத்து அந்த கட்சியில் சீட் கிடைக்காது
இதுபோன்ற காரணங்களால் மட்டுமே அவர்கள் பிரிந்து சாதி இளைஞர்களை உசுப்பேத்தி கட்சி ஆரம்பித்து அவர்கள் தலைவராகி சொகுசு வாழ்கை வாழ்கிறார்கள் இளைஞனே நீ அவர்களுக்காக கூட்டம் சேர்ப்பதும் அவர்களுக்கு நிதி வழங்குவதுவும்
உன் வாழ்க்கை முன்பை விட குருகிய வட்டத்துக்குத்தான் வந்து சேர்ந்துள்ளது நீ சாதி கட்சி ஆரம்பித்ததால் சாதிய வட்டத்தில் இருந்து வெளியே வந்து இருக்கிறாயா ? இல்லையே !
உன்சாதி கட்சி வளர்ந்திருக்கிறதா !
கட்சி வளரவில்லையே என் உன் தலைவன் என்றாவது வருத்தப்பட்டதுண்டா? மாறாக
இந்த கட்சி இல்லை என்றால் அந்தகட்சி என்று கொள்கைமாறி அவனுக்கு சீட் வங்குவதிலே குறியாக இருக்கிறான் இதுதான் உண்மை
இப்படிபட்ட சாதி தலைவவர்களால் சாதிக்கு பெருமையில்லை!
அப்படியானால் இதற்கு தீர்வுதான் என்ன ? கேட்பது புரிகிறது
திராவிட இயக்க வரலாறுகளைப்படி உனக்கு புரியும்
தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட
மிகவும்பிற்படுத்தப்பட்ட
மற்றும் ஒடுக்கப்பட்ட
இளஞர்கள் திராவிட இயக்க வரலாரை படித்து பார்த்தால்
சாதி கட்சிக்கு அடிமையாக மாட்டிர்கள்
பிராமணர் அல்லாத சமுதாயத்திற்காகவே ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான்
திராவிடமுன்னேற்றகழகத்தின் தாய் அமைப்பான நீதி கட்சி
காலத்திற்கேற்ப மாறி இன்று திராவிடமுன்னேற்றகழகமாக
நம் முன் ஆலமரமாக நிழல் தந்துகொண்டிருக்கிறது
இந்த ஆலமர நிழலில் தங்கியவர்கள் தான் சிலர் தங்கள் சாதிக்கென தலைவராகி கட்சிஆரம்பித்து இளைஞர்களை வசியப்படுத்தி
அவர்கள் வாழ்கிறார்கள் அவகள் சாதியை பின்னோக்கி தள்ளுகிறார்கள்
இதற்கு தீர்வு ஒன்றுதான் சாதிகட்சிக்கு அடிமையாகாதே !
தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட
மிகவும்பிற்படுத்தப்பட்ட
மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய திராவிடமுன்னேற்றகழகத்தில் இனைந்து பணியாற்று
அது உனக்கான உரிமை பெற்று தரும்
உலக வரலாற்றில் எந்த கட்சியாவது மாவடசெயலாளர் பொருப்புக்கு
ஒரு தாழ்த்தபடசமுதாயத்தை சேர்தவரை கட்டாயமாக தேர்ந்தேடுத்திருக்கிறதா !(ஒரு மாவட்டத்துகு ஒரு தாழ்த்தபட்டவர் )
திராவிடமுன்னேற்றகழகம் அதை செய்துள்ளது
இடஒதீக்கிட்டுக்காக தமிழ்நாட்டில் போராடி வெற்றி பெற்ற கட்சி திராவிடமுன்னேற்றகழகம்!
மந்திரி சபையில் எல்லா சமுதாயத்திற்கும் சரியாக ,சமமாக
பங்கீட்டு கொண்ட கட்சி திராவிடமுன்னேற்றகழகம்
ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்காக போராடும்
திராவிடமுன்னேற்றகழகத்தில் இன்றய இளைஞர்கள்
சேர்ந்து சாதி பாகுபாடற்ற சமுதாயத்தை
உருவாக்க வேண்டும் அதுவே சமுகத்தில்
சாதி வேற்றுமைகளை களைய எடுக்கும்
நல்ல நடவடிக்கையாக அமையும்
சாதி கட்சிகளை வெறுப்போம் !!
திராவிடமுன்னேற்றகழகத்தில் சேர்வோம் வெற்றி பெறுவோம் !!
மும்பை க.ஆறுமுகப்பாண்டியன்

செவ்வாய், 5 மே, 2015

அன்புமணி ராமதாஸ்க்கு பதிலடி

வரிக்கு வரி செறுப்படி......
சாரி மிஷ்டர் ஜாதி மணி.... இனிமே எல்லாம் இப்படித்தான்...!
==============================================
அன்புமணிக்கு திமுக முன்னாள் எம்.பி வழக்கறிஞர் தாமரைச்செல்வன் அவர்களின் விபரமான பதில்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு கடிதம் எழுதினார். அதற்கு இதுவரை முதலமைச்சரிடமிருந்து பதில் வரவில்லை. ஆனால் அழைப்பே இல்லாமல் திருமணத்திற்கு ஆஜராகியிருக்கும் டாக்டர் அன்புமணி குறிப்பாக திராவிட இயக்கம் வளர்த்த தொட்டிலில் வளர்ந்து டாக்டர் பட்டம் பெற்ற அன்புமணி இன்றைக்கு பதில் சொல்கிறேன் என்ற போர்வையில் திக்குத் தெரியாமல் பாய்ந்திருக்கிறார்.
டாக்டர் அன்புமணிக்கு பழைய அரசியல் தெரியாமல் போயிருக்கலாம். குறைந்த பட்சம் அவர் தனது தந்தையிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். “தேர்தல் திருடர்கள் பாதை” என்றும் “தேர்தலை புறக்கணிப்போம்” என்று கூறித்தானே இந்த சமுதாயத்தை வளைத்துப் போட நினைத்தீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி துவங்கிய பிறகு “என் உயிர்மூச்சு உள்ளவரை நானோ அல்லது என் வாரிசுகளோ எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவிக்கு போட்டியிடமாட்டோம்” என்றுதானே உரக்கக் குரல் எழுப்பி நலிவடைந்து கிடந்த வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றினீர்கள்?
ஆனால் எங்கள் தலைவர் கலைஞர் அப்படியல்ல. வன்னியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீடு கிடைக்காமல் தவித்த போது கை தூக்கி விட தலைவர் கலைஞர்தான். அன்று கூட அவர் தன்னிச்சையாக இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கலாம். ஆனால் டாக்டர் அன்புமணி ராமதாஸின் தந்தையை அழைத்துப் பேசி வன்னியர் சமுதாயத்திற்காகமுதன் முதலில் 20 சதவீத இட ஒதுக்கீட்டும் மத்திய அரசில் வன்னியர் ஒருவருக்கு கேபினட் அமைச்சர் பதவியும் கொடுத்தவர்தான் எங்கள் தலைவர் கலைஞர். இல்லையென்று அன்புமணியால் மறுக்க முடியுமா? இப்படி ஏதாவது ஒரு சாதனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக கோலோச்சிய டாக்டர் அன்புமணி தன் துறையில் வன்னிய சமுதாயத்திற்காக செய்ததாகக் கூற முடியுமா? அன்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டால் அரசு பணிகளிலும், தலைமைச் செயலகங்களிலும் இன்று வன்னியர் சமுதாயத்தினர் முக்கிய பதவிகளுக்கு வந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அதை அன்புமணியின் தந்தை மறக்கவில்லை. இட ஒதுக்கீடு வழங்கிய தலைவர் கலைஞரை இதே விழுப்புரம் மாவட்டத்திற்கு அழைத்து வந்து கூட்டம் போட்டு, தனியாக நாற்காலி ஒன்றுப் போட்டு “கலைஞர் முதல்வராக வந்தால்தான் சமூக நீதி காப்பாற்றப்படும்” என்று பகிரங்கமாக அறிவித்தார். டாக்டர் அன்புமணிக்குத் தெரியவில்லை என்றால் தன் தந்தையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஏன் சமீபத்தில் கூட தன் பேத்தியின் திருமண விழாவில் பேசிய அன்புமணி ராமதாஸின் தந்தை, “1989 ஆம் ஆண்டு ஆலிவர் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் இடஒதுக்கீடு பற்றி பேசிய நாள் முதல் எங்கள் நட்பு தொடர்கிறது” என்று கூறியதை ஏனோ டாக்டர் அன்புமணி மறந்து விட்டது விந்தையாக இருக்கிறது. டாக்டர் அன்புமணி தன் பதவிக்காக எதையும் பேசி விட்டுப் போகட்டும். ஆனால் இந்த சமுதாயத்திற்காக தி.மு.க. ஆற்றிய பணிகளை கொச்சைப் படுத்திப் பேச வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
வன்னிய சமுதாயத்தின் காவலனாக தொன்று தொட்டு நின்று வரும் தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை குறை சொல்ல இந்த சமுதாயத்திற்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத டாக்டர் அன்புமணி ராமதாஸ் சொல்வதற்கு தார்மீக உரிமை இல்லை. மத்திய அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார் அன்புமணி. மத்திய அரசு பணியில் வன்னியர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பது பற்றி என்றைக்காவது அவர் கோரிக்கை வைத்தது உண்டா? அது போகட்டும் வன்னியர் சமுதாய நலனிற்காக என்றைக்காவது ஒரு நாள் பாராளுமன்றத்தில் இவர் பேசியதுண்டா?
தமிழுக்கு தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தார்கள் என்கிறார் அன்புமணி ராமதாஸ். இதோ அவரது தந்தை தலைவர் கலைஞர் சமச்சீர் கல்வி கொண்டு வந்தபோது பாராட்ட வில்லையா? அக்கல்வியை அடித்தட்டு மக்களும் பயன்பெற வேண்டும் என்று கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சி என்பது அன்புமணிக்கு ஞாபகம் இல்லையா? ஏன் அவரது தந்தை “செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. கலைஞர் முதலமைச்சராக அதை நல்ல முறையில் செய்தார்” என்று பாராட்டினாரே அதையும் அன்புமணி மறந்து விட்டாரா?
ஏன் டாக்டர் அன்புமணி ராஜ்ய சபா சீட் பெறுவதற்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக வருவதற்கும் உதவி செய்தவர் தலைவர் கலைஞர்தான். தி.மு.க.வை விமர்சிக்கும் முன்பு அதை தன் நெஞ்சில் கைவைத்து ஒரு முறை யோசித்துக் கொள்ள வேண்டும்.
அப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரானவர் என்ன செய்தார்? இந்தூர் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு இன்றைக்கு டெல்லி நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நடந்து கொண்டிருக்கும் அன்புமணி ஊழல் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது. ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகிக் கொண்டிருக்கும் அன்புமணி இன்றைக்கு ஊழலை ஒழிப்பேன் என்று பேசுவது விந்தையிலும் விந்தை. உங்கள் தந்தை பா.ம.க.வை துவங்கும் போது என்ன சொன்னார்? “ என் கட்சியில் உள்ளவர்கள் அல்லது நானே கூட ஊழல் அல்லது தவறு செய்தால் மக்கள் மன்றத்தின் முன்னாள் பகிரங்கமாக விசாரணை நடத்தி, அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முச்சந்தியில் நிற்க வைத்து என்னை சவுக்கால் அடியுங்கள்” என்று பிரகடனப்படுத்தினார். அவருக்குப் பிள்ளையாகி, மத்திய அமைச்சராகி நீங்கள் இன்றைக்கு சாதித்துள்ளது என்ன? சி.பி.ஐ. கோர்ட்டில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறீர்கள். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து நீங்கள் தமிழகத்தின் நலனுக்காக என்ன செய்துள்ளீர்கள் என்று நீங்களே பட்டியலிட எண்ணினாலும் அது வெற்று காகிதமாகத் தான் இருக்க கூடும். ஏன் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நீங்கள் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனை பேரை டாக்டராக்கினீர்கள்? உங்களால் பட்டியிலிட முடியுமா?
“சமூக நீதி காப்பவர்” என்று கூறி தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பீர்கள். “அன்பு சகோதரி பார்த்துக் கொள்வார்” என்று கூறி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தீர்கள். ஏன் வாழப்பாடி ராமமூர்த்தி துவங்கிய ராஜீவ் காங்கிரஸுடன் கூட கூட்டணி வைத்தீர்கள். “என் வழக்கைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தீர்கள். “ஒரு சில கேள்விகளுக்கும், ஒரு சிலரைப் பற்றியும் நான் பதில் அளிப்பதில்லை” என்று உங்கள் தந்தை கூறிய பிறகும், விஜயகாந்தை தேடிச் சென்று சால்வை அணிவித்து “என் தொகுதியில் உங்கள் கட்சிக்காரர்களை வாக்களிக்கச் சொல்லுங்கள்” என்று கெஞ்சியது யார்? நியூ உட்லன்ட்ஸ் ஹோட்டலில் தனியாக இருந்த விஜயகாந்தை அவரது அறைக்கே சென்று சந்தித்து சால்வை போட்டது எதற்காக? அது என்ன வன்னிய சமுதாயத்தை மேம்படுத்தவா?. நீங்கள் பாராளுமன்றத்திற்குப் போகத்தானே கெஞ்சி கூத்தாடினீர்கள். நீங்கள் கூட்டணி வைக்காத தமிழக கட்சி ஒன்றை இன்றைக்கு உங்களால் சொல்ல முடியுமா? தி.மு.க.வுடன் மாறி மாறி கூட்டணி வைக்கும் போது தலைவர் கலைஞர் பற்றி தெரியவில்லையா? தளபதியின் நிர்வாகத் திறமை பற்றி அறியவில்லையா? கின்னஸ் ரிக்கார்டுகளை முறியடிக்கும் வகையில் மாறி மாறி கூட்டணி வைத்த போது தெரியவில்லையா? எத்தனை முறை கூட்டணி மாறினோம் என்பது உங்கள் கட்சி தலைமைக்கே கணக்கிட முடியாமல் போயிருக்கும். இந்த வாரம் யாருடன் கூட்டணி என்பது பற்றி கட்சி தொண்டர்களுக்கு அறிவிக்க நீங்கள் உங்கள் கட்சி அலுவலகத்திற்கு வெளியே அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற நிலைமைதானே இன்றைக்கு இருக்கிறது.
இன்றைக்கு சென்னை மேம்பாலங்கள் நிறைந்த மாநகரமாக இருக்கிறது என்றால், போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் தளபதிதான். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் இன்றைக்கு குடிநீர் கிடைக்கிறது என்றால் அதற்கு தளபதி வகுத்துக் கொடுத்து, நிறைவேற்றிய ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்தான்.வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு மட்டுமல்ல, அப்போராட்டத்தில் இறந்தவர்களுக்கு நிதியுதவி செய்து, அவர்களை தியாகிகள் என்று அறிவித்து அவர்களுக்கு பென்ஷனும் கொடுத்து கௌரவித்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான். இதை வன்னிய சமுதாயம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. தயவு செய்து உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பதவி ஆசைக்காக இந்த சமுதாய மக்களை அடகு வைக்காதீர்கள்.
தும்மினால் உடனே மதுவிலக்கு என்கிறீர்கள். நான் உங்களை ஒன்று கேட்கிறேன். நீங்கள்தானே சுகாதாரத்துறை அமைச்சராகத்தானே இருந்தீர்கள். நாடு முழுவதும் ஒரே மது விலக்குக் கொள்கையை அமல்படுத்த என்றைக்காவது உங்கள் துறையின் சார்பில் ஒரு மசோதா கொண்டு வர வேண்டும் என்று கருதியது உண்டா? மக்களின் சுகாதாரத்தின் மீது இவ்வளவு போலி அக்ககறை காட்டும் நீங்கள் ஏன் மத்திய அரசில் இருந்த போது முன்னெடுத்துச் செல்லவில்லை. எங்கள் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கூட திருநங்கைகளுக்காக தனி நபர் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறார். ஆனால் ஏன் உங்களால் மதுவிலக்கு தொடர்பாக ஒரு தனி நபர் மசோதாவாவது கொண்டு வர முடியவில்லை? அதை விடுத்து தரமற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு எப்படி அனுமதி வழங்குவது என்று சட்டத்தை வளைப்பதில்தானே குறியாக செயல்பட்டீர்கள். அது போகட்டும் அய்யாவின் தோட்டத்திற்கு அருகில் உள்ள பாண்டிச்சேரியில் மதுவிலக்கு வேண்டும் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை? அங்கு வேறு முதல்வர் வேட்பாளரை வன்னியர் சமுதாயத்திலிருந்து முன்னிறுத்த நீங்கள் தயங்குவதுதான் காரணமா? தர்மபுரிநாடாளுமன்றதொகுதியில்எய்ம்ஸ்மருத்துவமனை,சிப்காட்தொழில்பூங்காஎனபலதிட்டங்கள்கொண்டுவருவோம்என்றீர்களேஅதற்குஏதாவதுசிறுநடவடிக்கையாவதுஎடுத்தீர்களா?
நிர்வாகம் பற்றி கிழக்கு மேற்கு தெரியாத உங்களுக்கு பேராசை இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் உங்கள் பேராசைக்கு வன்னியர் சமுதாயத்தையும், அந்த சமுதாயத்திற்காக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நிகழ்த்திய சாதனைகளையும் கொச்சைப் படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு உங்கள் பதவி வெறி முக்கியமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு, எங்கள் இயக்கத்திற்கு இந்த வன்னியர் சமுதாய நலன் முக்கியம். ஏனென்றால் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அமைச்சர்களாக, டி.ஜி.பி.க்களாக, தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தலைவராக, துணை வேந்தர்களாக அமர வைத்து அழகு பார்த்த இயக்கம் தி.மு.க. அந்த இயக்கத்தின் வழிகாட்டியாக, தியாக விளக்காக, எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் தளபதியை குறை சொல்வதை நிறுத்தி விட்டு அவர் உழைப்பில் ஒரு சதவீதத்தையாவது மக்களுக்காக- குறிப்பாக இந்த வன்னியர் சமுதாயத்திற்காக செய்யுங்கள்.
தளபதிக்கு எழுதிய கடிதத்தில்அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கும் தமிழகத்தை மருத்துவர் என்ற முறையில் என்னால் மீட்க முடியும் என்று கூறியிருக்கிறீர்கள். பணம் வாங்கிக் கொண்டு தரமற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கினீர்களே அந்த கல்லூரிகளில் இருந்து மருத்துவரைக் கொண்டு வந்து வைத்து மீட்கப் போகிறீர்களா? அ.தி.மு.க. கஜானாவை சுரண்டியது போக மிச்சமிருப்பதை சுரண்டுவதற்கு திட்டத்தை தீட்டியிருக்கிறீர்களா? கடமை உணர்வும் நேர்மையும் இல்லாத உங்களை, டெல்லி நீதிமன்றத்தில் ஊழல் வழக்கில் ஆஜராகிக் கொண்டிருக்கும் உங்களை மருத்துவராகவும், அரசியல்வாதியாகவும் எப்படி கருத முடியும்?
ஆகவே தமிழகம் என்பது தைலாபுரம் தோட்டம் அல்ல. நீங்கள் நிர்வகிப்பதற்கு. அதே போல் இந்த வன்னியர் சமுதாயம் ஒன்றும் உங்கள் ஏமாற்றுப் பேச்சுக்களை நம்பி மோசம் போவதற்கு தயாராகவும் இல்லை. தி.மு.க.வும், தலைவர் கலைஞர் மற்றும் தளபதி அவர்களும் இந்த சமுதாயத்திற்காக ஆற்றிய பணிகளை அவ்வளவு எளிதில் உங்களது கோயபல்ஸ் பிரச்சாரத்தால் முறியடித்து விட முடியாது. தங்களையும், தங்கள் கட்சியையும் மக்கள் நம்புவார்கள் என்ற தங்களின் கனவு பகல் கனவாகவே இருக்கும்.
தாங்கள் இப்போது செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தளபதியின் உழைப்பை கற்றுக் கொள்ளுங்கள். அவர் செய்த தியாகத்தைப் படியுங்கள். தேவைப்பட்டால் பிரபல பத்திரிக்கையாளர் சோலை அவர்கள் எழுதிய தளபதி பற்றிய புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன். “வெட்டியாக கடிதம்” எழுதி இப்படி உங்கள் நேரத்தை மட்டுமின்றி தமிழக மக்களின் நேரத்தையும் வீணடிக்காமல், அரசியலில் அரிச்சுவடியை தளபதி அவர்களின் புத்தகத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் அவரது தியாகத்தில் ஒரு சதவீதமாவது செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். கூடவே வன்னியர் சமுதாயத்தை “வசனம்” பேசியே வஞ்சிக்காமல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல்வேறு திட்டங்களால் முன்னேறிக் கொண்டிருக்கும் அந்த சமுதாயத்தை தொந்திரவு பண்ணாமல் தயவு செய்து விட்டு விடுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.