வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

அறிய செய்தி

பறவை செய்திகள்...
• பென்குவின் பறவை நீருக்கு அடியில் பறக்கும் ஆற்றல் கொண்டது.
• கொக்கு, நாரை ஆகியவை ஒற்றைக் காலில் நின்று தூங்கும்.
• ராபின் பறவை தூக்கத்திலும் பாடும் இயல்புடையது.
• கிரிபெஸ் என்ற பறவை உணவு கிடைக்காதபோது தன்னுடைய இறகுகளையே உணவாக உண்ணும்.
• நீரை உறிஞ்சிக் குடிக்கும் ஒரே பறவை புறா.
• பறவைகளில் காகமே மிகவும் புத்திசாலியான பறவை.
• மிகச்சிறிய முட்டையிடும் பறவை தேன்சிட்டு.
• மரங்கொத்தியின் அலகும், மண்டை ஓடும் ஒரே எலும்பாலானவை.
-தொகுப்பு: பெ. உலகநாதன், தான்தோன்றிமலை.
தெரியுமா?
• பிரசிடன்சி பேங்க் ஆப் பாம்பே 1840-ஆம் ஆண்டு பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
• ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா 1835-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
• "அமெரிக்கன் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி' என்ற மியூசியம்தான் உலகிலேயே மிகப்பெரியதாகும்.
• "மின்சார ரயிலை' இயக்க மொத்தம் பதினாராயிரம் வோல்ட் மின்சாரம் தேவைப்படுகிறது.
• உலகிலேயே மிகப்பெரிய அணைக்கட்டு "சிந்து' ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள "டர்பெலா டேம்'தான். இது பாகிஸ்தானிலுள்ளது.
• 1883-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "இராசவிருத்தம்போதினி' இதழ்தான் தமிழின் முதல் மாதம் "மும்முறை' இதழாகும்.
• 1694-ஆம் ஆண்டிலேயே "பேங்க் ஆப் இங்கிலாந்து' நிறுவப்பட்டுவிட்டது.
• 1812-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "மாசத்தின் சரிதை' என்ற இதழ்தான் - தமிழின் முதல் மாத இதழாகும்.
• 1841-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "ஜனசிநேகிதன்' என்ற இதழ்தான் தமிழின் முதல் மாதம் இருமுறை இதழாகும்.
• 1883-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "சுதேசமித்திரன்'தான் தமிழின் முதல் வாரம் இருமுறை இதழாகும்.
• தமிழில் முதல் குழந்தைப் பத்திரிகை 1840-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "பால தீபிகை' என்ற சஞ்சிகையாகும்.
• தமிழகத்தின் முதல் தமிழ் நாளிதழ் 1856-ஆம் ஆண்டு வெளிவந்த "தின வர்த்தமானி' எனும் இதழாகும்.
• "லங்காவீரன் சூத்ரா' என்ற மதநூல்தான் உலகிலேயே முழுவதும் இரத்தத்தால் எழுதப்பட்ட புத்தகமாகும்.

நவரத்தினங்கள்!

அக்பர் அரசரவையில் பல துறைகளிலும் புகழ்பெற்ற ஒன்பது அறிஞர்கள் இருந்தார்கள். நவரத்தினங்கள் எனக் குறிப்பிடப்பட்ட அவர்கள் : 1. பீர்பால் 2. மான்சிங் 3. ரஹீம் 4. தோடர்மால் 5. முல்லாதோபியாஜா 6. அபுல் பஸல் 7. தான்சேன் 8. ஃபைஜி 9. ஹசிம் ஹுமாம் ஆகியோர்.

இலுப்பைப்பூ!
இலுப்பைப்பூ மலர்வதற்குப் பத்து வருடங்கள் ஆகும். ஒரு மரத்தில் சுமார் 100 கிலோ பூ கிடைக்கும்.
இது ரசமுள்ளதாகவும் இனிப்பாகவும் இருக்கும். இதில் 60 சதவீதம் சர்க்கரை உள்ளது.
"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை' என்று கூறுவது இதனால்தான்!!

முதல் பெருமை!
வயலின் மேல்நாட்டு இசைக்கருவி. இப்போது இந்தியாவில் கச்சேரிகளில் முக்கிய துணைக் கருவியாக இருக்கின்றது. முதன்முதலில் வயலின் இசையைப் பயின்று, அதில் கர்நாடக இசையை வாசிக்க முடியும் என்பதைக் காட்டியவர் பால ஸ்வாமி தீட்சிதர்.
-தொகுப்பு: குடந்தை ராஜகோபால், சேலம்.

"ஏழிளந்தமிழ்'
1. ஆத்திசூடி
- ஒளவையார்
2. கொன்றை
வேந்தன்
- ஒளவையார்
3. மூதுரை
- ஒளவையார்
4. நல்வழி
- ஒளவையார்
5. நறுந்தொகை
- அதிவீரராம
பாண்டியர்
6. நன்னெறி
- சிவப்பிரகாசர்
7. உலக நீதி
- உலகநாதர்
இவை ஏழிளந்தமிழ் நூல்கள் ஆகும். இவற்றை நம் முன்னோர்கள் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் முறையாகப் பயின்றனர்.
இவற்றை சிறுவயதில் படிப்பதன், எழுதுவதன் மூலம் நன்னெறிகளை அறிவதுடன், தமிழ்மொழியைப் பிழையறப் பேசவும் எழுதவும் பயிற்சி பெற்றனர்.
-கோவி.ராதாகிருஷ்ணன், அரக்கோணம்.

ஒட்டக நூலகம்!
ஈரான் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் காசிம் இஸ்மாயில் என்ற மன்னர் இருந்தார். சிறந்த சிந்தனையாளர். போரிலும் வல்லவர். அவர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார்.
அவர் எப்பொழுது வெளியூர்ப் பயணம் சென்றாலும் அந்தப் புத்தகங்களை 342 ஒட்டகங்களின் மீது ஏற்றிக்கொண்டு செல்வார். அகர வரிசைப்படி புத்தகங்கள் ஏற்றப்பட்டிருக்கும். அவருக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் கையை உயர்த்துவார். உடனே ஒட்டக வீரர் வந்து, என்ன புத்தகம் தேவை என்பதைக் கேட்டறிந்து, கொண்டு வந்து கொடுப்பார்.
-செவல்குளம் "ஆச்சா'

அரசன், அரசி!
இசைக்கருவிகளின் அரசன் - வயலின்
கடல்களின் அரசி - பசிபிக் பெருங்கடல்
பறவைகளின் அரசன் - கழுகு
அரபிக் கடலின் அரசி - கொச்சி
மரங்களின் அரசன் - தேக்கு
கடற்கரையின் அரசி - கோவா
உலோகங்களின் அரசன் - தங்கம்
உலோகங்களின் அரசி - வெள்ளி
ரசாயனங்களின் அரசன் - கந்தகம்
மருந்துகளின் ராணி - பென்சிலின்
-பெ.உலகநாதன்,
தான்தோன்றிமலை.

சாதனைக் காலம்!

• தாஜ்மஹால் கட்டி முடிக்க உஸ்தாத் இசா என்ற சிற்பிக்கு 22 ஆண்டுகள் ஆயின.
• திருமலை நாயக்கர் மஹால் கட்டி முடிக்க 23 ஆண்டுகள் ஆயின.
• மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கட்டி முடிக்க 120 ஆண்டுகள் ஆயின.
• பைசா கோபுரம் கட்டி முடிக்க 174 ஆண்டுகள் ஆயின.
• மோனாலிசா ஓவியம் வரைய டாவின்சிக்கு 4 ஆண்டுகள் ஆயின.
• வால்ட் டிஸ்னி 13 ஆண்டுகால முயற்சிக்குப் பின்னரே கார்ட்டூன் படங்களைத் தயாரித்தார்.
-நெ.இராமன், சென்னை.

"காஷ்மீர்'
வேத காலத்தில் மத்ரம், குக்ரம் எனக் குறிப்பிடப்படும் இடம்தான் இன்றைய காஷ்மீர்! புராண காலத்தில் இதற்கு த்விகர்த்தம் என்று பெயர்.
இரண்டு ஏரிகள் கொண்ட பிரதேசம் என்பது இதற்குப் பொருள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக