செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

நான் ரசித்த வாசித்த அம்மா கவிதைகள்

படித்ததில் எனது மனது தொட்ட அம்மா கவிதை....

அம்மா!!
உன் கருவறையில் நானிருந்து
உதைத்தது--உன்னை
நோகடிக்க அல்ல,,,
எட்டு மாதமாய் சுமக்கும்--உன்
முகம் பார்க்கவே.
பிஞ்சு வயதில் நான் அழுதது,,
பசியினால் அல்ல,,
பால் குடிக்கும் சாட்டில்--உன்
இதயத்தை முத்தமிட..
பள்ளியில் என்னை சேர்க்கும்போது--நான் அழுதது
பயத்தினால் அல்ல,,
உன் பாசத்தை பிரிகிறேனோ,,
என்ற பயத்தினால்.
இளமையில் நான் அழுதது
காதலில் கலங்கி அல்ல,,
கல்யாணம் உன்னிடத்தில் இருந்து--என்னை
பிரிக்குமோ என்ற பயத்தினால்..
நான் விமானம் ஏறும்போது அழுதது--பிரிகிறேன் என்றல்ல,,
நான் உழைத்து உன்னை
பார்க்கப்போகிறேன்--என்ற
ஆனந்தத்தில்..
இங்கு தனிமையில் அழுகிறேன்,,
உறவுகள் இல்லாமல் அல்ல
உன் தாய் அன்பு காணாமல்..
அம்மா!!!
உன் இறப்பின் பின் நான் அழுவேன்-நீ
இறந்ததால் அல்ல,,
உலகில் பாசமே இறந்ததால்..
உனக்கு முன் நான் இறந்தால்,,,
அம்மா--நீ
அழவேண்டாம்--ஏன் என்றால்
மறு ஜென்மாம் நீயே என் பிள்ளை..
 
 
 நன்றி முகனூல்  
 Nanthu Uthayan

அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.

மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.

பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .

என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.

அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?

வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?

உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?

இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.

எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.

போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.

(சேவியர் – கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து)


அன்பை
எனக்கு அறிமுகப்படுத்தி!
இன்றுவரை
அளவின்றி அளிப்பவள்
நீதானே அம்மா!

என் தேவைகளை
பூர்த்தி செய்வதற்க்காக!
உன் தேவைகளை
குறைத்துக் கொண்டவள்!
நீதானே அம்மா!

பொது நலத்திலும்!
சுயநலத்தைக் காட்டும்!
சிலரைப்போல இல்லாமல்!
சுயநலத்திலும் சிறிது
பொதுநலத்தைப் பார்ப்பவள்
நீதானே அம்மா!


சில நாட்கள்
நீ ஊரில் இல்லாவிட்டால்!
உருமாறிப்போகும் நம் வீட்டை!
என்றும் அழகுபடுத்துபவள்
நீதானே அம்மா!

உனக்கு கொடுக்காமல்
நான் எவ்வளவோ சாப்பிட்டிருந்தாலும்!
எனக்கு எடுத்து வைக்காமல்!
எதுவும் சாப்பிடாதவள்
நீதானே அம்மா!

என் உடலில் ஏற்ப்படும்
காயத்தின் வலிகளை!
உன் மனதில் உணர்பவள்
நீதானே அம்மா!

என்னதான் சண்டையிட்டாலும்
சாப்பிடும் நேரத்தில்!
சமாதானத்திற்க்கு வருபவள்
நீதானே அம்மா!

சமைக்கும்
அனைத்து உணவிலும்,
அன்பையும் கலந்து! அதன்
சுவையை அதிகரிப்பவள்
நீதானே அம்மா!

அப்பாவின் உழைப்பையும்!
வீட்டின் நிர்வாகத்தையும்!
சிக்கனத்துடன் சிறப்பாக
வழி நடத்திச் செல்பவள்!
நீதானே அம்மா!

சிறுபிள்ளைத் தனமாக
தவறுகள் செய்தால்!
பிறரைப் போல தண்டிக்காமல்!
சரியானதைச் சொல்லி கண்டித்து!
அழுது நடித்தால்!
அதையும் மன்னிப்பவள்
நீதானே அம்மா!

"ஒரு குடும்பம்
அழிந்து போவதற்கு!
யார் வேண்டுமானலும்
காரணமாக இருக்கலாம்!
நன்றாக இருப்பதற்ககு
ஒரு பெண்தான் காரணமாக இருப்பாள்"!
என்ற உலக கருத்தின்படி!
நம் குடும்பத்தின் நலத்திற்கு
அது நீதானே அம்மா!

இன்னும் பல
ஜென்மங்கள் இருக்குமென்றால்!
அதிலும் நீயே என் தாயாக
வேண்டுமென! கேட்டு! கடவுளிடம்
தொந்தரவு செய்யா மாட்டேன் அம்மா!
இந்த ஜென்மத்தில்!
நான் பெற்ற நன்மைகள்!
வரும் ஜென்மங்களில்
இன்னும் சிலருக்கு !
கிடைக்கட்டும் அம்மா  

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அன்பின் உருவமே, அம்மா, அம்மா!
அமுதச் சுரபியே, அம்மா, அம்மா!
பண்பின் வடிவமே, அம்மா, அம்மா!
படைப்புக் கடவுளே, அம்மா, அம்மா!

[அன்பின்]

இன்ப சாகரம், அம்மா, அம்மா!
இனியத் தேன்குடம், அம்மா, அம்மா!
துன்பம் பொறுப்பவள், அம்மா, அம்மா!
துயரம் களைபவள், அம்மா, அம்மா!
நன்மை செய்பவள், அம்மா, அம்மா!
நயமாய்ப் பழக்குவாள், அம்மா, அம்மா!
உண்மை உறவினள், அம்மா, அம்மா!
உயிரைக் கொடுப்பவள், அம்மா, அம்மா!                             [1]
[அன்பின்]

மென்மை  யானவள், அம்மா, அம்மா!
மேன்மை நிறைந்தவள், அம்மா, அம்மா!
வன்மைப் புரிபவள், அம்மா, அம்மா!
வறுமை  யகற்றுவாள், அம்மா, அம்மா!
பெண்மை யாண்மைக்கும் அம்மா, அம்மா!
பிள்ளைக் கென்றுமே அம்மா, அம்மா!
தண்மை யானவள், அம்மா, அம்மா!
தாய்மைக் கீடில்லை! அம்மா, அம்மா!                          [2]
[அன்பின்]

துள்ளிச் சிதறிய விதைத்த்துளியை,
அள்ளித் தனக்குள்ளே அடைத்துவைத்து,
மெல்ல நல்லதோர் உருக்கொடுத்து,
மேனி நோகவே ஈன்றெடுத்து,
கல்விக் கேள்வியில் சிறக்கவைத்து,
கள்ளத் தனங்களை மறக்கவைத்து,
வல்ல மனிதராய் வாழவைக்கும்,
வசந்த காலமே, அம்மா, அம்மா!                          [3]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக