ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

பட்டி மன்றம்

இன்று காலை காலை பத்து மணிக்கு
மும்பை முலுண்ட் பகுதியில்
வெற்றிகரமாக நடந்து வரும் பாரம்பரியமிக்க
வாணி வித்தியாலயா பள்ளியின்
60 வது ஆண்டு விழாவை முண்னிட்டு
பள்ளி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில்
மாபெரும் பட்டிமன்றம் நடை பெற்றது
பட்டி மன்ற தலைப்பு !
மனித வாழ்கையின் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணம்,
கல்வியா ? செல்வமா?
பட்டிமன்ற நடுவர் வெ. பாலு அவர்கள்
(முன்னால் தமிழ்ச்சங்கத்தலைவர் )
கல்வியே என்ற தலைப்பில்,
காமராஜர் காவியம் எழுதி புகழ்பெற்ற
கவிஞர்.செந்தூர் நாகராஜன்
கவிஞர் ரானி முத்துராஜ்
க. ஆறுமுகப்பாண்டியன் (நான்)
செல்வமே என்ற தலைப்பில்
திரு. வெங்கட் ராமன் .
திரு. மிக்கேல் அந்தோனி' .
திருமதி புவனா வெங்கட்.
ஆகியோர் வாதிட்டு பேசினார்கள் !
அற்புதமான பட்டிமன்றம் !
அற்புதமான அரங்கு!
அற்புதமான நிர்வாகிகள் !
நன்றாக ரசிக்கத்தெரிந்த ரசிகர்கள்!
ஒரு நபர்கூட நிகழ்ச்சி முடியும் வரை எழுந்து வெளியில் செல்ல வில்லை!
கை தட்டி ரசித்த விதம்
ரசிகர்கள் சிரித்து மகிழ்ந்த அந்த காட்சி
அப்பாடா இன்னும் சொல்லலாம்
நிகழ்ச்சிச்சியை பற்றி!
பேச்சாளர்கள் அனைவருமே தங்கள் கருத்தை வலியுருத்தி நகைச்சுவையாக பேசி ரசிகர்களை மகிழ்வித்தார்கள் ! கடைசியாக ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு மாபெரும் பட்டி மன்றமே !!!
நன்றி வாணி வித்தியாலயாவுக்கு !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக