தளபதி அவர்களின் பொன்னெழுத்துக்களில் சில துளிகள்:
சிந்தனையொளி
உங்கள் சிந்தனையே நீங்கள்.
உங்கள் அனுபவமே உங்கள் சிந்தனை.
உங்கள் சிந்தனையால் உருவானதே உங்கள் அனுபவம் இதுவொரு இடைவிடா சுழற்சி.
உங்கள் சிந்தனையே உங்கள் வாழ்வை தீர்மானிக்கிறது. எனவே அதில் கவனமாக இருங்கள்.
தலைமை பண்பு
தலைமை பண்பு என்பது சிலரை வழிநடத்திச் சென்று, உங்கள் லட்சியத்தை அடைவதல்ல.
ஒருமித்த பார்வை கொண்ட மக்களால் வழிநடத்தப்படும் அணியின் முன்னணியில் இருப்பது.
ஆட்சிமுறை
ஆட்சிமுறை என்பது, மிகுந்த சக்தி வாய்ந்தது, அதிக சவால்கள் நிறைந்தது
குறிப்பிட்ட வழிமுறைகளை மட்டுமே பின்பற்றி செயல்படுவது ஆட்சிமுறை ஆகாது; அனைத்து வித தளங்களையும் உள்ளடக்கிய சிந்தனையுடன், இரக்க மனப்பான்மையுடன் அணுகுவது.
சாதனைகள்
சிறு சிறு சாதனைகள், உங்களை மகத்தாக ஊக்குவித்து மிகப்பெரிய சாதனைகளை அடையச் செய்யும்;
எனவே சிறு சாதனைகளை கடினமாக முயன்று அடைவதன் மூலம், கிடைக்கும் அளப்பரிய சக்தியால் மிகப் பெரிய லட்சியங்களை எளிதில் அடையலாம்.
நட்பு
நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே நட்பு உருவாகிறது. நட்பின் துவக்கமும், முடிவும்
நம்பிக்கையின் தன்மையை பொறுத்தே அமைகிறது.
பொறுப்புள்ளவர்கள்
அவரவர் பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பதன் மூலமாகவே முழுமையான மனிதனாக உருவாக முடியும்;
முயற்சிகள் இல்லாதவர்கள், ” பொறுப்புள்ளவர்களாக “, இருக்க முடியாது.
கவனிக்கத் தகுந்தவர்
குறிப்பிடத்தகுந்த செயல்களை செய்பவர்கள், பிறரால் கவனிக்கப்படுகிறார்கள்;
பிறரால் கவனிக்கப்படுபவர்கள், மற்றவர்களிடம குறிப்பிடப் படுகிறார்கள்.
வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை
உலகம் உங்களுடைய உன்னதமான ஆசிரியர்; வாழ்க்கை உங்களுடைய மிகச் சிறந்த வழிகாட்டி;
இவை என்றுமே உங்களை கை விடுவதில்லை. எனவே நன்றியுடன் இருந்து, கிடைக்கும் வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்துங்கள்.
கிரிக்கெட்
அரிய விளையாட்டுகளில் ஒன்றான கிரிக்கெட், இருக்கும் வாய்ப்புகளை ஒரு சில வினாடிகளில் அலசி, சிறந்த முடிவுகளை உடனடியாக எடுக்கக் கற்றுக் கொடுக்கிறது;
முடிவு ஒருமுறைதான் – வெற்றியும், தோல்வியும் சிறந்த வீரனுக்கு ஒன்றுதான்.
கனவுகளும் – இலட்சியங்களும்
உயர்ந்த இலக்குகளை அடையக் கனவு காணுங்கள்; உங்கள் குணாதிசயங்களை சீரமைக்க அந்தக் கனவுகளை அனுமதியுங்கள்;
ஆனால், உங்கள் திறமைகளின் அடிப்படையில் கனவுகளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக