புதன், 30 ஜூலை, 2014

முப்பெரும் விழா” ஒரு விளக்கம்

முப்பெரும் விழா” ஒரு விளக்கம்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
திராவிட முன்னேற்றக் கழகம்’’ எனும் நமது இம்மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்து - “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த காஞ்சி தந்த காவியத் தலைவர் - சொக்க வைக்கும் சொற் பொழிவாளர், தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவர், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பிறந்தது, செப்டம்பர் 15 அன்று ஆகும்!
அந்த மாபெரும் தலைவரை உருவாக்கி, நாட்டில் பகுத்தறிவும் - மான உணர்ச்சியும், தன் மான உணர்வும் மக்களிடையே தழைத்தோங்கிடவும், சாதி மத பேதமற்ற சமத்துவ நிலை உருவாகிடவும் தம் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்த தியாகப்பெருவிளக்கு - பகுத் தறிவுச்சுடரொளி தந்தை பெரியார் அவர்கள் பிறந்தது, செப்டம்பர் 17 அன்று ஆகும்
லட்சோபலட்சம் அடலேறுகளைக் கொண்டு ஓயாது உழைத்திடும் பேரியக்கம்!
இந்த இருபெரும் தலைவர்களின் எண்ணங்களை ஈடேற்றிடவும் ; தமிழ்மொழி உயர்வுக் காகவும் - தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும் - தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் லட் சோப லட்சம் அடலேறுகளைக்கொண்டு ஓயாது உழைத்திடும் ஜனநாயகப் பேரியக்கமாம், "திராவிட முன்னேற்றக் கழகம்’’ தோன்றிய நாள், செப்டம்பர் 17 ஆகும்.
வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த இருபெரும் தலைவர்கள் பிறந்த நாள்கள் மற்றும் தமிழ்கூறு நல்லுலகின் தனிப்பெரும் இயக்கமான, “தி.மு.கழகம் தோன்றிய நாள்” ஆகிய மூன்றினை யும் இணைத்து தி.மு.க. தலைமைக் கழகம் ஆண்டுதோறும் "முப்பெரும் விழா”க் கொண்டாடி

கலைஞர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

கலைஞர் கருணாநிதி பற்றி சுவையான சிறு குறிப்புகள்
தமிழ்நாட்டின் நிரந்தரத் தலைப்புச் செய்தி... கலைஞர் கருணாநிதி! ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் எதிரணியில் தொடர்ந்தாலும்  புகழ்க் கடலில் மூழ்கி,விமர்சன முத்தெடுத்து வெளியே வருபவர். பொது வாழ்வில் தலைமுறைகள் தாண்டியும் வலம் தமிழ்த் தேனி.
டி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார் இப்போது மு.க!.
’ஆண்டவரே’ என்றுதான் எம்.ஜி.ஆர். இவரை அழைப்பார். பிற்காலத்தில் `மூக்கா’ என்றும் அழைத்திருக்கிறார். `மூனாகானா’ என்று அழைப்பது சிவாஜியின் ஸ்டைல். இன்று கருணாநிதியின் மனைவி, மகன்கள், பேரன் பேத்திகள் உட்பட அனைவருமே `தலைவர்’என்றுதான் சொல்கிறார்கள்!.
தினமும் டைரி எழுதும் பழக்கம்கொண்டவர் அல்ல கருணாநிதி. ஆனாலும், அவருக்கு எல்லாம் நினைவில் அப்படியே இருக்கும். `என்னுடைய மூளையே எனக்கு ஒரு டைரி’ என்பார்!.
தினமும் இரவுத் தூக்கம் சி.ஐ.டி.காலனி வீட்டில்தான். அதிகாலை எழுந்ததும் கோபாலபுரம் போவார். காலை உணவு அங்கு. முரசொலிக்கோ, தலைமைச் செயலகமோ போய்விட்டு மதிய உணவுக்கு சி.ஐ.டி. நகர். சிறு தூக்கத்துக்குப் பிறகு, மீண்டும் கோபாலபுரம். அங்கிருந்து அறிவாலயம் செல்வார். இரவுச் சாப்பாட்டுக்கு டி.ஐ.டி நகர் போய்விடுவார். கருணாநிதியின் ஒருநாள் இதுதான்!.
அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் நின்றுவிட்டது! கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார்.`நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார். `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்!.
கருணாநிதிக்குப் பிடித்தலை சங்கு மார்க் வேட்டிகள்.`இதுதான்யா திருப்தியா இருக்கு’ என்பார்!.
ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டவர். செரிமானத்தில் பிரச்னை இருந்தால், சைவமே பெரும்பாலும் சாப்பிடுகிறார்.நித்தமும் ஏதாவது ஒருவகைக் கீரை இருக்க வேண்டும். மற்றபடி இட்லி,சோறு,சாம்பார் வகையறாக்கள் விருப்பமானவை!.
தி.மு.க. தேர்தல் செலவுக்கு எதிர்பாராத வகையில் 11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்ததைப் பாராட்டி, அண்ணா அணிவித்த மோதிரத்தைக் கழற்றியதே இல்லை.தங்க சங்கிலிகளை எப்போதுமே அணிந்ததில்லை!.
சின்ன வயதில் ஆர்வமாக விளையாடியது ஹாக்கி. திருவாரூர் போர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமில் இருந்திருக்கிறார். இப்போது கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம்!.
ஏதாவது ஒன்றைப் படித்தால், அதை அப்படியே ட்விஸ்ட் செய்வதில் தனித்திறமை உண்டு. `வீரன் ஒருமுறைதான் சாவான்... கோழை பலமுறை சாவான்’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. அதை கருணாநிதி, `வீரன் சாவதே இல்லை....கோழை வாழ்வதே இல்லை’ என்று மாற்றிப் பிரபலப்படுத்தினார்!.
கோபாலபுரம் வீட்டில் செயல்மணி, அறிவாலயத்தில் நீலமேகம் ஆகிய இருவரும் தான் கருணாநிதிக்கு உதவியாளர்கள். இருவருக்கும் வயதாகி விட்டதால், புதிதாக நித்யா என்ற இளைஞர் நியமிக்கபட்டு இருக்கிறார்!.
ஆரம்ப காலத்தில் மறவன் மடல் என்று எழுதி வந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பிறகுதான் `உடன்பிறப்பே’ என்று தலைப்பிட்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். `கடிதங்கள் எழுதுவதால்தான் என் மனவருத்தங்கள் குறைகின்றன’ என்பர்!.
பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவது அவரது பாணி. `ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?’ என்று ஒரு முறை கேட்கப்பட்டது. `அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று திருப்பி அடித்தார்!.
கருணாநிதி 40-க்கும் மேலான படங்களுக்கு கதை-வசனம் எழுதியிருக்கிறார். இதில் அவருக்கு அதிகம் பிடித்த வசனம்,`மனச்சாட்சி உறங்கும்  சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!.
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’என்றுதான் என் கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்!.
பூஜை அறை மாதிரியான மாடத்தில் கருணாநிதியின் அப்பா முத்துவேலர், அம்மா அஞ்சுகம், முதல் மனைவி பத்மாவதி ஆகியோரின் படங்கள் இருக்கின்றன.முக்கியமான நாட்களில், அங்கு வணங்கி விட்டுத்தான் வெளியில் புறப்படுவார்!.
சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள்,திரைக்கதை,வசனங்கள்,பாடல்கள் கார்ட்டூன் என எதையும் விட்டுவைத்ததில்லை கருணாநிதி.`ஆளும் திறமை இட்து மூளை... காவியமும் கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்’ என்றார் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி!.
’தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்’  கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது `வீழ்வது நாமாக் இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- கருணாநிதி எழுதிய இம் மூன்றும் தமிழகத்தில் அதிக முறை சொல்லப்பட்ட வாக்கியங்கள்!.
12 முறை எம்.எல்.ஏ. 5 முறை முதலமைச்சர், 10முறை தி.மு.க. தலைவர் என்பது மாதிரியான சாதனை இதுவரை யாரும் செய்ததில்லை. இனியும் முடியுமா என்பது சந்தேகம்!.
புழல் ஏரி உடைவது மாதிரி இருக்கிறது என்ற தகவல் கிடைத்தும்,அதைச் சரிப்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு, நள்ளிரவு 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சம்பவம் அவரது அதிகப்படியான் அக்கறையை உலகத்துக்குச் சொன்னது!.
படுக்கையில் உட்கார்ந்து பரீட்சை அட்டை வைத்து எழுதுவதுதான் அவரது வழக்கம்.உயரத்துக்காக இரண்டு தலையணைகளை அடுக்கிவைத்துக் கொள்வார். இன்றுவரை மை பேனாவைத்தான் பயன்படுத்துவார்!.
கோபாலபுரம், சி.ஐ.டி. நகர், தலைமைச் செயலகம், அறிவாலயம்,முரசொலி ஆகிய ஐந்து இடங்களிலும் அன்றைய செய்தித்தாள்கள் மொத்தமும்  கருணாநிதிக்காகத் தனியாகக் காத்திருக்கும்!.
கடற்கரை மணலில் உட்கார்ந்து காற்று வாங்கிய படி பேசுவதுதான் கருணாநிதிக்குப் பிடிக்கும். அது முடியாததால், மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் கடலைப் பார்த்த அறையில் அடிக்கடி தங்குகிறார்!.
கருணாநிதிக்குப்  பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேசையில் வைத்திருப்பது திருக்குறள்!.
தனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை!.
நன்றி
ஆனந்த விகடன்

திங்கள், 28 ஜூலை, 2014

பொன் மொழிகள்

  • மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே.
  • ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான்.
  • மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது, ஆனால் முட்டாள்தனமாகச் செயற்படுவது.
  • பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.
  • மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட, ஒரு கணப் பொழுதாயினும் உதவி செய்வது மேல்.

  • தாய் பசித்திருக்க, தாரத்திற்கு சோறு ஊட்டாதே, நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.
  • அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி, ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன், ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை, தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.
  • பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது, உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான் நன்றி நிரம்ப வருகிறது.
  • பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
  • நீ கொடுக்கவேண்டியவற்றை நன்றாகக் கொடு, அது உனக்கு 4 மடங்காகத் திருப்பித் தரப்படும்.
  • எப்பொழுதும் உன்னை நினைத்துச் சுயநலமாக இருப்பதைவிட, மற்றவர்களை நினைத்துப் பொதுநலமாக சிந்தி, நீ நன்றாக இருப்பாய்.
  • வாழ்க்கை ஒருமுறை, அதை மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து காட்டப் பழகிக் கொள்ள வேண்டும்.
  • நீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் போன்றவற்றை விட்டுச் செல், அது உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்.
  • நீ எப்பொழுதும் நல்லவற்றையே சிந்தி, உனக்கு எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் இது விதி, தீயவற்றைச் சிந்தித்தால் தீயவையே நடக்கும் இதுவும் விதி.
  • ஆண்டவன் உனக்குத் தர நினைக்கும்போது யாரும் தடுக்க முடியாது, அதேநேரம் ஆண்டவன் அதைப் பறிக்கும்போது யாராலும் அதைத் தடுக்க முடியாது.

  • ஆண்டவன் ஒவ்வொரு நல்ல உள்ளங்களிலும் அழகாக வீற்றிருக்கிறான், நாங்கள்தான் அதைக் கண்டுகொள்வதில்லை.
  • உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.
  • ஆண்டவன் எல்லோருக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான், நாம் அதைக் கண்டுகொள்ளாமல், திறமையற்றவர்களாகத் திரிகிறோம்.
  • நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.
  • நீ எப்போது யாருமற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவுகிறாயோ, அப்போது ஆண்டவன் உன்னிடம் 'கடன்காரன்' ஆகிறான்.

நிகழ்ச்சி



நேற்று மாலை ஞாயிறு அமைப்பின் சார்பில் மும்பை
கெச். பி நகரில் கவியரங்கம் நடைபெற்றது ஞாயிறு அமைப்பின் தலைவர் திரு ஞாயிறு ராமசாமி தலைமையில் தமிழ்நாட்டில்பிரபலமான
ஆசுகவி நங்கை சிவன் கவியரங்கத்தலைவராக
இருந்து சிறப்பாக நடத்தினார்கள்
கவிஞர் தமிழ்நேசன் கவிதை சிறந்ததாக தேர்வு செய்யபட்டது விழாவில் மராட்டிய மாநில எழுத்தாளர் மன்றத்தலைவர் சமீரா மீரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டா









நேற்று மாலை மும்பையில் மராட்டிய மாநில தமிழ் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழாவிழா சிறப்பாக நடை பெற்றது விழாவில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 90 விழுக்காடு மதிப்பென் வாங்கிய
(தமிழ் மாணவர்கள் )64 மாணவ ,மாணவியருக்கு முறையே
11 ஆயிரம்
7ஆயிரத்து 500 ,
ஐந்து ஆயிரம்
ஆக மொத்தம் 5 லச்சம் ருபாய் பகிர்ந்தளிக்க பட்டது
அது மட்டுமல்ல அவர்களுக்கு பாராட்டு பத்திரம் ,நினைவு பரிசு பெரியவர்களின் பாராட்டு இத்தனையும் வழங்கப்பட்டது அவர்களை வாழ்த்துகின்ற வாய்ப்பு
அடியேனுக்கு கிடைத்தது இத்தனை குழந்தைகளை வாழ்த்த நான் என்ன பெறு பெற்றேன்
மாராட்டிய மாநில தமிழ்சங்க தலைவர் திரு , அண்ணாமலை
பொது செயளாலர் ராஜா இளங்கோ மற்றும் நிர்வாகிகளுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

வெள்ளி, 25 ஜூலை, 2014

கலைஞர் கேள்விபதில்

5.கேள்வி : உங்களுக்குப் பிடித்த சட்டமன்றப் பேச்சாளர்?

கலைஞர் : எந்த மன்றமானாலும் சரி, அங்கே கொடிமரம் போல் உயர்ந்துநிற்கும் ஆற்றல்மிகு பேச்சாளர் அறிஞர் அண்ணாதான்.

6.கேள்வி : பிடித்த சபாநாயகர்?

கலைஞர் : ஆரம்ப காலத்தில் டாக்டர்.யு.கிருஷ்ணராவ்-இடைக்காலத்தில் செல்லப்பாண்டியன்-அடுத்து கே.ராஜாராம்-அண்மைக் காலத்தில் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்.

7.கேள்வி : உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பதில்?

கலைஞர் : 24.03.1960 அன்று சட்டப் பேரவையில், ஓவியர் வேணுகோபால்சர்மா அவர்களால் “தபால் தலைகளுக்கு என்று வரையப்பட்ட திருவள்ளுவர் ஓவியத்தைச் சட்டமன்றத்தில் வைக்கும் உத்தேசம் அரசாங்கத்திற்கு உண்டா?” என்று நான் கேட்டதற்கு பெரியவர் மாண்புமிகு பக்தவத்சலனார் அவர்கள் எழுந்து, “சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்கள் அம்மாதிரி ஒரு படத்தை இங்கு சமர்ப்பிக்க முன்வந்தால், கனம் சபாநாயகர் அவர்கள் அதைப்பற்றி யோசிப்பார்கள்” என்று கூறிய பதில் தான் எனக்குக் கிடைத்த மறக்க முடியாத பதில் என்று சொல்வேன். ஏனென்றால் அந்தப் பதிலின் காரணமாகத்தான் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் 22.3.1964 அன்று அன்றையக் குடியரசுத் தலைவர் மேதகு ஜாகீர் உசேன் அவர்களால் திருவள்ளுவரின் திருவுருவப்படம் திறந்து வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகத்தான் தி.மு.கழக ஆட்சியில் பேருந்துகள், அரசு விருந்தினர் மாளிகைகளில் திருவள்ளுவர் படங்கள் என்று தொடங்கி, வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் வானுயர் வள்ளுவர் சிலை என ஆயிற்று!

1.கேள்வி : சட்டசபையில் முதல்நாள் அனுபவம் எப்படியிருந்தது?

கலைஞர் : பந்தயக் குதிரையைப் படைவீரர் அணிவகுப்பில் நிறுத்தி வைத்தது போல் இருந்தது.

2.கேள்வி : பேசிய முதல் பேச்சு?

கலைஞர் : நான் 1957இல் வெற்றிபெற்ற குளித்தலைத் தொகுதியில் உள்ள “நங்கவரம்” பண்ணை விவசாயிகளின் “கையேரு வாரம்-மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினைக்காகப் பேசியதே பேரவையில் எனது முதல் பேச்சு.

3.கேள்வி : அதிக நேரம் பேசிய நாள்?

கலைஞர் :அதிக நேரம் பேசிய நாட்கள் பல உண்டு. இருப்பினும் 1997ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு, நான் அளித்த பதிலுரைதான் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது.

4.கேள்வி : உங்களுக்கு பிடித்த சட்டமன்றப் பேச்சு?

கலைஞர் : அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சியில்: எதிர்கட்சித் தலைவராக நானிருந்த போது, “பூம்புகார்” நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட இருந்த “பல்கேரியா பால்டிகா” என்ற கப்பல் பேர ஊழல் குறித்து இருபது ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துவைத்துக் குற்றம் சாட்டிப்பேசியதால், அந்த இரு கப்பல்களுமே வாங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்பது சட்டப் பேரவையின் பரபரப்பான வரலாறு

கலைஞர்

92 வயது வாலிபரின் ஏக்கத்தை பாருங்கள்
>............................................................
கேள்வி :- நீங்கள் தொடாத துறையே இல்லை....எதை நீங்கள் சரியாகப் பங்களிக்கவில்லை என்று கருது கிறீர்கள்? அப்படி ஏதாவது இருக்குமானால்?

கலைஞர் :- எல்லா துறைகளிலுமே, இன்னும் கொஞ்சம் கூடுதலாக உழைத் திருக்கலாமோ என்ற எண்ணம்தான் தற்போது மேலோங்கி உள்ளது!

கவிஞர் வாலி அவர்கள் கலைஞரை நினைவு கூர்ந்தார். கலைஞர் தனக்கு 40 ஆண்டுகால நண்பர் என்று குறிப்பிட்டார். அவரிடம்தான் நிறைய பரிசுகள் பெற்றிருப்பதை கூறி பெருமைப்பட்டு கொண்டார். தொடர்ந்து தன்னுடைய கவிதை ஒன்றை குறிப்பிட்டு பேசினார். நிஜ கோவிந்தா - என்று பஜ கோவிந்தா-வுக்கு பதிலாக வைத்த தலைப்பில், காஞ்சிபுரத்தில் கோயில் யானைக்கு தென்கலை நாமம் போடுவதா, வடகலை நாமம் போடுவதா என்ற சர்ச்சை, வழக்கு மன்றம் சென்று வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருக் கையில் அந்த யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி விட்டது. அப்போது யானைக்கு மதம் பிடித்ததால் ஓட வில்லை. மதம் பிடிக்காததால் ஓடிவிட்டது - என்று எழுதியதைக் குறிப்பிட்டதும் வெடிச் சிரிப்பும், கைதட்டலும் ஒருங்கே எழுந்தது. அந்த வெடிச்சிரிப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சிரிப்பு வெடியை எடுத்து போட்டார் கவிஞர் வாலி.

அதாவது தனக்கு பரிசளிக்க இருந்த கலைஞர் இந்த கவிதையை சுட்டிக்காட்டி, இந்த ஒரு கவிதைக்கே லட்ச ரூபாயை பரிசாகத் தரலாம் என்று அறிவித்ததையும், தொடர்ந்து கலைஞர், இதையே நான் எழுதியிருந்தால் சோ வென்று மழை பெய்திருக்கும் என்று குறிப்பால் உணர்த்திச் சொன்னதாக சொன்னவுடன் சிரிப்பும் கை தட்டலும் இடி மின்னலுடன் மழையாக பொழிந்து அரங்கை அதிர வைத்தது.

............................................................

திமுக கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து 1960 இல் ஆகஸ்டில் சென்னை, கோடம்பாக்கத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு அண்ணா தலைமையில் நடத்தப்பட்டது. இந்தி திணிப்பிற்கெதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யபட்டது. இந்தியக் குடியரசுத்தலைவர் வருகையின் பொழுது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவெதெனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் கிளர்ச்சியையும் இந்தி எதிர்ப்பு உணர்வாளர்களின் எழுச்சியையும் கண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வண்ணம் இந்திய அரசியலமைப்பில் திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். இதனால் கருப்புக்கொடி ஆர்பாட்டம் கைவிடப்பட்டது.
 

தளபதி

இளைஞர் சமுதாயமே தெரிந்து கொள்
....................................................................
'நீங்கள் மறக்க முடியாத மனிதர் யார்?''
...............................................................
மறக்க முடியாத என்பதைவிட, மறக்கக் கூடாத மனிதர் ஒருவரைச் சொல்கிறேன். அவர்... சிட்டிபாபு!

என் மீது விழுந்த அடிகள் அனைத்தையும் தன் மீது தாங்கிய மனிதர். அன்று அவர் தோள் கொடுக்காமல் போயிருந்தால், இன்று நான் உங்களின் இந்தக் கேள்விக்குப் பதில் அளித்திருப்பேனா
என்பதே சந்தேகம்தான்!

அவசரநிலைப் பிரகடனம் இந்தியாவில் அமலான நேரத்தில் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர். சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு, நெருக்கடி யான அந்தக் காலகட்டத்தில் நடந்த சிறைக் காட்சியை இப்போது நினைத்துப் பார்த்தாலும் அடிவயிற்றில் நெருப்பு பரவும். நான் சொல்வதை விட அண்ணன் சிட்டிபாபு தன்னுடைய சிறை டைரியில் இப்படி எழுதுகிறார்...

'தமிழகத்து முதலமைச்சர் மகன் என்று அறிந்திருந்த அந்த அதிகாரி, தன் பூட்ஸ் காலால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள் பட்டையில். காக்கி உடை அணிந்த வார்டன் ஒருவன் அவனது கன்னத்தில் கைநீட்டினான். கண்டேன் காட்சியை! இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவர் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

எனக்கென்று ஒரு துணிவு. திடீர் என்று குறுக்கே பாய்ந்தேன். தடிகள் கழுத்தில் விழுந்தன. அவை அடிகள் அல்ல. உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பினைத் தட்டிப் பதப்படுத்தி உளியாக மாற்றிவிடும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தன. கழுத்தில் அத்தனையையும் தாங்கிக்கொண்டேன்’ என்று கதறக் கதற எழுதி இருப்பார் சிட்டிபாபு. இத்தகைய விழுப்புண்களைத் தாங்கி விண்ணுயர இயக்கத்தை வளர்த்தவர்கள் தி.மு.க-வின் வீரர்கள். அத்தகைய தீரர்களில் ஒருவர் சிட்டிபாபு!''
.................................தளபதி

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மார்ச் 1யில் பிறந்தநாள் காணும் எங்கள் மன்னனே...
தரணி போற்றும் நாயகனே ,
தமிழ் அறிஞர் புதல்வனே ,
வருங்கால எங்கள் முதல்வனே ...

இவர்தான் தளபதி

தலைவர் கலைஞரின் மகன் என்பதைவிடவும் அவரது முதல் தொண்டர் என்பதில் பெருமை கொள்ளும் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை, சிறு வெளியீடாக வந்துள்ளது. சென்னை மாநகர மேயராக அவர் பணியாற்றிய காலத்தில் மாநகர மேம்பாட்டிற்காக அவர் மேற்கொண்ட அயல்நாட்டுப் பயணங்களில் ஏற்பட்ட அனுபவங்களைப் பயணச்சிறகுகள் எனும் நூலாக வெளியிட்டுள்ளார். தனது கருத்துக்களை கட்சித் தொண்டர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் 'உங்களில் ஒருவன்' எனும் தலைப்பில் கட்டுரைகளை எழுதி வருகிறார். மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளையும் சாதனைகளையும் விளக்கி மற்றவர்கள் எழுதிய நூல்களும் உள்ளன.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தளபதி ஸ்டாலின்
பிஞ்சியில் பழத்தவர் அல்ல
விதையாகி,
முளைத்து, பூவாகி,பிஞ்சாகி,காயாகி,
கனியாகி, பழத்து இருப்பவர்
பனிதான் முக்கியமே தவிர
பதவியல்ல என்றே கருதி உழைத்து
திராவிட இயக்கத்தை இன எதிரிகளிடம் இருந்து
காப்பாற்ற தலைவருக்கு தோள் கொடுத்து
கடமை மற்றும் ஒரு கட்டுபாடு
மிளிரும் சிப்பாய். தன்னை தளபதி என்று
கூட அழைத்துகொள்ள விரும்பாத
அடக்கத்தின் உருவம்.
 
 

திராவிட முன்னேற்ற கழகம்

நமக்கென
சரித்திரம் வேண்டும்.
அதற்கான செயல்களில்
வேகம் வேண்டும்;
விவேகம் வேண்டும்
போராடு
வாழ்க்கையில் தினமும்;
வருவதை எதிர்கொள்;
துணிவு கொள்;
அச்சம் வேண்டாம்.

>>>>>>>>>>>>>>>>>>>>
எப்படியாவது தி மு .க அழிந்து போய்விடாதா?
என்று ஏங்கி தவித்து போகும் அற்ப பதர்களே
தி மு .க வை அழிக்க இந்த கொம்பன் இல்ல
எந்த கொம்பனாலும் முடியாது
இதுதான் வரலாறு

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒருத்தன் வைகோவை முதல்வர் ஆக்குவேன் என்கிறான்.

ஒருத்தன் 2016 இல் எங்க ஆட்சி என்கிறான்.

இன்னொருவன் மோடிக்கு என் ஆதரவு இல்லை என்கிறான்.

நீங்கெல்லாம் எங்க இருந்துடா வறிங்க..!

குனிந்து பாருங்கடா நாதாரிகளா
கோவனம் கூட இல்லாமல் பேசிகிட்டு இருப்பது தெரியும் .


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மாவிரன்அலெக்சாண்டர் தனது 16வது வயதில்
அவர் தந்தையின் போர்படையில்
தளபதியானார்
எங்கள் தலைவரின் மகன் ஸ்டாலின் அவர்களும்
தன் 16வயதில் தலைவரின் தொண்டர் படையில்
தளபதியானார்
 
 

பொன்மொழி

அட இது நல்லா இருக்கே
>>>>>>>>>>>>>>>>>>>
அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும்
சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சோகம் மட்டுமே
வாழ்க்கை கிடையாது
சுகமாகவே என் நாளும்
வாழ்ந்து விடவும் முடியாது
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில்
வாழ முடியும் என்பதை மறவாதீர்..

......>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தோழா....

பிறப்பில் கருப்பே என்று
காக்கை கவலைப் படவில்லை
ஏறி மிதிக்கிறார்களே என்று
எருது கவலைப் படவில்லை
கோடையில் சபிக்கிரார்களே என்று
ஞாயிறு கவலைப் படவில்லை..!

நாளை நமது என்று நம்பிக்கையுடன் நடைபோட்டு
எழுது உன் பெயரை இமயத்தில்,
எட்டுத் திக்கும் முழங்க...
எவரெஸ்டும் ஏங்கட்டும் உன் உயரத்தை எட்ட....!
 

நகைச்சுவை

என்ன கொடும சார் இது..
>>>>>>>>>>>>>>
உங்க வீட்டுல எறும்பு நெறைய இருக்கா?
அத குறைக்க easy யா ஒரு வழி,….

சர்க்கரைல கொஞ்சமா மிளகாய்தூள் கலந்துக்கனும்.

அத எறும்பு, சக்கரைன்னு நெனைச்சி சாப்பிட்டுடும்.

அப்ப, அதோட நாக்கு. காரத்துல எரியும்.

உடனே எறும்பு என்ன பண்ணும் தெரியுமா?



தண்ணி குடிக்க, water tank க்கு வரும்.

அப்ப, பின்னாடி இருந்து அந்த எறும்ப தண்ணில தள்ளி விட்டுடனும்

எறும்பு செத்து போயிடும்.

அவ்வளவுதான்.

அடுத்து, கரப்பான் பூச்சிய எப்படி கொல்லுறதுன்னு சொல்லித் தரட்டா…..





>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அய்யா சாமி அடிக்க வர்றாங்க
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சில அறிவூபூர்வாமான கேள்விகள கேட்டா நம்ம ஆளுக, நம்மள ஒரு மாதிரி பார்பாங்க. அப்படித்தாங்க,
ஒரு கேள்வி கேட்டேன்.

போஸ்ட்மன் போஸ்ட் தர்றார்.
மில்க் மேன் மில்க் தரார்.
பேப்பர் காரர் பேப்பர் தரார்.
ஆனா,
பையர்மன் ஏன் பையர் தர்றதில்ல?

இதத்தாங்க கேட்டேன், என்ன உதைக்க வாரங்க.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சத்தியமா இது என்னது இல்ல
>>>>>>>>>>>>>>>>>>>>
இந்த உலகம் ரொம்ப மோசம் சார்.

?
?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

நீங்க mouse பட்டன் – அ நகர்த்திட்டே இருந்தா மட்டும் என்ன திருந்தவா போகுது?

.............>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இது எப்படி இருக்கு
>>>>>>>>>>>
நான் நல்லவன்னு சொல்லி
ஊரை ஏமாத்த நான் ஒண்ணும் கெட்டவன் இல்லை
. அதே போல, நான் கெட்டவன்னு உண்மைய ஒத்துக்க நான் ஒண்ணும் நல்லவன் இல்லை
.
இப்படிக்கு,
நான் அவன் இல்லை

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இளமை – முதுமை
>>>>>>>>>>>>>>>>>>>>>

இனியும் வேண்டும் என்பது இளமை
இனியும் வேண்டாம் என்பது முதுமை

இனி எப்போ விடியும் என்பது இளமை
இனி ஏன் விடிகிறது என்பது முதுமை

மறக்க வேண்டாததை மறந்து விடுவது இளமை
மறக்க வேண்டியதை மறக்காமல் இருப்பது முதுமை
இனித்தான் இனிமையான வாழ்வு என்பது இளமை
இனித்தான் கசப்பான வாழ்வு என்பது முதுமை
மறைக்க வேண்டியதை மறைக்காதது இளமை
மறைக்க வேண்டியதை மறைப்பது முதுமை
வாழும் காலம் இனிமை என்பது இளமை
வாழ்ந்த காலம் இனிமை என்பது முதுமை

    
எனது போட்டோக்கள்