வெள்ளி, 25 ஜூலை, 2014

கலைஞர்

92 வயது வாலிபரின் ஏக்கத்தை பாருங்கள்
>............................................................
கேள்வி :- நீங்கள் தொடாத துறையே இல்லை....எதை நீங்கள் சரியாகப் பங்களிக்கவில்லை என்று கருது கிறீர்கள்? அப்படி ஏதாவது இருக்குமானால்?

கலைஞர் :- எல்லா துறைகளிலுமே, இன்னும் கொஞ்சம் கூடுதலாக உழைத் திருக்கலாமோ என்ற எண்ணம்தான் தற்போது மேலோங்கி உள்ளது!

கவிஞர் வாலி அவர்கள் கலைஞரை நினைவு கூர்ந்தார். கலைஞர் தனக்கு 40 ஆண்டுகால நண்பர் என்று குறிப்பிட்டார். அவரிடம்தான் நிறைய பரிசுகள் பெற்றிருப்பதை கூறி பெருமைப்பட்டு கொண்டார். தொடர்ந்து தன்னுடைய கவிதை ஒன்றை குறிப்பிட்டு பேசினார். நிஜ கோவிந்தா - என்று பஜ கோவிந்தா-வுக்கு பதிலாக வைத்த தலைப்பில், காஞ்சிபுரத்தில் கோயில் யானைக்கு தென்கலை நாமம் போடுவதா, வடகலை நாமம் போடுவதா என்ற சர்ச்சை, வழக்கு மன்றம் சென்று வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருக் கையில் அந்த யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி விட்டது. அப்போது யானைக்கு மதம் பிடித்ததால் ஓட வில்லை. மதம் பிடிக்காததால் ஓடிவிட்டது - என்று எழுதியதைக் குறிப்பிட்டதும் வெடிச் சிரிப்பும், கைதட்டலும் ஒருங்கே எழுந்தது. அந்த வெடிச்சிரிப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சிரிப்பு வெடியை எடுத்து போட்டார் கவிஞர் வாலி.

அதாவது தனக்கு பரிசளிக்க இருந்த கலைஞர் இந்த கவிதையை சுட்டிக்காட்டி, இந்த ஒரு கவிதைக்கே லட்ச ரூபாயை பரிசாகத் தரலாம் என்று அறிவித்ததையும், தொடர்ந்து கலைஞர், இதையே நான் எழுதியிருந்தால் சோ வென்று மழை பெய்திருக்கும் என்று குறிப்பால் உணர்த்திச் சொன்னதாக சொன்னவுடன் சிரிப்பும் கை தட்டலும் இடி மின்னலுடன் மழையாக பொழிந்து அரங்கை அதிர வைத்தது.

............................................................

திமுக கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து 1960 இல் ஆகஸ்டில் சென்னை, கோடம்பாக்கத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு அண்ணா தலைமையில் நடத்தப்பட்டது. இந்தி திணிப்பிற்கெதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யபட்டது. இந்தியக் குடியரசுத்தலைவர் வருகையின் பொழுது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவெதெனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் கிளர்ச்சியையும் இந்தி எதிர்ப்பு உணர்வாளர்களின் எழுச்சியையும் கண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வண்ணம் இந்திய அரசியலமைப்பில் திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். இதனால் கருப்புக்கொடி ஆர்பாட்டம் கைவிடப்பட்டது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக