அறிவாசான் பெரியாரின்
பகுத்தறிவுப் பாதை யிலே பண்பாசான் அண்ணாவின் அர வணைக்கும் தடத்தினிலே,
உழைப்பாசான் கலைஞரின் ஊக்க மூட்டும் வழியினிலே தி.மு. கழக இளைஞரணியை நாடு
வியக்க பீடு நடைபோடும் வலிவும் பொலிவுமிக்க அணியாக உயர்த்தி, வெற்றி பல
ஈட்டி, புகழ்மாலைச் சூடிட, புது வியூகம் அமைத்து புறப்பட்டு விட்டார் சமு
தாயப் போராளிகளின் தளபதி மு.க.ஸ்டாலின்.
அவர் தொட்டது துலங்கும்; கை பட்டது விளங்கும் என்பதற்குச் சான்றே திருநெல்வேலி சீமையிலே தமிழ் கூறும் நல்லுலகே வியக்கும் வண் ணம் நடத்திக் காட்டிய இளைஞரணி மாநாடு!
ஈட்டி முனையினராய் அவ்வணியினரைத் தீட்டி, எதையும் வெல்லும் வகையினிலே அப்படை யினையே நீட்டி ஈட்ட உள்ளார் பெரு வெற்றி; அதைக் கண்டு களித்து இளம் பெரியார் கலைஞரும், பேராசிரியரும் தளபதியை பாராட்டு மழையால் குளிப்பாட்ட உள் ளார்கள் நாமெல்லாம் அதைக் கண்டு கூத்தாடி மகிழ்ந் திட உள்ளோம்.
தலைவர் கலைஞரின் திருமகன் அவரென்றாலும், “தந்தையே!” என கலைஞரை அழைப் பதை விட “தலைவரே!” என்று அழைத்து நம்மிலே ஒருவராக அவரும் தொண்டராகப் பணியாற்றி மகிழ்ந்தே பழக்கப்பட்டவர் அவர்!
“உங்களிலே ஒருவன்” - என்ற தலைப்பில் அவர் தீட்டிய நீட்டோலைகள் பலவும் அவர் நம்மிலே ஒருவராகித் தொண்டாற்றுவதைத் தான் விரும்புகிறார் என்பதை மெய்ப்பிக்கும். ஆசிரியர் துணைவன் ஏட்டிலே பொன்மொழி அல்ல; இது என் மொழி என்ற தலைப்பிலே நான் எழுதிய மொழிகளில் ஒன்று - “எல்லோருக்கும் தொண்டனாயிரு; அவர்கள் உன்னை தலைவனாக்கி மகிழ்வார்கள்!” என்பதாகும். அம்மொழிக்கு இலக்கியமாய் திகழ்பவர் நம் தளபதியார்.
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் சமுதாயத்தினரின் உயர்வுக்காகவே உழைத்து வெற்றி கண்ட தலைவர் கலைஞர் எழுதிய “ஒரே ரத்தம்” - என்ற திரைப்படத்திலேதான் முதன் முதலில் தளபதி அறிமுகமானார்.
தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துகின்ற அடையாளச் சின்னங்களைத் தகர்த்தெரிவ தற்குத் தடந்தோள் தட்டுகிற இளைஞராக அப்படத்தில் அவர் நடித்தார்.
இதை எழுதும்போது ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது.
அந்த நிகழ்வு; நம் நெஞ்சை விட்டு எக்காலத்திலும் அகலாதநிகழ்வு! இளமைப் பருவத்தில், கலைஞர் அவர்கள் பாண்டிச்சேரியிலே பிரச்சார நாடகத்தை நடத்தி விட்டுத்தங்கும் இடத்திற்குத் திரும்பியபோது, குண்டர்கள் சிலரால் தாக்கப்பட்டு - நையப் புடைக்கப் பட்டு - கொலை செய்யும்நோக்கோடு அடித்து நொறுக்கப்பட்டு - கலைஞர் அடி தாங்காமல் துவண்டு மண்ணில் விழுந்தபோது - தொலைந்தான் - மடிந்தான் - தூக்கியெறியடா சாக் கடையில் எனக் கூறியவாறே காலால் சாக்கடையில் அவரைத் உதைத்து தள்ளிவிட்டுச் சென்றனர்; அங்கே கிடந்த கலைஞரை அப்பகுதியின் குடிசை வாழ் தாய் ஒருவர் ஓடி வந்து ஏனையோர் உதவியோடு தூக்கிச் சென்று - சிகிச்சையளித்து காப்பாற்றினார்; அன்று நம் தலைவர் கலைஞர் செத்துப் பிழைத்தார்!
இதே போல் பிரச்சார நாடகத்தில் நடித்துவிட்டு வீடு திரும்பிய தளபதியை எந்தத் தவறும்செய்யாததளபதியை நெருக்கடி நிலை அமலிலிருந்தக் காலத்தில் கலைஞரின் பிள்ளை யாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக Ôமிசா’ சட்டத்தின் கீழ் சிறையிலடைத்துச் சிந்திரவதைக்கு ஆளாக் கினார்கள்.
அதைத் தளபதியே கூறுகிறார்; கேளுங்கள் -
“சிறைக் காவலர்கள் இரவு நேரங்களில் அந்த இருட்டுக் கொட்டகைக்குள் வருவர்.
நீதான் மு.க.ஸ்டாலினா? கருணாநிதியின் மகனா? என்று கேட்டு காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்குவர். வசைமொழிகளும் ஏச்சும், பேச்சும், ஏளன மும், அடியும், உதையும தொடர்ந்து தொடர் கதையாக ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டே இருந்தது.
இந்தத் தாக்குதல் என் மீது தொடர்ந்து நடைபெற்ற போது ஒருநாள் அண்ணன் சிட்டிபாபு ஓடி வந்து குறுக் கிட்டார்; என் மீது விழுந்த அடியை அவர் தாங்கிக் கொண்டார்.
அவருக்கு வயிற்றில் விழுந்த அடியால் குடல் பாதிப்பு ஏற்பட்டு, நெஞ்சில் விழுந்தஅடியால் இதயமும் பாதிக்கப்பட்டு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பலனளிக்க வில்லை. 1977 ஆம்ஆண்டு ஜனவரி 5 ஆம் நாள் மரணமடைந்தார்.
இந்தச் செய்தி கேட்டு என் இதயம் வெடித்துவிடும் அளவுக்கு துயரமடைந்து விம்மி, விம்மி அழுதேன்.
ஓராண்டு காலம் தாய் தந்தை மனைவியை விட்டு சிறைப்பட்டிருந்து என்னை, தம்பீ, தம்பீ என்று அழைத்து சாப்பிட்டாயா? தூங்கினாயா? உடலுக்கு என்ன கஷ்டம்? என்று கேட்டு ஆதரவு காட்டிய அண்ணன் போய்விட்டடாரே! இது என்ன கொடுமை! என்று எண்ணி எண்ணி அழுதேன்.
அவர் இன்னும் என் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக் கிறார். அவர் அன்று அப்படி தடுத் திராவிட்டால் என் உயிரும் போயிருக்கும்! இன்று நான் மேயருமில்லை; அமெரிக்க நட்டுப் பயணமும் இல்லை”- என அவரோடு பயணித்தவர்களிடம், தளபதி நெங்சம் நெகிழ்ந்து கூற, கேட்ட அவர்களும் கண்ணீர் வடித்தனராம்!
தலைவரும் தளபதியும் தாங்கிய துன்பங்களை எழுதி மாளாது; அவ்விருவரும் தமிழ்ச் சமுதாயத்தற்கு சாதித்த சாதனைகளும் சொல்லி மாளாது.
நம் தங்கத் தளபதிக்கு, அவரின் சாதனைச் செயல்களுக்கு, சொல்லாற்றலுக்கு, ஓயா உழைப்புக்கு, தேயா கொள்கைப் பிடிப்புக்கு, அதை காக்க அவர் செய்த தியாகத்திற்கு, நிர்வாகத் திறனுக்கு, நிலையானப் புகழுக்கு ஈடாக கழகத்திலேயே தலைவர் கலைஞரை தவிர வேறு யாருமில்லை என்பது வெள்ளிடைமலை! இதை இனமானப் பேராசிரியர் அவர்களும் பல நேரங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
ஆண்டு 1991 டிசம்பர் 21, 22 நாட்களில் மதுரையில் நடைபெற்ற பவள விழா மாநாட்டில் டாக்டர் அம் பேத்கார் படத்தைத் திறந்து வைத்து, அனைவரும் மெய்சிலிர்க்கும் வகையில் அவராற்றிய உரை யினிடையே, ஒரு நிகழ்வை குறிப்பிட்டார்.
“வரலாற்றுச் சிறப்புக்குரிய டாக்டர் அம்பேத்கரை டெல்லியின் நிருபர்கள் சந்தித்துப் பேட்டி காண்பதற்கு நேரம் ஒதுக்கும்படி கேட்டனர். ஏற்கனவே இரவு 9 மணிக்கு மகாத்மா காந்தி யடிகளும், 10 மணிக்கு முகமது ஜின்னா அவர்களும் பேட்டி தர ஒத்திருப்பதாகவும் நிருபர் கள் கூறினார்கள்.
அப்படியானால் 11 மணிக்கு தான் பேட்டி தருவதாக டாக்டர் அம்பேத்கார் கூறினார்.
அதைத் தொடர்ந்து நிருபர்கள் இரவு 9 மணிக்குக் காந்தியடிகளை சந்திக்கச் சென்றபோது அவர் தூங்கிவிட்டதாகக் கூறிவிட்டார்கள். 10 மணிக்கு முகமது ஜின்னாவை சந்திக்கச் சென்றபோது அவரும் தூங்கிவிட்டார் எனக் கூறப்பட்டது.
எனவே நிருபர்கள் அவர்களைப் போலவே டாக்டர் அம்பேத்காரும் தூங்கியிருப்பார் எனக் கருதி, 11 மணிக்கு செல்லாமலிருந்து விட்டு நடு இரவில் அவர் வீதி வழியே தங்கள் இருப்பிடத்திற்குச் சென்றார்களாம். அப்போது டாக்டர் அம்பேத்கார் வீட்டு விளக்குகள் அனைத்தும் எரிந்ததைப் பார்த்து நிருபர்கள் அம்பேத்கர் வீட்டிற்குச் சென்றபோது, அவர் களை அம்பேத்கரே வரவேற்று, காந்தியையும், ஜின்னாவையும் பார்த்தீர்களா? எனக் கேட்க நிருபர்கள் நடந்த விவரத்தைக் கூறியிருகிறார்கள்.
உடனே அம்பேத்கார்,
காந்தி தூங்கியிருப்பார், ஏன் என்றால் அவரது சமுதாயம் விழித்துக் கொண்டதுதான், காரணம். அதேபோல் முகமது ஜின்னா தூங்கியிருப்பார், ஏன் என்றால் அவரது சமுதாயமும், விழித்து கொண்டது தான், காரணம், ஆனால், என் சமுதாயம் விழிப்பதற்கு வழி தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பதால், நானும் தூங்காமல் முழித்துக் கொண்டி ருக்கிறேன்.” என்று அம்பேத்கார் கூறினாராம்!! என மிக அழகாக - ஆழமாக எடுத்துரைத் தார் தளபதி!
டாக்டர் அம்பேத்கார் கூறியதைப் போல், நம் தமிழச் சமுதாயத்தினர், குறிப்பாக, தமிழ் நாட்டு இளைஞர்கள், திராவிடர் - ஆரியர் போர் இன்னமும் தொடர்கிறது என்பதை உணராமல் ஆரிய மாயையில் சிக்கி விட்ட காரணத்தாலே தலைவர் கலைஞர் தம் ஆட்சியில் செய்த - எவரும், இனி எப்போதும் செய்ய முடியாத சாதனைகளையெல்லாம் - அவற்றின் பயன்களை யெல்லாம் எண்ணிப் பார்க்காமல், ஆரியத்திற்கு ஆராதனை செய்துள்ளார்கள்!
அதனால்தான்,
பணிநியமனத் தடைச் சட்டம் கொண்டு வந்து இளைஞர்களின் 5 ஆண்டு கால வாழ்வைப் பாழாக்கிய வருக்கு மகுடாபிஷேகம் செய்துள்ளார்கள்!
அவ்வநியாய சட்டத்தை தான் ஆட்சிக்கு வந்ததுமே கலைஞர் இரத்து செய்ததோடு, அரசுப் பணியில் இளைஞர்கள் சேருவதற்குரிய வயது வரம்பை 5 ஆண்டு காலம் நீட்டித்து, 3 இளைஞர்களுக்குப் பல்வேறு அரசுத் துறைகளில் பணிவாய்ப்பளித்தார்கள்!
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்காமல் உள்ள இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையை வழங்கி அதையே மேலும் உயர்த்தித் தந்தார்கள்!
பணியில் சேரும்போது Ôதகுதித் தேர்வு’ எழுதி அதிலும் தேர்ச்சி பெற்றால்தான் பணியளிக்கப்படும் என இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது கூறியுள்ளாரே அதுபோலல்லாமல், வேலைவாய்ப் பகங்களின் பதிவு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தார்கள்!
இதுபோலவே, அளவிடற்கரிய சலுகைகளை, திட்டங்களை இளைஞர்களுக்கு மட்டுமல் லாமல் அனைதுத் தரப்பு மக்களுக்கும் வாரி வழங்கி அவர்களையெல்லாம் வளமோடும், உடல்நலமோடும் கலைஞர் வாழச் செய்ததையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் மொழி யுணர்வு, பகுத்தறிவு உணர்வு ஆகியவை கிஞ்சித்துமின்றி அதாவது விழிப்புணர் வின்றி வஞ்சகர்கட்கு வாக்களித்து விட்டார்களே என எண்ணி, இளைஞர்கள் விழிக்கும் வரை யிலே டாக்டர் அம்பேத்காரைப் போல நாம் விழித்திருப்போம்’ விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி காண்போம் என்ற நம்பிக்கையோடு கழகத் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரின் அனுதி பெற்று, இளைஞரணியை இளமைப்படுத்த, அவர்கள் செல்ல வேண்டிய பாதையைச் செம்மைப்படுத்த, அவர்கள் அறிய வேண்டிய வரலாறுகளை நினவுப்படுத்த, அடைய வேண்டிய வெற்றியை உறுதிப்படுத்த இரவு பகல் பாராமல் மாநிலம் முழுவதும் சுற்றிச் சுழன்று, உலகுக்கு ஒளியூட்டி, உணவூட்டும் சூரியனோடு போட்டிப் போட்டு வலம் வருகிறார். இளஞ்சூரியன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்!
இன்றைய ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமை யின்மையால் நாட்டிலே நிகழ்கின்ற அவலங்களை யெல்லாம் சுட்டிக் காட்டி “இவ்வாண்டு எனக்குப் பிறந்த நாள் விழாவே வேண்டாம்; முடிந்தவரை நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகளைச் செய்திடுங்கள்” என அவர் அறிவித்திருக்கிறார். எவ்வளவு விரிந்த மனது அவருக்கு என்பதை எண்ணிப் பாருங்கள்!
அத்தூயவர் மேற்கொண்டுள்ள பணி முடித்து வெற்றிக் கனி பறித்து, இளம் பெரியார் கலைஞரிடம், பேராசிரியர் முன்னிலையில் தந்து மூவாப்புகழுக்கு உரித்தாகி, தமிழ் மக்கள் நெஞ்சமெலாம் நிறைந்து, நிலைத்து, எழுச்சி நாயகர் தளபதி இனிதே வாழ்க நூறாண்டு என வாழ்த்தி மகிழ்கிறேன்.
பாவலர்
க.மீனாட்சிசுந்தரம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக