வாழ்க்கை ஆனந்தமாக அமைய
1.
உங்கள் வாழ்கையின் சந்தோஷங்களை வரிசைப்படுத்துங்கள் .பெரும்பாலும் அவை
குழைந்தைகள் , வாழ்க்கைத் துணை ,நல்ல வேலை , ஆன்மிகம் ,உடல்நலம் என நீளும்
. அதன் அடிப்படையில் உங்கள் நேரத்தையும் கவனைத்தையும் செலவிடுங்கள் .2. எவற்றுக்கெல்லாம் தேவையில்லாமல் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை பட்டியலிடுங்கள். அவற்றை ஒதுக்குங்கள் அல்லது சுருக்குங்கள். தொலைகாட்சி , கையடக்க தொலைபேசிகள் முதலியன சில உதாரணங்கள்.
3. உங்கள் பணிகளைத் திட்டமிட்டுச் செய்யுங்கள். குடும்பத்துக்கான நேரத்தில் அலுவலகமும், அலுவலக நேரத்தில் குடும்பமும் தலையிட வேண்டாம்.
4. வாரக் கடைசியில், நீங்கள் உணர்ந்த சந்தோஷ தருணங்கள், மற்றவர்களுடன் சேர்ந்து சிரித்த நிமிடங்கள் ஆகியவற்றை பட்டியல் போடுங்கள் . இது, உங்கள் வாழ்க்கை எந்தளவுக்கு ஆனந்தமாக கழிகிறது என்பதை அறிவதற்கான சுய பரிசோதனை.
5. நேரம் தவறாமை , மிக முக்கியம். காலை முதல் இரவு வரை அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பது ………………… பதற்றம் ,பரபரப்பு முதலியவற்றை நம் வாழ்வில் இருந்து விரட்டும். வேலைகளுக்கு செல்லும் பெண்கள், அடுத்த நாளுக்கான உடையில் இருந்து தங்கள் இருசக்கர வாகனம் வரி சரி செய்தால் மேற்பார்வை எல்லாம் முதல் நாள் இரவே முடித்து விட வேண்டியது நல்லது .
6. மின்-அஞ்சல் பார்க்க, கடிதம் எழுதுவதெல்லாம் காலை, இரவு என ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு நேரம் வசதியாக இருக்கும். உங்களுக்கான அந்த நேரத்தைக் கண்டுபிடித்து ,அந்த வேலைகளை அந்த நேரத்துக்கு ஒதுக்குங்கள்.
7. டையரி எழுதுங்கள் . வாரம்,மாதம், வருட இறுதிகளில் உங்கள் டையரியை புரட்டுங்கள். உங்களது இலக்குகளையும், அதற்கு நீங்கள் கொடுத்துள்ள உழைப்பையும் அறியலாம் .
8. நம்பிக்கை, குடும்ப வாழ்க்கையின் அஸ்தி வாரம். மற்றவர்கள் உங்கள் துணை மீது சொல்லும் குற்றச்சாட்டுகளைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், அவரிடமே நேரடியாக கேட்டு விடுங்கள். அதேபோல உங்கள் துணியை யாரிடமும் விட்டுக் கொடுத்துப் பேசாதீர்கள் .
9. உங்கள் துணைக்கு நீங்கள் என்ன வாக்குறுதி கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவதில் உறுதியா இருங்கள். நிறை வேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பதே நன்று .
10. வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள் . முடிவுகள் எடுக்கும் போது கலந்துரையாடுங்கள் . ஒருவருக்கொருவர் முக்கியத்துவம் கொடுப்பது, ஆரோக்கியமான வாழ்க்கையின் அடையாளம்.
11. மனம் விட்டுப் பேசுங்கள் , அதற்காக தேவையில்லாத பழைய சோகக் கதைகளை கிண்டி கிளறாமல், ஆரோக்கியமான உறவுக்கு அழைத்துச் செல்லும் சந்தொஷமான விஷயங்களைப் பேசுங்கள்.
12. உங்கள் விருப்பத்துக்கு தக்கபடி வாழ்க்கைத் துணையை வளைக்கப் பார்ப்பதுதான் பல் வேறு சிக்கல்களுக்கும் காரணமாகிவிடுகிறது. எனவே, அவர் களை அவர்களாகவே இருக்க விடுங்கள், அப்படியே நேசியுங்கள். ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லை தானே?!
13. சின்னச் சின்ன அன்பில்தான் ஜீவன் இருக்கிறது. எனவே, அவரின் பிறந்த நாள் , திருமண நாள் போன்றவற்றை நினைவில் வைத்து வாழ்த்துங்கள்.உங்கள் வாழ்க்கைத் துணையின் பெற்றோரின் சிறப்பு நாட்களையும் நினைவில் வைக்க முடிந்தால், அசத்தி விட்டீர்கள் என்று அர்த்தம் .
14. வீட்டு வேலை என்பது முழுக்க முழுக்க பெண்களின் பகுதி என சோம்பேறித்தனமாக ஒதுங்காமல், படுக்கையை சுத்தம் செய்வது , மாற்றுவது என்று பலவற்றை கணவரும் பகிர்ந்து கொள்ளலாம்.
15. சதுரங்கம் , உள்ளக விளையாட்டு சிலவற்றை கணவர், மனைவி, மாமியார், மகன், மகள் என குடும்பமாக அமர்ந்து விளையாடிப் பாருங்கள். இடைவெளிகள் குறையும் ….. ஆனந்தம் அதிகரிக்கும் .
16. திருமணமாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டாலே சுவார்ஷியங்கள் எல்லாம் காணாமல் போய்விடுகிறது. இது மிக மிகத் தவறு .அடிக்கடி வாழ்த்து அட்டைகள் வழங்குவது, வெளியே இரவு உணவு விடுதிக்கு செல்வது , இருவருமாக திரைப்படம் பார்க்க செல்வது என அன்புக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டே இருங்கள். செய்வது விரும்பிச் செய்யுங்கள் .
17. தாம்பத்திய உறவு என்பது ஆரோக்கியமான குடும்ப வாழ்கையின் சாவியைப் போன்றது . எந்தக் காரணம் கொண்டும் சாவியைத் தொலைக்காதீர்கள்.
18. அவ்வப்போது பரிசுகள், பாராட்டுகள், வழங்குங்கள்.சின்னச் சின்ன அங்கீகாரங்களிலும், பாராட்டுகளிலும் வாழ்கையின் சுவாரிஷ்யம் பல மடங்கு அதிகரிக்கும் .
19. ஒருவர் பேசிக்கொண்டே இருக்க, இன்னொருவர் கேட்டுக்கொண்டே இருப்பது ஆரோகியமான உரையாடல் அல்ல. எனவே, நிறைய பேசுங்கள்……. நிறைய கேளுங்கள். இரண்டும் முக்கியம்.
20. உங்கள் துணைக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை அறிந்து வைத்திருங்கள். நீங்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பையும் அக்கறையையும் அவருக்கு உணர்த்தும் வழிகள் இவை.
21. மன்னிப்புக் கேட்பது, கொடுப்பது…….. இரண்டும் சகஜமாக இருக்கட்டும். ‘எப்படி நான் பொய் மன்னிப்பு கேட்பது’ எனும் வீண் ஈகோவை விட்டு ஒழியுங்கள். அதேபோல் மன்னிப்பு கேட்டால் வினாடி கூட தாமதிக்காமல் மன்னித்துவிடுங்கள் . உடனே அந்தப் பிழையாய் மறந்தும் விடுங்கள்.
22. ஒருவர் கோபமாக இருந்தால் அடுத்த நபர் கொஞ்சம் தணிந்து போகவேண்டும் . சண்டைக்கு சண்டை போட்டால் குடும்ப வாழ்க்கை அதோகதிதான்.
23. கடந்து சென்ற கசப்பான நிகழ்ச்சிகளை , உரையாடல்களை ‘குத்திக் காட்டிப் பேசாதீர்கள்’. இவை ஆரோகியமான உரையாடல்களுக்குக் கொள்ளி வைக்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக