புதன், 6 ஆகஸ்ட், 2014

கவிதை எழுத ஆசைப் பட்டேன் !



கவிதை எழுத ஆசைப் பட்டேன் !

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.

நீல வானத்தை பற்றி எழுதலாமா ?

கரும்புகையாகிப் போனேனே !

கலங்கியது வானம் !

மழையை கேட்டேன் !

உன்னைப் பற்றி எழுதவா?

மரம் இருந்தால் தானே பொழிவேன் !

  மருண்டது மழை !

மரத்தை கேட்டேன் !

உன்னை எழுதவா?

கெலிகாப்டர் இறங்குவதற்கு

 என்னைத்தானே பழிவாங்குகிறார்கள்!

 பதறியது மரம் !

சரி பச்சை பசேலென வயல் வெளிகளை எழுதலாமே !

  எல்லாம் வீட்டு மனைகளாகி போய்விடனவே

என்றது ஆங்கொர் குரல் !

சேலை கட்டிய பென்களின் அழகைப்

 பற்றியாவது எழுதலாமா யோசித்தேன்

சுடிதாரும் ஜின்ஸ்சும் லெக்கிஸ்சும்  டி+சர்டுமாய் மாய் !

என் கற்பனை வேறுவிதமாய் !

மனைவியை பற்றி 

எழுதி விடுவோம் முடிவெடுத்தேன்!

  அய்யகோ

அவள் என்வீட்டு எஜமானியாகி போனாள் !

மழலைக் குழந்தயை எழுதுவோமா ?

பிறக்கும் போதே குழந்தைக்குள்

 உலகத்தை திணித்து விட்டோமே !

எப்படி கொஞ்சும் மொழி பேசுவான்

நண்பனைப் பற்றி எழுதினால் என்ன ?

ஆயிரம் ருபாய் அவன்

 கேட்டு நான் தராததால்

 நானே அவனுக்கு முதல் எதிரியானேன் !

இறுதியாக மனித நேயத்தை

 எழுதலாம் முடிவெடுத்தேன் !

அது கானாமல் போனதாலே கலங்கி நிற்கிறேன் !

உலகம் கண்ணிர் விட்டது !!!!!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

எப்படி நான் கவிஞனாவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக