மிசா – சிறை அனுபவம்:
1975 – இந்திய ஜனநாயகத்தின் மீது இருள் படர்ந்த ஆண்டு. அன்றைய இந்தியப் பிரதமரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான திருமதி. இந்திரா காந்தி, இந்திய தேசத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி, மக்களின் உரிமைகளை பறித்து, வன்முறையை கட்டவிழ்த்து விட்ட ஆண்டு. நன்மையை விளைவிக்கும் உண்மையான எண்ணம் கொண்டது மட்டுமே அரசியல் தலைமை பண்பு என்ற நிலை, இனி இருக்கப் போவதில்லை எனும் அளவுக்கு ஒழுங்கற்று போயிருந்த அரசியல் உலகத்துக்குள், இளைஞரான மு.க.ஸ்டாலின் அடியெடுத்து வைத்தார்.திருமதி. இந்திரா காந்தியின் அரசு நெருக்கடியில் சிக்கியதால், ஒட்டுமொத்த தேசமும் கடுமையான நிலையை நோக்கி சென்று கொண்டு இருப்பதை அவர் உணர்த்து கொண்டார். இந்திய ஜனநாயக அமைப்பு முற்றிலுமாக தோல்வியடைந்துப் போயிருந்ததை மட்டும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. திருமதி. இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி குறித்து அலகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “ஆவணங்கள் செல்லத்தக்கவை”, என நீதிபதி ஜக்மோஹன்லால் சின்ஹா அறிவித்து, அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட இந்திராவுக்கு தடை விதித்து உத்திரவிட்டது, இந்திய அரசியலில் எதிர்பாராதத் திருப்பத்தை ஏற்படுத்தி, தேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது அமைச்சரவையின் எதிர்ப்புக் குரலை முறியடிக்க, சாதுவானக் குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அஹமத் அவர்களின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, “உள் இடையூறுகளால் இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது “, எனக் குறிப்பிட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு ஆர்டிக்கல் 352(1) ன் கீழ், அவசர நிலையை பிரகனப்படுத்த திருமதி. காந்தி முடிவெடுத்தார்
இந்திய தேசத்தை தனது தனிப்பட்ட சொத்தாகக் கருதிய, திருமதி.இந்திரா காந்தியின் சர்வாதிகார அணுகுமுறையில் வெளிப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் குடியரசுத் தலைவரின் ஆதரவை பெற்றன. 1975ம் ஆண்டு ஜூன் மாதம், 25ம் நாள் நள்ளிரவில் ” அவசர நிலை ” பிரகடனப்படுத்தப் பட்டு, 26-06-1975 அன்று, ஊமையான – இயக்கமற்ற – பயந்து போயிருந்த, அதிருப்தி அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றது. அடுத்த சில தினங்களில், ஜனநாயகம், பேச்சுரிமை, அதிருப்தி மற்றும் அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்கு, நாடு முழுவதும் கட்டுப்பாடு ஏற்படுத்தும் வகையிலான ஏராளமான விதிமுறைகளுக்கு அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்பட்டன. ” அவசர நிலை அமுல்படுத்தப்பட்ட நிலையிலும், தனிமனித பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி உள்ளது”, எனக் குறைந்தது 9 உயர்நீதி மன்றங்கள் குறிப்பிட்டன. அவற்றையெல்லாம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாநிலங்களில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும், தனிப்பட்ட சுதந்திரங்களுக்கு தடை விதிக்கவும், குடும்பங்களின் உரிமையை பறித்து அவர்களிடம் இருந்து குடும்ப உறுப்பினர்களை மறைக்கவும் முழு அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. மொத்தத்தில் இந்தியாவின் அரசியலமைப்பின் அடிப்படைகள் அனைத்தும் அவமானப்படுத்தப்பட்டன. பல அரசியல் தலைவர்கள் தலைமறைவு ஆனார்கள்.
திருமதி. காந்தியின் அவசரம், குரலை அடக்க கழுத்தை நெறித்து – உரிமைகளை தூக்கு மேடைகளுக்குத் தள்ளியது.
தென்னகத்தில், ஜனநாயகத்துக்கு சிறிதளவாவது ஒளி வழங்கும் விளக்காக திமுக திகழ்ந்தது. தமிழகத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் சமூக மற்றும் மொழிப் போராட்டங்கள் மிகப் பெரிய எதிர்ப்பாகப் பார்க்கப்பட்டன. மேலும் ஜனதா கட்சியின் தலைமையை ஆதரித்ததால், அவர் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கருதப்பட்டார்.
நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்டதும், தலைவர் கலைஞரின் குரலை அடக்கும் வகையிலும், அதிகாரத்தை பறிக்கும் வகையிலும், அவரது தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது.
திறமையான தலைவர்களின் ஆற்றலை குறைக்கும் வகையில் பல்வேறு தந்திரங்களை அப்போது திருமதி.காந்தி திறமையாக செயல்படுத்தத் தொடங்கினார் – அவற்றில், பிள்ளைகள் வலியால் துடிப்பதை பெற்றவர்கள் நேரில் பார்த்து அனுபவிக்கும்படி செய்வது, மிகவும் பலனளிக்கக் கூடியது என அவருக்கு நன்றாகத் தெரிந்து இருந்தது. தமிழகத்தில் அவசர நிலை சட்டங்களை செயல்படுத்த முயன்றவர்களின் பார்வைக்கு, மு.க.ஸ்டாலின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாகத் தெரிந்தார். அவர் மீது விழக்கூடிய ஒவ்வொரு அடியும், தமிழகத்தை சேர்ந்த அதிருப்தி தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் முதுகெலும்பை பயத்தில் உறையச் செய்யும் என எதிர்பார்த்தனர்.
31-01-1976 அன்று, மு.க.ஸ்டாலினை கைது செய்யும் நோக்கத்துடன், காவல்துறை உயரதிகாரிகள் கோபாலபுரத்தில் உள்ள தலைவர் கலைஞரின் இல்லத்துக்கு வந்தனர், உள்நாட்டு பராமரிப்பு சட்டத்தின் (மிசா) கீழ் அவரை கைது செய்ய வந்துள்ளதாக ஸ்டாலினின் தந்தையும், முன்னாள் முதல்வருமான கலைஞரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் தலைவர் கலைஞர் அவர்கள், மு.க.ஸ்டாலின் வீட்டில் இல்லை என்றும் மதுராந்தகத்தில் நடைபெறும் கழகப் பிரச்சார நாடகத்தில் பங்கேற்கச் சென்று உள்ளதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மறுநாள் மீண்டும் மு.க.ஸ்டாலினை கைது செய்து சென்னை மத்திய சிறைக்கு கொண்டு செல்வதற்காக, அவரது இல்லத்துக்கு போலீசார் வந்தனர்.
கண்களில் நீர் வழிந்த தனது இளம் மனைவி உடன் வர, பெற்றோரிடம் இருந்து விடைபெறுவதற்காக சென்ற மு.க.ஸ்டாலினிடம், தலைவர் கலைஞர் அவர்கள், ” இந்திரா காந்தி உன்னை மிகப் பெரிய அரசியல் தலைவராக உருவாக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார், எனவே எந்த மோசமான நிலைமையையும் எதிர்கொள்ளத் தயாராக இரு, துணிச்சலுடன் இதை ஏற்றுக் கொள் “, எனத் தெரிவித்தார். அவரது தீர்க்க தரிசனம் மிகுந்த வார்த்தைகள், அமைதியும், அடக்கமும் நிறைந்த ஸ்டாலின் அவர்களுக்குள் மிகுந்த தைரியத்தையும், உறுதியையும் ஏற்படுத்தின.
சிறை சாலைக்குள் ஏற்கனவே அடைபட்டு, மோசமான, சுத்தம் சிறிதும் இல்லாத அருவருப்பான அறைகளுக்குள் வாடிக் கொண்டு இருக்கும் ஏராளமான திமுகவினரை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவதா அல்லது நம்பிக்கையை இழந்து அப்படிப்பட்ட சூழ்நிலையில் தவிக்கும் அவர்களை கண்டு வருந்துவதா, என மு.க.ஸ்டாலினுக்கு புரியவில்லை. ” அவர்களில் சிலர் தெரிந்த முகங்களாக இருந்தது, அந்த நேரத்துக்கு ஆறுதல் தருவதாக இருந்தது “, எனப் பிறகு அவர் நினைவு கூர்ந்தார். சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி, நீல நாராயணன் மற்றும் வி.எஸ்.கோவிந்தராஜன் ஆகியோர் அருகே இருப்பது, அங்கு ஏற்பட்டு இருந்த நிச்சயமற்ற தன்மை, ஏற்படுத்திய அச்ச உணர்வை சிதறடிக்க உதவியாக இருந்தது.
இந்த உணர்வு நீண்ட நேரம் நிலைத்து இருக்கவில்லை. கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த, சுகாதாரமற்ற அந்த சிறையின் சுவர்களும், தரையும் மோசமாக இருந்தன. சிறுநீர் கழிப்பதற்கு உடைந்த ஒரு மண் பானையை பயன்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. திடமான சிந்தனை கொண்டவரையும் சோர்வடையச் செய்யும் வகையில், உப்பு அதிகமாக போடப்பட்ட மிகவும் காரமான உணவு காலை உணவாக வழங்கப்பட்டது. சிறையில் மு.க. ஸ்டாலினுடன் இருந்த பலரின் உணர்வுகளை அந்த உணவு பாதித்த போதும், மு.க.ஸ்டாலினிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அந்த சூழலை மிகுந்த விருப்பத்துடன் அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால் சிறை சாலையின் விதவிதமான சித்திரவதைகளை தாங்கிக் கொள்ள மட்டும் அவர், தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கவில்லை.
அதனை தொடர்ந்த இரவில், மற்றவர்களிடம் இருந்து பிரித்து, தனிமைபடுத்தப்பட்டு, சிறை மேற்பார்வையாளர்கள் காயம் மற்றும் சுருளிராஜன் ஆகியோரால் மனித தன்மையே இல்லாமல், மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்டார். தனக்கு நேர்ந்த சித்திரவதைகள் குறித்து சொல்ல அவர் உயிரோடு இருக்கக்கூடும் என்பதை கூட அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இளம் வயதுடைய மு.க.ஸ்டாலின் மிக மோசமாகத் தாக்கப்படுவதை கண்டு சகிக்க முடியாத சிட்டிபாபு, முன்னோக்கி பாய்ந்து அவர் மீது விழுந்த சில அடிகளை தான் ஏற்றுக் கொண்டார். அந்த அடிகள் சிட்டிபாபுவின் மரணத்துக்கு காரணமாகின. அந்த இரவில் நேர்ந்த வன்முறைக்கு பிறகு அங்கு அழுதபடியும், குடிக்க நீர் கேட்டு முனகியபடியும் கிடந்த சக கைதிகளுக்கு ஸ்டாலின் பணிவிடைகள் செய்து, அவர்களின் வலி – வேதனைகள் குறைய உதவினார்.
அடுத்த இரு தினங்களில் அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டு, தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களில் சிட்டிபாபுவின் உடல்நிலை மோசமடைந்து, அவர் காலமானாதை அறிந்து வருத்தமடைந்த மு.க.ஸ்டாலினுக்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. இந்த நிகழ்வு மு.க.ஸ்டாலினின் மனதில் நிரந்தர வடுவை ஏற்படுத்தியது. இந்த அற்ப வாழ்வை தெளிவாகப் புரிந்து கொண்ட மு.க.ஸ்டாலின், தனது கொள்கைக்காக ஒருவர் போராடி உயிர் விடுவதன் மதிப்பை முழுதாகப் புரிந்து கொண்டார். தனிமை சிறையில் இருந்த குறுகிய காலம், அசாத்தியமான அமைதி, உண்மையை எதிர்கொள்வதில் எஃகு போன்ற உறுதியான மனத்துணிவு ஆகியவற்றை அவருக்குள் உருவாக்கியது. நீதியின் மீது இருள் படர்ந்த அந்த சூழ்நிலையில், ஜனநாயகம் படுகொலையான அந்த நேரத்தில், தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவனாக அவர் உயிர்த்தெழுந்தார்.
01-03-1976 அன்று தனது மகனை பார்ப்பதற்காகத் தலைவர் கலைஞர் சிறை சாலைக்கு வந்தார். சிறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் எதையும் அவர் தன் தந்தையிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் ஏராளமான புரட்சிகளை நிகழ்த்தி அதன் பின்விளைவுகளை நன்கு அனுபவித்து அறிந்திருந்த அவரது தந்தை, கைகளை மறைக்கும் வகையில் தனது மகன் அணிந்திருந்த முழுக்கை சட்டையையும், தைரியம் நிறைந்த அவரது புன்னகையையும் கண்டதும், அங்கு நிகழ்ந்தவற்றை நன்றாகப் புரிந்து கொண்டார். சிறையில் இருந்து கனத்த இதயத்துடன் திரும்புகையில், திராவிட முன்னேற்றக் கழகம் வீரம் செறிந்த மற்றொரு மகனை உருவாக்கி கொண்டு இருப்பதை உணர்ந்து பெருமை கொண்டார்.
நீண்டு, நெடிந்த தனது 12 மாதகால சிறை வாழ்க்கையை, புத்தகங்கள் படிப்பதிலும், கழகத்தினரின் விவாதங்களில் உற்சாகத்துடன் பங்கேற்பதிலும் செலவழித்து, அதை பயனுள்ளதாக மு.க.ஸ்டாலின் மாற்றிக் கொண்டார். 1976, ஏப்ரல் மாதம் காவல்துறை பாதுகாப்பிலேயே பல்கலை கழகத்துக்குச் சென்று, தனது இளங்கலை தேர்வுகளை எழுதி முடித்தார்.
1977ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி, அவசர நிலை சட்டம் 352(1) ன் கீழ் அமுல்படுத்தப்பட்ட மிசா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 352(2) ன் கீழ் அவசர நிலையை ரத்து செய்தார். பல கடுமையான சட்டவிதிகள் திரும்பப் பெறப்பட்டதுடன், முக்கிய அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்படுவது தொடங்கியது. 23-01-2977 அன்று மு.க.ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டார்.
1977 மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருமதி.காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு, ஜனதா கட்சியின் தலைவர் மொரார்ஜி தேசாய் பிரதமராக பொறுப்பேற்றார். புதிய அரசு அமைந்ததும், சிறைகளில் நடத்தப்பட்ட கொடுமைகள் மற்றும் நீதி பறிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்த விசாரணைகள் தொடங்கியது. இஸ்மாயில் கமிஷன் முன்பு ஆஜரான மு.க.ஸ்டாலின், இருட்டு அறைகளில் நிகழ்ந்தவை, பூட்ஸ் கால்களின் உதைகள், இடைவிடாமல் கன்னத்தில் அறைந்த சம்பவங்கள் மற்றும் மரணத் தாக்குதல்கள் குறித்து சாட்சியம் அளித்தார். வேப்பெண்ணெய் கலந்த உணவு, கற்கள் நிறைந்த இட்லிகள், உப்பான கஞ்சி, தட்டுகள் இல்லாததால் ஒருவர் உணவு சாப்பிட்ட தட்டையே சுழற்சி முறையில் மற்றவர்களும் பயன்படுத்திய நிலை போன்ற தனது சிறை அனுபவங்களை பட்டியலிட்டார்.
காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலால் சிட்டிபாபு மற்றும் மதுரை பாலகிருஷ்ணன் ஆகிய கழகத்தினர் இருவரின் இன்னுயிர்கள் பறிபோனது குறித்த அவரது சாட்சியத்தை, கமிஷன் பதிவு செய்து கொண்டது. மற்ற மிசா கைதிகளின் வாக்குமூலங்கள், சுதந்திர இந்திய தேசத்தில், மிசா சட்டத்தின் கீழ் மனித உரிமைகள் பறிக்கப்பட்டதையும், மனிதத் தன்மையின்றி நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களையும், வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன.
சிறை அனுபவம் மு.க.ஸ்டாலினை முழுதாக மாற்றியது மட்டுமல்லாமல், ஜனநாயகம் என்று கூறப்படும் இந்த அமைப்பில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, உரிய மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்ற அவரது தீர்மானத்தை மேலும் உறுதி படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக