வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

அரசியல் களத்தில் எதிரிகளை காணவில்லை

அரசியல் களத்தில் எதிரிகளை காணவில்லை: தொண்டர்கள் மத்தியில் ஜெயலலிதா பேச்சு
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எப்படி காண முடியும் !
இலங்கையில் ஒருத்தன் இப்படித்தான் சொன்னான்
எதிரிகளே இல்லாத அளவுக்கு
சக தோழர்களை
அண்ணன் தம்பிகளை
அரசியலில் மாற்று கருத்து கொண்டோரை
அத்தனை பேரையும் அழித்துவிட்டு
தனி ஒரு மனிதனாக மார் தட்டினான்
எனக்கு அரசியல் எதிரிகளே இல்லை என்று
கர்ச்சித்தான்! கடைசியில் என்ன

வாயிற்று !
அவன் மரணம் ,
ஒரு இன விடுதலைக்கு முற்று புள்ளி வைத்தது ,
அடுத்த கட்டத்துக்கு.
இன விடுதலைக்கு போராட ஆளில்லாமல்
செய்த ஒரு தலைவன் நல்ல தலைவனா?
அரசியல் எதிரிகள் இல்லாமல் செய்வது ஆண்மைக்கு அழகா?
அரசியல் களத்தில் எதிரிகள் இல்லை என்று ஜெயலலிதா
இன்று கொக்கரித்தால் நாளை அ .இ.அ.தி.மு.கா .என்ற ஒரு அமைப்பே இல்லாமல் போகும் என்பதை
திராவிட முன்னேற்ற கழக அடிமட்ட தொண்டனாக
எச்சரிக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக