செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

இவர்தான் பெரியார்

பெரியார் ஈ.வெ.ரா பிராமணர்களை வெறுப்பவர் கிடையாது. ஆனால், பெரும்பாலான பிராமணர்கள் அவ்வாறு நினைக்கிறார்கள். அது தவறான கருத்து. பெரியார் பிராமணீயத்தைத்தான் எதிர்த்தார். அதாவது கடவுள் மற்றும் புராணங்கள், இதிகாசங்களைப் போற்றும் அந்தக் கொள்ளையைத்தான் எதிர்த்தார்
இவர் தான் பெரியார்
>>>>>>>>>>>>>>>>>>>>>>
பெரியார் ஒரு நட்புக்கடல். அவருடன் நட்புக்கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் பெரியாரைப் பாராட்டியே வந்துள்ளனர். அப்படி அவரிடம் நட்புக்கொண்டவர்களில் பிராமணர்களும் உண்டு. குறிப்பாக மூதறிஞர் ராஜாஜி அவர்கள் பெரியாருடன் நெருங்கிய நட்புக்கொண்டு பழகி வந்தார். ராஜாஜி அவர்கள் தனது இறுதிக்காலம் வரை பெரியாருடன் நட்பு பாராட்டி வந்தார்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

“அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்ல்ல் உழ்ப்பதாம் நட்பு”

என்ற குறளுக்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவர் பெரியார்.

அறசியல் வேறு; மனிதாபிமானம் வேறு. இரண்டையும் ஒன்றாக்க் கலக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் பெரியார்.

பிறர் மனம் தனிப்பட்ட முறையில் புண்பட்டுவிடக்கூடாது என்பதிலும் பெரியார் உறுதியாக இருந்தார். அதனால்தான் அவரால் ராஜாஜி அவர்களுடன் இறுதிக் காலம்வரை நட்புடன் உறவாட முடிந்தது.

ராஜாஜி அவர்கள் மறைவின்போது கண்ணீர் விட்டுத் தேம்பித் தேம்பி அழுதார் பெரியார். தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் சுடுகாடுவரை சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

அப்போது பெரியார் அவர்களால் நடக்க முடியாத சூல்நிலை. சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் பெரியார். தலைநகர் தில்லியிலிருந்து அன்றையக் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களும் ராஜாஜியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்திருந்தார். அவர் உட்காருவதற்கு இருக்கை இல்லை. உடனே சற்றும் தாமதியாது தனது உடல் துன்பத்தையும் மறந்து தான் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியில் உட்காரும்படி வேண்டினார் பெரியார்.

பெரியார் நட்புக்கடல் மட்டுமல்ல. பண்பாட்டுக் காவலரும் ஆவார்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக