சனி, 30 ஆகஸ்ட், 2014

திராவிட முன்னேற்ற கழகத்தை தெரிந்து கொள்ளுங்கள் ....1

திராவிட முன்னேற்றக் கழகம் இதன் சுருக்கம் தான் தி.மு.. இதனைநாம் இப்படியும் கூறலாம். ஆம் தித்திக்கும், முதிர்ந்த கனி என்று.அத்தகைய சுவையை, நலனை தமிழ்நாட்டில் உருவாக்கிய உன்னதஇயக்கம் தி.மு.. தி.மு..வின் சாதனைகளை இரு வேறு நிலைகளைவிளக்கலாம்.

அது தோன்றிய நாளில் இருந்து ஆட்சிக்கு வருவதற்கு முன் வரைஅதன் பணிகளையும், சாதனைகளையும் ஒரு பகுதியாகவும், ஆயிரத்துதொள்ளாயிரத்து அறுபத்து ஏழிலிருந்து இன்று வரை தொண்டாற்றும் தூயபணிகளையும், அதன் பயன்களையும், சாதனைச் சரித்திரத்தையும் விளக்கிவிவரிக்கலாம்.

திராவிடர் கழகத்தில் இருந்த போது அண்ணா நினைத்திருந்தால்அப்படியே அந்த இயக்கத்தை தன் தலைமையின் கீழ் கொண்டு வரமுயன்றிருக்கலாம். ஆனால் பெரியாருக்கும், அவரது கொள்கைகளுக்கும்துணை செய்கின்ற வகையில்தான் அவர் தனது பணிகளைத் தொடங்கினார்- தொடர்ந்தார் - சிறந்தார். அய்யாவின் கொள்கைகளில் இருந்துவேறுபடவில்லை. மக்களை அடிமைப் படுத்தி அறியாமையில்ஆழ்த்தியவர்களை நோக்கிப் பாயும் அறிவுத் துப்பாக்கியாய் அய்யாவின்இயக்கத்தோடு இணைந்து பாயும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக தி.மு..இயங்கும் என்றார்.

இந்த இனிய நிலையிலிருந்து தனது இறுதி நாள் வரை அவர் இடறிவிழவே இல்லை. அய்யாவின் கொள்கைக்கு எழுச்சியும், வளர்ச்சியும்ஊட்ட இளைஞர் பட்டாளத்தை அய்யாவின் பக்கம் ஈர்த்தளித்தார்.

தொடர்ந்து அந்தத் தூய தொண்டை தான் இருக்கும் வரைஇனிமையுடன் இதய சுத்தியுடன் தொடர்ந்தார்; மகிழ்ந்தார்.ஆட்சிக்குமுன்னிருந்த தி.மு..-வின் பிரச்சாரங்கள், கருத்து பரப்பும் கலைவடிவங்களில் அய்யாவின் கொள்கைகளை வலியுறுத்தியது.

இளைஞர்களின் இதயங்களில் உலகையே ஓவியமாய் வரைந்துகாட்டியது. கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல் ஆகிய துறைச்செய்திகளை கல்லூரிகள் தருவதைக் காட்டிலும் கனிச் சுவையாய் மாலைநேரக் கூட்டங்களில் வழங்கி மகிழ்ந்தது தி.மு..

ஏழை, எளியோர், கல்வி கிடைக்காதோர், கலை வடிவம் காணாதோர்,சிந்தனை வகை எதுவென்று எண்ணிப் பார்க்க ஏதும் தெரியாதோர்,இளைஞர், மகளிர், இளம் மாணவ, மாணவியர், சிறுவர்கள், உழைப்பைத்தவிர வேறெதுவும் பெற வகையறியாதோர் எல்லாம் கழகக் கூட்டங்களில்பொழிந்த சொல் மழையால் அறிவாளர் பெற்றதெல்லாம் பெற்றுவளர்ந்தனர். மகிழ்ந்தனர். இது உலக வரலாற்றில் அரசியல் கட்சிகளில்மிகப் பெரும் புதுமையும், சாதனையுமாகும்.

மக்களின் விழிப்புணர்வுக்குப் பாடுபட்ட தி.மு.. மக்களின்பொருளாதார வளர்ச்சிக்கும், வாழ்வில் வளம் பெறுவதற்கும், உயர்வுகாண்பதற்கும், அறிவு பரப்பம் பணிகளோடு, அரசின் கவனத்தை ஈர்க்கும்அடுக்கடுக்கான அறப்போராட்டங்களை நடத்தியது.

மக்களாட்சி கொள்கையின் மாசில்லாக் கோட்பாடுகளை மக்களிடம்பதிக்க தன்னை முழுமையாகத் தந்தது தி.மு.. நியாயத்திற்காகபோராடினாலும், இந்த நாட்டுச் சட்டம் என்ன சொல்கிறதா அதைஇன்முகத்துடன் ஏற்றுக் கொண்டது தி.மு.. ஒரு சனநாயக நாட்டில் மக்கள்நலனுக்காக கொடுமைகளை ஏற்று தன் இனிய தோழர்களின் உயிர்களைஇழந்தது தி.மு..

தீண்டத்தகாதவர்கள் என்று எப்படி தன் மக்களையே இந்து மதம்கருதி இழிவு செய்ததோ அத்தகைய மனோபாவத்தை கொண்டிருந்த ஓர்அரசை எதிர்த்துப் போராடிய தி.மு.. தன் தோழர்களை இழந்தது போன்றுஉலக அளவில் யாரும் இழந்திருக்கவில்லை.

பலநூறு பல்கலைக் கழகங்கள் செய்ததை விட நூறு மடங்குபகுத்தறிவு பண்பாட்டு உணர்வுகளை, செழுமைகளை உருவாக்கியதுதி.மு.. இளைஞர் உலகத்தை எழுச்சியுறுச் செய்து ஏற்றமிகுஉணர்வுகளை, கொள்கைகளை அவர்களது உள்ளத்தில் ஏற்றி வைத்துஒவ்வொரு நாளும் அவர்களது உயர்வுக்கு உழைத்தது தி.மு..

இருட்டறையில் கிடந்த தமிழர்களை தம் எழுத்தாலும், பேச்சாலும்ஒளியேற்றி வெளிச்சப் பாதையில் வேக நடை போட வைத்தது தி.மு..பொருள் வள வாழ்வை தமிழர்கள் பெறுவதற்கு போராடி உழைத்த தி.மு..அகவாழ்விலும் தமிழ் ஆளுமை செய்யும் ஆக்கமிகு பணிகளைஅடைமழை போல் ஆற்றியது. கதை, கவிதை, கட்டுரைகள், புதினங்கள்,புதுமைச் செய்திகளை எழுத்திலும், பட்டி மண்டபம், வழக்காடு மன்றம்,தலைப்புகள் தந்து சொற்பொழிவுகள், சிறப்புக் கூட்டங்கள், மாநாடுகள்என்று பேச்சுக் துறையில் எவ்வளவு எழுச்சியும் உணர்ச்சியும் ஊட்டமுடியுமோ அவ்வளவும் செய்து தமிழர்களின் உள்ளத்தை தமிழ்மயமாக்கியதால் 1965ல் உலகம் காணாத மொழிப் புரட்சியை தமிழ்மண்ணில் உருவாக்கியது தி.மு..

ஆட்சிக் காலத்தில் தி.மு.. அமர்வதற்கு முன் சரியாக 18 ஆண்டுகள்அறநெறிப் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக சர்வாதிகார நாடுகளில்விடுதலை வீரர்கள் பட்ட கொடுமைகள், வேதனைகளைத் தாங்கிதமிழர்களின் எழுச்சிக்குப் போராடியது தி.மு..

தூய்மையான தி.மு..வின் கொள்கை, கோட்பாடு, இலட்சியங்கள்,திட்டங்கள், செயல்முறைகள், உயர்வான உள்ளப் போக்கு, உழைப்புஆகியவற்றை உள்வாங்கிய தமிழர்கள் தங்களது வளர்ச்சி பாதுகாப்புக் கருதி1967ல் திமுக ஆட்சி அமைக்க ஆதரவளித்து வாழ்த்தினர்.

அண்ணாவின் தலைமையில் அமைந்த ஆட்சி அறிவார்ந்தவழியில் நடை போடத் தொடங்கியது. உலகம் முழுவதும் உள்ளநாடுகளின் நில அமைப்பு, ஆற்றோர நாகரீகங்கள், ஆட்சியமைப்பு,வளர்ச்சி நிலை, வறுமை நிலை, ஆங்காங்கே உள்ள கலை,இலக்கியம், கவிதை, கல்வி, வரலாறு மக்களின் மனநிலை, வாழ்வியற்கோட்பாடுகள் ஆகிய அனைத்தையும் மிகத் துல்லியமாக அறிந்துவைத்திருந்த அறிவாளர் திலகங்களாகத் திகழ்ந்த அண்ணாவும்,தம்பிகளும் தமிழர்களின் நிலையுயர்த்தி நெஞ்சம் மகிழ வைக்க,மணக்க வைக்க என்னென்ன செய்யவேண்டுமெனதிட்டமிட்டுசெயல்படத் தொடங்கினர்.

முதலில் முகமே இல்லாது, முகவரியில்லாதிருந்த இந்தமண்ணிற்கு, தமிழ்நாடு என்று பெயரிட்டு தமிழர்களை பெருமை கொள்ளவைத்தார்கள். தமிழை ஆட்சி மொழியாக்கி தன்மான உணர்வைவெளிப்படுத்தினர்.

தந்தை பெரியாரின் அரவணைப்பில் வளர்ந்து கொள்கை பயின்றுஆற்றல் பெற்ற அண்ணாவும் அவரது தம்பிகளும் சுய மரியாதை திருமணச்சட்டத்தை நிறைவேற்றி அமைச்சரவையை பெரியாருக்குகாணிக்கையாக்கி நெஞ்ச நிறைவு கொண்டனர்.

ஈராண்டுகளே ஆண்ட அண்ணா அவர்கள் எழுச்சி நாள்கொண்டாடினர். தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி, சேலம் இரும்பாலை,சேதுக்கால்வாய் அமைவதற்கும் கோரிக்கைகளை முன் வைத்து தமிழகதொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதோடு தொழில்கள் சிறக்க தொழில்பொருட்காட்சியும் நடத்தினார். இன்றைய சென்னை அண்ணா நகர்கோபுரத்தை சாட்சியுமாக்கினார்.

தமிழ் சிறக்க உலகத் தமிழ் மாநாடு நடத்தி உலகில் எங்குமில்லாததாய்மொழிப் பற்றை உணர்த்தி உலகோரை வியக்க வைத்தார். இயற்கைசெய்த கொடுமையால் இவ்வுலகைப் பிரிந்த அண்ணா இன்றும் நம்நெஞ்சில் வாழ்கிறார்.

அண்ணாவின் தம்பி அய்யாவிடம் வளர்ந்த கலைஞர் அவர்கள்கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன் உழைத்த வேகத்தைக் காட்டிலும் அதிகவேகத்தோடு, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதல் இன்றைய நாள் வரைஅவர் ஆற்றிய அளப்பரிய தொண்டு ஆட்சித் திறன், தமிழர் ஏற்றத்தைஎண்ணிப்பார்த்து எண்ணிப்பார்த்து இரவு பகல் பாராது விழித்திருந்துஉழைத்து, வியத்தகுத் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி தமிழர்குடும்பங்களில் மகிழ்ச்சியை, மன நிறைவை மலையெனக் குவித்தார்.

அவருடைய அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும்சிந்தனை வெளிப்பாடுகளையும் அவர் இட்ட ஆணைகளையும்,அறிவிப்புகளையும் அதில் உள்ளார்ந்து ஊடாடிய உணர்வுகளையும்ஒவ்வொரு கோணத்தில் ஆராய்ந்து பார்த்து விளக்குவதென்றால் ஒருகோடி நூல் வேண்டும். அதில் வரும் ஒவ்வொரு வரியும் தமிழர்உயர்வொன்றே என்று ஒளி வீசி முகம் காட்டும்.

அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் இதுவரையில்லாத வகையில்தமிழர்கள் ஏற்றம் பெற்றனர். வாழ்வைத் துய்க்கும் உணர்வினையும்அதற்கான வளங்களையும் பெற்றனர். பல்லாயிரம் ஆண்டு காலமாக உயிர்பலியிட்டு, பொருட்களை படையலிட்டு உயிருருகி, உடல் வளைந்துஇறைவனை - தெய்வத்தை - கடவுளை பல்வேறு பெயர்களை,நிலைகளையெல்லாம், நினைந்துநெஞ்சம் கனிந்து வணங்கிய நாளெல்லாம்பெற முடியாத நல்வாழ்வை, வளத்தை தலைவர் கலைஞர் ஆட்சியில்இருந்த காலத்தில் பெற்றனர்.பேருவுவகை கொண்டனர். உணவு, உடை,உறைவிடம் மட்டுமின்றி உல்லாச வாழ்வுக்குரிய பொருள் வளத்தைகலைஞர் ஆட்சியின் திட்டங்களாலேயே அடைந்து அகமகிழ்வு கொண்டனர்.

இந்தியாவுக்கே வழிகாட்டும் பல்வேறு முன்னுதாரணத் திட்டங்களைஅறிமுகம் செய்து செயல்படுத்தி சாகாத சாதனைகளை நிறுவி நம்நெஞ்சில் நிறைந்தவர் நம் தலைவர் கலைஞர் அவர்கள்.

பேருந்து நாட்டுடமை, குடிசை மாற்று வாரியம், மகளிர் காவல்நிலையம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மகளிர் 33 விழுக்காடு இடஒதுக்கீடு, மகளிருக்கு சொத்தில் சமபங்கு, கை ரிக்ஷாவை ஒழித்தது,மனிதன் மலம் அள்ளுவதை தடை செய்தது. இலவச மின்சாரம்,இலவசக் கல்வி, அகன்ற சாலைகள், அதைப் பராமரிக்கச் சாலைபணியாளர், ஊர் நலப் பணியாளர், மே தின நினைவுச் சின்னம், மே தினவிடுமுறை, நடுவணரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம்,அரசுப் பணியாளர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு, பெரியார்சமத்துவபுரங்கள், செம்மொழித் தமிழ் என்று இந்தியாவே காணாதஈடும் எடுப்புமற்ற, ஒப்புமையில்லாத திட்டங்களைத் தந்துசெயல்படுத்தித் தமிழர்களை உயர வைத்தார் தலைவர் கலைஞர்அவர்கள். ஆக அண்ணாவும், கலைஞரும் தலைமையேற்று நடத்தியதி.மு.-வும் அதன் அரசும் இதயத் தூய்மையுடன் இந்த நாட்டை வழிநடத்தி வளப்படுத்தியிருக்கிறது.

தமிழ் - தமிழர் - தமிழன உணர்வு - மேம்பாடு என்ற வகையில்உழைப்பு, போராட்டம், உயிர்த் தியாகம் என்று எத்தனையோஇழப்புகளுக்குள்ளான உன்னதமான பொது நலத் தொண்டர்களின் பாசறைக்கோட்டம் தி.மு..

பொய்மை, பொல்லாங்கு, பொதுநலக்கேடு, அடுத்து கெடுக்கும் அற்பபுத்தி, துரோக நெஞ்சில்லாத தூயவர்களின் நேசமிகு பாசத்தோடு நெடுநாள்நடைபோடும் நேர்த்திமிகு பொது நல இயக்கம் தி.மு.. இப்படிப்பட்ட இனியதி.மு..வை இலட்சிய நோக்கில்லாதோரும், இரண்டகப் புத்திகொண்டோரும், தி.மு.கவை திருடிக் கொண்டு தனிக் கட்சி என்றுசெயல்படுகிறார்கள்.

அதுவும் அந்த இயக்கத்தை உருவாக்கி வளர்த்த இதயத்தூய்மையுள்ள அண்ணாவையும் அபகரித்து தி.மு.கவை திருடிப் பெயரிட்டுஒரு கட்சியாக நடத்துகிறார்கள். அதைப்போல இன்னொரு சொல்லையும்சேர்த்துக் கொண்டு .தி.மு.. என்ற கட்சியை வைத்துக் கொண்டுதி.மு.கவுக்கு எதிரானவர்களுடன் கூட்டு வைத்து தி.மு.. கொள்கைகளுக்குஎதிரான இடையூறுகளைச் செய்கிறார்கள்.

சண்டியர்கள், சல்லாபிகள், சகோதரத்துவம் இல்லாதவர்கள்,சாக்காட்டுப் பேர்வழிகள், மக்களை ஏய்ப்பதில் மகிழ்ச்சி கொள்பவர்கள்எல்லாம் தி.மு..-வையும், அண்ணாவையும் பயன்படுத்தி ஆதாயம்பெறுவதை, தன்னலத்திற்கு பயன்படுவதை இந்திய அரசியல் சட்டம்அனுமதிக்கலாகாது. வணிகச் சட்டத்திலேய லேபிள் மோசடி என்பதுமிகப்பெரிய குற்றம். ஒரு நிறுவனத்தின் பெயரை, முகவரியை, விளம்பரமாடலை சற்று திரித்து வெளியிடுவது என்பது குற்றமாகக்கருதப்படுகிறது.

லேபிள் மோசடியைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள்விளக்கமாகவே எழுதியிருக்கிறார். ஒரு வணிக நிறுவனத்தின் பெயரைபயன்படுத்துவதே குற்றமென்றால் ஒரு நாட்டை, இனத்தை வழிநடத்திமேம்படுத்தும் ஒரு இயக்கத்தின் பெயரை திருட அனுமதிக்கலாமா?தகுதியற்றவர்கள் தன்னலத்திற்காக அந்தப் பெயரைப்பயன்படுத்தலாமா? அதுவும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துபெயரை, பல காலம் செயல்பட்டு சிறப்புகள் எய்தி, நிறைந்தஉறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் பெயரை கண்டவர்களெல்லாம்பயன்படுத்த அனுமதிக்கலாமா?


இப்போதெல்லாம் திருடுபோன பொருட்களை மீட்டு உரியவர்களிடம்காவல்துறை ஒப்படைக்கிறது. அதைப்போல் திருடப்பட்ட தி.மு.கவையும்,அண்ணாவையும் திருடர்களிடமிருந்து மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கபொறுப்புள்ளோர் முன் வர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக