ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

வாழ்த்து விளக்கம்

விநாயகர் சதிர்த்தி விழாவிற்கு வாழ்த்து செய்தி வெளியிட்ட நம் தளபதி இணையதளம் -விளக்கம் சொன்ன தளபதி !
நான் யாருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லவும் இல்லை பதிவு போடவும் இல்லை !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இது ஒன்றும் மிகப்பெரிய செய்தி அல்ல
தளபதி விளக்கம் சொல்லிவிட்டார் அத்துடன்
முடிவுக்கு வருவது நலம் .ஆனால் சிலர்
’பாருங்கள் திராவிடமென்றும்’ ’பாருங்கள் தளபதி என்றும்: பதிவிடுவது சற்று சங்கடமாக உள்ளது
இதே தளபதி கிறிஸ்மஸ் வாழ்த்து சொன்னால் ஏற்றுகொள்கிறீர்கள் இதேதளபதி ரம்ஜான் வாழ்த்து சொன்னா ஏற்று கொள்கிறீர்கள் ஒரு வேலை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
சொன்னால் என்ன தவறு கிருஸ்த்துவமக்களுக்கு வாழ்த்து சொல்வதுபோல் முஸ்ஸிம் மக்களுக்கு வாழ்த்து சொல்வதுபோல் இந்துகளுக்கும் சொன்னால் என்ன தவறு இருக்கமுடியும் இந்துகளுக்கு வாழ்த்து சொன்னால் உடனே கொள்கையை விட்டுவிட்டார் என்று அர்த்தமா?
எல்லா மக்களும் நமக்கு வேண்டுமே?ஒருவருக்கு வாழ்த்து சொல்லி ஒருவருக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது
நாகரிகம் அல்லவே ?கழக தொண்டர்களை பாருங்கள்
80 சதவிகிதம் இந்துகளாகவே இருக்கிறார்கள்
எல்லோரும் இறை நம்பிக்கையாளராக இருக்கிறார்கள்
ஒருவர் இயேசுவை நம்புகிறார்கள் இன்னொருவர் அல்லாவை நம்புகிறார்கள் மற்றொருவர் கனபதியை நம்பக்கூடாதா? நாம் மத நம்பிக்கை இல்லாதவராக இருக்கலாம் ஆனால் மத நம்பிக்கை உள்ளவருக்கு ஏன் வாழ்த்து சொல்லகூடாது என்பதே என்கேள்வி? தந்தை பெரியார் அவர்கள் தமிழறிஞர் திரு.வி. க அவர்கள் தன் வீட்டுக்கு வந்தபோது காலையில் விபூதியை எடுத்துகொடுத்து பூசிக்கொள்ளுங்கள் என்றாராமே ?
அப்படியானால் அவர் பகுத்தறி கொள்கைகளை பரப்ப தகுதி இல்லாதவரா ?நண்பர்களேபெரியாரை நன்றாக படியுங்கள்
நீங்கள் பகுதறிவுடையவராக இருங்கள் தவறில்லை
ஆனால் மற்றவர்கள் சுய நலத்தில் தலையிடாதீர்கள்
நமக்கு மதம் எதிரி அல்ல மதத்தில் உள்ள முட நம்பிக்கையே நம் எதிரி என்பதை புரிந்து கொள்ளுங்கள்
இனைய தளத்தில் எழுத இடம் கிடைக்கிறது நிறைய நண்பர்கள் லைக்செய்கிறார்கள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதாதீர்கள் நீங்கள் கொல்லைக்கு இருக்க போகிறேன் என்று பதிவு செய்தால் கூட 500பேர் லைக் செய்கிறான் தண்ணிகொண்டு வரவா அண்ணா என்று பின்னுட்டம் இடுகிறான் அந்த வகையில் தான் :”பாருங்கள் திராவிடத்தை” என்ற பதிவை அப்பாவி தொண்டன் நான் எடுத்துகொண்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக